திண்டுக்கல் மாவட்டம் மடத்துக்குளம் வட்டாரத்தில் ஒருங்கிணைந்த பண்ணையம் அமைக்கும் விவசாயிகளுக்கு மானியம் வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒருங்கிணைந்தப் பண்ணை (Integrated farm
மடத்துக்குளம் வட்டாரத்தில் ஒருங்கிணைந்த பண்ணையத் திட்டத்தின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட கிராம விவசாயிகளுக்கு மானியம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
மானாவாரி மேம்பாடு (Irrigation development)
இதுகுறித்து மடத்துக்குளம் வட்டார தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் திவ்யா கூறுகையில், தேசிய நீடித்த நிலையான வேளாண்மை இயக்கம்-மானாவாரி பகுதி மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் ஒருங்கிணைந்த பண்ணையத்திட்டம் மடத்துக்குளம் வட்டாரத்தில் செயல்படுத்தப்படுகிறது. இந்தத் திட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட கிராமங்களில் 125 ஏக்கரில் செயல்படுத்தப்படவுள்ளது.
அதாவது துங்காவி, மெட்ராத்தி கிராமங்கள் முக்கிய கிராமங்களாகவும், மைவாடி, தாந்தோணி, ஜோத்தம்பட்டி, வேடப்பட்டி, காரத்தொழுவு, பாப்பான்குளம், குமரலிங்கம், மற்றும் சங்கராமநல்லூர் பகுதி கிராமங்கள் துணைப்பகுதிகளாகவும் சேர்க்கப்பட்டு அங்குள்ள விவசாயிகளுக்கு மானியங்கள் வழங்கப்பட உள்ளது.
மானியம் (Subsidy)
இந்தத் திட்டத்தில் மேற்கண்ட கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் மட்டுமே பயன்பெற முடியும்.
தகுதிகள் எவை? (What are the qualifications?)
-
ஒரு விவசாயிக்கு குறைந்த பட்சம் 2 ஏக்கர் நிலம் இருக்க வேண்டும்.
இதில் 20 சதவீதம் ஆதிதிராவிட விவசாயிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
-
இதில் 10 விவசாயிகளுக்கு தலா 2 ஏக்கர் வீதம் 25 ஏக்கருக்கு மானியம் வழங்கப்படவுள்ளது.
-
மேலும் பெண் விவசாயிகளுக்கு 30 சதவீதம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி 15 பெண் விவசாயிகளுக்கு 37 ஏக்கருக்கு மானியம் வழங்கப்படுகிறது.
-
சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு 50 சதவீதம் ஒதுக்கீடு செய்யப்பட்டு, 25 பேருக்கு 62 ஏக்கருக்கு மானியம் வழங்கப்பட உள்ளது.
-
இந்தத் திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு மா, கொய்யா, முருங்கை உள்ளிட்ட நாற்றுக்களில் ஏதேனும் ஒன்று முழு மானியத்தில் வழங்கப்படும்.
ஊடுபயிர் (Intercropping)
இதனுடன் ஊடுபயிராக சாகுபடி செய்யும் வகையில் பயறு வகை விதைகளும், தக்காளி, மிளகாய் நாற்றுக்களும் வழங்கப்படும்.
அத்துடன் மாடு வாங்குவதற்கு ரூ 15 ஆயிரமும், ஆடு வாங்குவதற்கு ரூ.7500மும் ம் மானியமாக வழங்கப்படவுள்ளது. இந்த திட்டத்தில் பயன்பெற விரும்பும் மேற்கண்ட கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் உழவன் செயலி மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.
தேவைப்படும் ஆவணங்கள்
-
சிட்டா
-
அடங்கல்
-
ஆதார் அட்டை
-
ரேஷன் கார்டு
-
வங்கி கணக்குப் புத்தகம் ஆகியவற்றின் நகல்
-
பாஸ்போர்ட் அளவு புகைப்படம் 2
தேர்வு செய்யப்பட்ட விவசாயிகள் மேலேக் கூறிய அனைத்து ஆவணங்களைக் கொண்டு வந்து சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் படிக்க...
தரிசு நிலங்களைச் சாகுபடி நிலங்களாக மாற்ற விவசாயிகளுக்கு மானியம்!
வீடு தேடி வரும் விவசாய உபகரணங்கள்- அமேசானின் அசத்தல் ஏற்பாடு!
Share your comments