முழு ஊரடங்கு காலத்தில் விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க வேளாண் துறை மற்றும் தோட்டக்கலை துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
கொரோனா பரவல் காரணமாகத் தமிழகத்தில் முழு ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. இந்த காலகட்டங்களில் காய்கறி கடைகள், பழக்கடைகள், மளிகை கடைகள் உள்ளிட்டவை இயங்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், விவசாயிகள் விளைவித்த விளைப்பொருட்களைத் தங்கு தடையின்றி மக்களுக்கு விநியோகம் செய்யத் தோட்டக்கலைத் துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதற்கான உதவி எண்களையும் மாவட்ட வாரியாக தோட்டக்கலை மற்றும் வேளாண் துறையினர் அறிவித்துவருகின்றனர்.
காய்கறிகள், பழங்கள் தடையின்றி விற்பனை
இது குறித்து காஞ்சீபுரம் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, காஞ்சீபுரம் மாவட்டத்தில் கொரோனா ஊரடங்கு காலத்தில் விவசாயிகள் சாகுபடி செய்துள்ள காய்கறிகள், பழங்கள் தடையின்றி நுகர்வோர்களுக்கு விற்பனை செய்ய உழவர் உற்பத்தியாளர் குழுக்கள் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்த காய்கறி மற்றும் பழங்களை நேரடியாக விற்பனை செய்ய நகர்ப்புறங்களுக்குச் செல்வதற்கான அனுமதிச் சீட்டு அந்தந்த வட்டார வேளாண்மை உதவி இயக்குநர்/ தோட்டக்கலை உதவி இயக்குநர்கள் மூலம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் விவசாயிகள் இதுகுறித்த சந்தேகங்களுக்குப் பஞ்சு பேட்டையில் செயல்பட்டு வரும் ஒருங்கிணைந்த விவசாயிகள் உதவி மையம் தோட்டக்கலை துணை இயக்குநர் அலுவலகத்தை 044- 27222545 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், நிலக்கோட்டையில் விளைநிலங்களுக்கே சென்று மல்லிகைப் பூக்களை வியாபாரிகள் நேரடியாகக் கொள்முதல் செய்யும் செய்து வருகின்றனர்.
பூக்கள் விற்பனை அமோகம்
நிலக்கோட்டை மல்லிகைப் பூக்களின் சீசன் நேரத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் விளைந்த பூக்களை விற்பனைக்குக் கொண்டுசெல்லமுடியாத நிலை ஏற்பட்டது.
இந்நிலையில், விவசாயிகளின் இழப்பைத் தவிர்க்க தோட்டக்கலைத்துறை மூலம் பூக்களை நேரடியாக அவர்களின் விளைநிலங்களுக்கே சென்று கொள்முதல் செய்ய வியாபாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதன் அடிப்படையில், வியாபாரிகள் விளைநிலங்களுக்கு நேரடியாகச் சென்று மல்லிகைப் பூக்களைக் கொள்முதல் செய்துவருகின்றனர்.
சிறு குறு விவசாயிகள் 500க்கும் மேற்பட்டோரிடம் நாள் ஒன்றுக்கு 2,000 கிலோ பூக்கள் வரை பூ வியாபாரிகள் கொள்முதல் செய்து வாசனைத் திரவிய தொழிற்சாலை மற்றும் வெளி மாநிலங்களுக்கு அனுப்பிவருகின்றனர் இதனால் பூ வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மேலும் படிக்க....
விவசாயிகளுக்கு உதவ விவசாயிகள் உதவி மையம் - வேளாண் துறை!!
காய்கறிகளை விற்பனை செய்ய மானிய விலையில் விவசாயிகளுக்கு தள்ளுவண்டி - வேளாண் துறை!
வேளாண் விளைப்பொருட்களை விற்பனை செய்ய பிரச்சனை இருந்தால் தோட்டக்கலைத்துறையை அணுகலாம்!!
Share your comments