மக்களுக்கு உதவ வேண்டும் என வந்தாலே, கல்வி முதல் இடத்தை வகிக்கிறது. விவசாயத் தொழிலுக்கு சிறந்த வாய்ப்பை உருவாக்க கல்வியும் சாமானியர்களின் திறமையும் ஒருங்கே வருவது போன்ற ஒரு நிகழ்வு தமிழகத்தில் காணப்படுகிறது. அந்த வகையில், விவசாயிகளுக்கு உதவ, வரும் பிப்ரவரி 1ம் தேதி முகாம் நடக்க உள்ளது. மேலும் விவரத்தை கீழே பதிவில் காணவும்.
(Anbil Dharmalingam Agricultural College and Research Institute) அன்பில் தர்மலிங்கம் வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தைச் சேர்ந்த இறுதியாண்டு மாணவர்களின் குழு தமிழ்நாட்டின் திருச்சிராப்பள்ளி விவசாயிகளுக்கு உதவ தொண்ணூறு நாள் பணியை மேற்கொண்டுள்ளது. இம்மாணவர்கள் விவசாயம் பயின்று, பயிர்கள் மற்றும் விவசாயம் பற்றிய அபார அறிவைப் பெற்றிருப்பதன் மூலம், விவசாயிகளுக்கு முகாம்களை நடத்தி அவர்களுக்கு உதவ விரும்புகிறார்கள். பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை தொகுதியில் பிப்ரவரி 1-ம் தேதி தொடங்கி 90 நாட்கள் இப்பணி நடைபெறும். இந்த பணியில், சோளம், பருத்தி, கரும்பு, வெங்காயம் போன்ற பயிர்கள் குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதை மாணவர்கள் நோக்கமாகக் கொண்டுள்ளனர்.
மாணவர்கள் தங்கள் பணியில் இதுவரை வெங்காய பயிரில் இலை முறுக்கு நோய் இருப்பதை கண்டறிந்துள்ளனர். இதற்கான தீர்வை மாணவர்கள் கண்டுபிடித்து, விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். TNIE (The New Indian Expressக்கு) அளித்த பேட்டியில், வெங்காய பயிரில் இலை முறுக்கு நோய் பற்றி விவசாயிகளுக்கு தெரியாமல் இருப்பது பற்றி மாணவர் ஒருவர் பேசினார்.
மாணவர்கள் நோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி, விவசாயிகளுக்கு உதவும் வகையில் தீர்வுகளையும் கண்டுபிடித்துள்ளனர். இப்போது, பல விவசாயிகள் தங்கள் பயிர்கள் தொடர்பான பல விஷயங்களைப் பற்றி அறிந்திருப்பதால், நிலைமை சிறப்பாக உள்ளது. இலை முறுக்கு நோயை சமாளிக்க, ஒரு சில விவசாயிகள் நாட்டு விதைகளை பயன்படுத்துகின்றனர். கலப்பின விதைகள் பயிரில் எதிர்மறையான விளைவை ஏற்படுத்தும் என்பதை அவர்கள் இப்போது அறிந்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடதக்கது. பயிர்களில் இருந்து விதைகளை மீண்டும் விதைப்பது கூட பயிருக்கு நல்லதல்ல.
வீரங்கனூர், அன்னமங்கலம், வி களத்தூர், வாலிகண்டபுரம் உள்ளிட்ட கிராமங்களில் மாணவர்கள் கூட்டாகப் பணியாற்றி வருகின்றனர். வெங்காய பயிரில் இலை முறுக்கு நோய் வாலிகண்டபுரத்தில் உள்ள வயலில் தொடங்கியதை மாணவர்கள் கண்டுபிடித்தனர். இதுமட்டுமின்றி உரங்களின் விலை நிர்ணயம் மற்றும் உண்மையான சாகுபடி முறைகள் குறித்தும் மாணவர்கள் விவசாயிகளுக்குத் தெரியப்படுத்தினர். இவ்வாறு அவர்கள் கற்ற கல்வியை, விவசாயிகளின் நன்மைக்காகவும், நாட்டின் பலனுக்காகவும் உபயோகப்படுத்த, இந்த முகாமை நடத்த திட்டமிட்டுள்ளனர்.
மேலும் படிக்க:
எல்ஐசி-இல் கேட்டால் கொடுக்கப்படும்: கிடப்பில் கிடக்கும் ரூ 21ஆயிரம் கோடி!
Poco M4 Pro 5G: ரூ. 15 ஆயிரம், பட்ஜெட்டில் 5ஜி ஸ்மார்ட்போன்!
Share your comments