தற்போதைய சீசன் கோடை உழவுக்கு ஏற்ற தருணம் என்பதால், கோடை உழவைத் தொடங்குமாறு, விவசாயிகளுக்கு வேளாண்மை துறை ஆலோசனை வழங்கியுள்ளது.
இது தொடர்பாக, கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் வேளாண் உதவி இயக்குனர் பாக்கியலட்சுமி வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது :
ஏற்ற தருணம் (The right moment)
கோடை உழவு செய்ய, இது ஏற்ற தருணமாகும். கோடை மழையை பயன்படுத்தி, உழவு செய்வது மிகவும் அவசியமாகும்.
முதலில் வயலில் இரும்புக் கலப்பை கொண்டோ அல்லது டிராக்டர் வாயிலாக குறுக்கும், நெடுக்குமாக ஆழமாக, புழுதிபட உழவு செய்ய வேண்டும்.
பொலபொலப்புத் தன்மை (Flop)
இவ்வாறு செய்வதால், புல், பூண்டுகள் வேர் அறுபட்டு, காய்ந்து கருகி விடும். கடினத்தன்மையுள்ள மண் கட்டிகள் உடைந்து, மண் பொலபொலப்புத் தன்மை கொண்டதாக மாறுகிறது.
மேலே வரும் (Coming up)
பயிர்ப் பருவ காலங்களில், சில வகை பூச்சிகளின் புழுக்கள், மண்ணுக்குள் சென்று, கூண்டுப் புழுவாக மாறி வளர்ந்து கொண்டிருக்கும். கோடை உழவு செய்வதன் வாயிலாக, இவ்வகை கூண்டுப்புழுக்கள், மண்ணின் மேற்பரப்பிற்குக் கொண்டு வரப்படுகின்றன.
பூச்சித் தாக்குதல் குறையும் (Insect attack will decrease)
அவை, பறவைகளால் பிடித்துத் தின்னப்பட்டு, அழிக்கப்படுகின்றன. இதன் வாயிலாக, அடுத்த பயிர் சாகுபடியின்போது, பூச்சிகளின் தாக்குதல் வெகுவாகக் குறைகிறது.
களைச்செடிகள் முற்றிலும் அழிக்கப்படுகின்றன.
நீர் பிடிப்பு (Water capture)
மண்ணில் நீர் பிடிப்புத் தன்மை அதிகரிக்கிறது மழை நீர் பூமிக்குள் சென்று, மண்ணில் ஈரப்பதம் காக்கப்படுகிறது, மண்ணின் பவுதிகத் தன்மை மேம்படுகிறது.
பொலபொலப்புத் தன்மை(Flop)
-
நாற்றங்கால் மற்றும் நடவு, வயல் தயாரிப்பு, ஆகியவை மிகவும் எளிதாகிறது.
-
மண் பொலபொலப்புத் தன்மையைப் பெறுவதால், அடுத்த பருவத்தில் சாகுபடி செய்யும் பயிருக்க, இடும் உரம் சமச்சீராகக் கிடைக்கும்.
-
இதனால் பயிர் செழித்து வளர்ந்து மகசூல் அதிகரிக்கும். எனவே விவசாயிகள் கோடை உழவு செய்து பயன்பெற வேண்டும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
கோடை உழவு (Summer plowing)
-
பயிர் அறுவடையான உடன் உழவு செய்தல் வேண்டும்.
-
ஒவ்வொரு மழைக்குபின் உழவு அவசியம்.
-
நிலச்சரிவில் குறுக்கா, மணற்பாங்கான நிலத்தில் மேலாகவும் உழவும்.
-
2-3 வருடத்திற்கு ஒருமுறை சட்டிக் கலப்பை கொண்டு உழவு செய்யவேண்டும்.
கோடை உழவுவின் பயன்கள் (Benefits of summer plowing)
-
மண் மிருதுவாகி மழை நீரை ஈர்க்கும் திறன் அதிகமாகிறது.
-
மண் அரிமானம் (Soil erosion) கட்டுப்படுத்தப்பட்டு சத்துக்கள் விரையமாவது தடுக்கப்படுகிறது.
-
முதற்பயிரின் தூர்கள் மக்கி களைகள் கட்டுப்படுத்தப்படுகிறது.
-
சிகப்பு கம்பளிப்புழு அழிக்கப்படுகிறது.
மேலும் படிக்க...
அஞ்சல் துறையில் வாகன ஓட்டுநராக விருப்பமா?- தகுதி 10ம் வகுப்பு மட்டுமே!
ஒரு கப் தேநீர் 1,000 ரூபாய் - இங்கில்லை, கொல்கத்தாவில்!
நல்ல வருமானத்தோடு பணத்திற்கு பாதுகாப்பு அளிப்பது இந்தத் திட்டம் தான்!
Share your comments