1. விவசாய தகவல்கள்

பாரம்பரிய நெல் வகைகளை சேகரித்த பெண்ணுக்கு விருது!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
Tamil Nadu government gives award to woman who collected traditional rice varieties!

பாரம்பரிய நெல் வகைகளை சேகரிப்பு செய்த பெண்ணுக்கு தமிழக அரசு விருது அறிவித்துள்ளது. பாரம்பரிய நெல்லை அடுத்தத் தலைமுறைக்குக் கொண்டுசெல்லும் முயற்சிக்கு கிடைத்த வெற்றியாக இந்த விருது பார்க்கப்படுகிறது.

தமிழகத்தில் நம்மாழ்வார் வழியை பின்பற்றி பாரம்பரிய நெல் வகைகளை மீட்டெடுத்த நெல் ஜெயராமன் மீட்டெடுப்புகளை தமிழக அரசு அங்கீகரித்தது. அவரது மறைவுக்குப் பின் தற்போது சிவரஞ்சனி, சரவணகுமார் தம்பதியர் அந்தப் பணியைத் தொடர்ந்தனர். இந்த தம்பதியினர், நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தைச் சேர்ந்தவர்கள்.

1525 வகை நெல் ரகங்கள்

நாட்டின் பல மாநிலங்களுக்கு சென்று மருத்துவ குணம் கொண்ட பாரம்பரிய 1525 வகையான நெல் ரகங்களை மீட்டெடுத்துள்ளனர். அதனை தனக்கு சொந்தமான ஒன்றரை ஏக்கர் விளை நிலத்தில் பாத்திகள் அமைத்து அவற்றை அடையாளப்படுத்தி ஒவ்வொரு பாத்தியிலும் ஒவ்வொரு வகையான நெல்மணிகளை விதைத்து அதனை அறுவடை செய்து பாதுகாத்து வருகிறார்கள்.

சேகரிப்பு

1125 வகையான நெல்மணிகளை ஆவணப்படுத்தும் நோக்கோடு ஒவ்வொரு வகை நெல் கதிர்களை அறுவடை செய்து அடையாள குறியின் அடிப்படையில் ரகங்களுக்கான பெயரை உறுதிப்படுத்தி தனித்தனியே பதப்படுத்தி வைத்துள்ளார்கள். பதப்படுத்தப்பட்ட நெல்மணிகளை தனித்தனி கண்ணாடி குடுவைகளில் அடைக்கப்படு அதனை காட்சிப்படுத்தி வைத்துள்ளார்.

சேவை மனப்பாங்கு

இப்பணியை லாபநோக்கமின்றி சேவை மனப்பாண்மையில் அர்ப்பணிப்பு உணர்வோடு மேற்கொண்டிருக்கிறார்கள். இவர்களது மீட்டெடுப்புகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் மாநில அரசு தமிழ்நாடு முதலமைச்சர் மாநில இளைஞர் விருது 2022 அறிவித்து உள்ளது. இந்த விருதினை நாளை சுதந்திர தின விழாவில் தமிழக முதல்வர் ஸ்டாலின் வழங்குகிறார்.

அரசின் விருதுக்கு தேர்வு

தமிழக அரசு பாரம்பரிய நெல் கண்டுபிடிப்புகளை மேற்கொள்ளும் சிவரஞ்சனி சரவணகுமாரின் செயலை பாராட்டி விருது வழங்கி உள்ளது. விருது பெற்ற சிவரஞ்சனியை ஏரளமான விவசாயிகள், பொதுமக்கள், சேவை சங்கங்கள், அனைத்து கட்சி அரசியல் பிரமுகர்கள் வாழ்த்தி வருகின்றனர்.

மேலும் படிக்க...

நீலகிரியில் பூத்துக்குலுங்கும் பச்சை ரோஜாக்கள்!!

பிரஷர் அதிகமானால் ஒரு கப் தயிர் போதும்!

English Summary: Tamil Nadu government gives award to woman who collected traditional rice varieties! Published on: 14 August 2022, 07:27 IST

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.