1. விவசாய தகவல்கள்

''வேளாண் வல்லுநர் அமைப்பு'' வழங்கும் - பயிர்களுக்கான ''ஆப்'' தொகுப்பு!!

Daisy Rose Mary
Daisy Rose Mary
Apps

விவசாயிகளுக்கு உதவும் வகையில் நவீன தொழில்நுட்ப மேம்பாட்டிற்கு ஏற்றவாரு பல கண்டுப்பிடுப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது. 'வேளாண் வல்லுநர் அமைப்பு' என்ற மொபைல் போன் ஆப் தொகுப்பை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் விளை பயிர்கள் மற்றும் கால்நடைகளை தாக்கும் நோய்கள் குறித்த முழுத் தகவல்களை விவசாயிகள் தங்களின் மொபைல் போன் மூலம் எளிதில் அறிந்து கொள்ள முடியும். தேசிய வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தின் கீழ், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக இ-விரிவாக்க மைய விஞ்ஞானிகள், இந்த ஆப்-களை உருவாக்கியுள்ளனர்.

ஆப்-கள் செயல்படும் விதம் (How to Use Apps)

பயிர்களுக்கும், கால்நடைகளுக்கும் எதிர்பாரத சமயங்களில் பல்வேறு நோய்கள் தாக்குகின்றன. அதனை அனைத்து விவசாயிகளாலுல்ம் அறிந்துகொள்ள முடிவதில்லை. பாதிப்படைந்த பயிரையோ அல்லது கால்நடைகளையோ வேளாண் ஆய்வகத்துக்கு கொண்டு வந்து சோதனை செய்த பிறகுதான் பாதிப்புக்கான காரணத்தை அறிகின்றனர். இதனால் ஏற்படும் கால விரையத்தை தவிர்க்கும் வகையில், விவசாயிகள் தங்களது மொபைல் போன்களில் இந்த செயலியை பயன்படுத்தி என்ன பாதிப்பு என்பதை அறிந்து கொள்ள முடியும்.

இந்த மொபைல் ஆப்களில், பயிர் சாகுபடி மற்றும் கால்நடை வளர்ப்பின் போது ஏற்படக்கூடிய அனைத்து வகையான பிரச்னைகள், நோய் மற்றும் பூச்சி தாக்குதல் குறித்த அறிகுறிகளை புகைப்படங்கள் மற்றும் படக்காட்சிகளுடன் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

எடுத்துக்காட்டாக, ஒரு விவசாயி தன் வயலில் உள்ள நெல் பயிரில் நோய் தாக்குதலை பார்க்கிறார் என்றால், அந்த பயிர் சார்ந்த ஆப்-ல் நோயுடன் பொருந்தும் படத்தை சேர்ந்து அதோடு ஒப்பிட்டு பார்த்தால் அது எந்த வகையான நோய் என்பதை தெரிந்துகொள்ளலாம்.

நெல் வல்லுநர் அமைப்பு (Rice Paddy App)

நெல் நாற்றங்கால் மேலாண்மை, நெல் சாகுபடி முறைகள், நெல் ஊட்டச்சத்து மேலாண்மை, நெல் பயிர் பாதுகாப்பு, நெல் பண்ணை இயந்திரங்கள், நெல் அறுவடை பின்சார் தொழில் நுட்பங்கள், நெல் சந்தை மேலாண்மை, நெல் திட்டங்கள் மற்றும் நெல் நிறுவனங்களை உள்ளடக்கியது.

ஆப் டவுண்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்.

தென்னை மருத்துவர் அமைப்பு (Coconut tree App)

தென்னை மருத்துவர் செயலி- சாகுபடி முறைகள், பாசன மேலாண்மை, தென்னை ஊட்டச்சத்து மேலாண்மை, தென்னை பூச்சி மற்றும் நோய் மேலாண்மை, தென்னை பண்ணைக் கருவிகள், தென்னை அறுவடை மற்றும் அறுவடை பின் சார் தொழில்நுட்பம், தென்னை திட்டங்கள் மற்றும் தென்னை நிறுவனங்களை உள்ளடக்கியது.

ஆப் டவுண்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்.

ராகி வல்லுநர் அமைப்பு (Ragi App)

இந்த செயலியானது, நாற்றங்கால் நிர்வாகம், சாகுபடி முறைகள், ஊட்டச்சத்து மேலாண்மை, பயிர் பாதுகாப்பு, வேளாண் இயந்திரங்கள், அறுவடை பின்சார் தொழில்நுட்பங்கள், சந்தை படுத்துதல், நிறுவனங்கள் & திட்டங்கள் மற்றும் தொடர்புடைய இணையதளங்கள் ஆகியவற்றை அடக்கியுள்ளது.

ஆப் டவுண்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்.

வாழை மருத்துவர் அமைப்பு (Banana tree App)

இந்த செயலியானது, நீர் பாசன மேலாண்மை, ஊட்டச்சத்து மேலாண்மை, பயிர் பாதுகாப்பு‌‌‌‌‌‌‌, பண்ணை இயந்திரங்கள், அறுவடை & அறுவடைப் பின்சார் தொழில்நுட்பங்கள், வணிக மேலாண்மை, நிறுவனங்கள் மற்றும் திட்டங்கள் போன்ற அனைத்துத் தகவல்களையும் அடக்கியுள்ளது.

ஆப் டவுண்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்.

கரும்பு மருத்துவர் அமைப்பு (Sugarcan App)

இந்த செயலியானது, சாகுபடி முறைகள், செம்மை கரும்பு சாகுபடி, பாசன மேலாண்மை, ஊட்டச்சத்து மேலாண்மை, பயிர் பாதுகாப்பு, கரும்பு பயிரிடுதலில் பயன்படும் கருவிகள், அறுவடை பின்சார் தொழில்நுட்பம், சந்தைப்படுத்துதல், நிறுவனங்கள் மற்றும் திட்டங்கள் மற்றும் தொடர்புடைய இணையத்தளங்கள் ஆகியவற்றை அடக்கியுள்ளது.

ஆப் டவுண்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்.

கால்நடை வல்லுநர் அமைப்பு (Cattle App)

இந்த செயலியானது, தீவன உற்பத்தி, தீவன மேலாண்மை, இனப்பெருக்க மேலாண்மை, நோய் கட்டுப்படுத்துதலும் மேலாண்மையும், உற்பத்தித் தொழில் நுட்பங்கள், கன்றுகளின் வளர்ப்பு மேலாண்மை, பொதுவான கவனிப்பு மற்றும் மேலாண்மை முறைகள், பொதுவான மேலாண்மை முறைகள், பொதுவான மேலாண்மை முறைகள் மற்றும் பண்ணை உபகரணங்கள் ஆகியவற்றை உள்ளடக்கியது.

ஆப் டவுண்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்.

முதல் கட்டமாக நெல், வாழை, கரும்பு, தென்னை, சிறுதானியங்கள் மற்றும் பசு மாடு, ஆகிய ஆறு பிரிவுக்கு மட்டும், தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இந்த ஆப் தொகுப்பு உருவாக்கப்பட்டுள்ளது. அடுத்தடுத்து அனைத்து முக்கிய பயிர்களுக்கும் இந்த ஆப்-கள் விரிவாக்கம் செய்யப்படும் என தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

Source : தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம்

மேலும் படிக்க...

PMKSY: சொட்டு நீர்ப்பாசனம் அமைக்க விருப்பமா? 100% மானியம் தருகிறது மத்திய அரசு!

பிரதமரின் விவசாயிகள் ஓய்வுதியத் திட்டதில் சேர என்ன செய்ய வேண்டும்- வழிமுறைகள் உங்களுக்காக!

நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் வைட்டமின் - C உணவுகள்- FSSAI வழிகாட்டுதல்கள்!

English Summary: Tamil Nadu Agricultural University has launched a mobile phone apps Published on: 12 August 2020, 04:36 IST

Like this article?

Hey! I am Daisy Rose Mary. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.