விவசாயிகளுக்கு உதவும் வகையில், வேளாண் சார்ந்த தகவல்கள் மற்றும் அறிவுரைகள் வழங்குவதற்காக உழவன் செயலியை தமிழக அரசு அறிமுகம் செய்துள்ளது. கடந்தாண்டு அறிமுகம் செய்யப்பட்டது எனினும் வெகு சிலரே பயன்படுத்துகின்றனர். விவசாயிகள் அனைவரும் இந்த செயலியை முழுமையா பயன்படுத்தி பயன்பெறுமாறு அறிவுறுத்தப் பட்டுள்ளனர்.
உழவன் செயலி
- வேளாண் துறை சார்பில் விவசாயிகளுக்கு தேவைப்படும் அனைத்து தகவல்களையும், உடனுக்குடன் வழங்கப்படுகிறது.
- வேளாண் துறை மூலம் செயல்படுத்தப்படும் மாவட்ட வாரியாக, வட்டார வாரியாக பல்வேறு விவசாய நல திட்டங்களின் விவரங்கள், மானியங்கள், விதை மற்றும் உரங்களின் இருப்பு, விளைபொருள் விற்பனை சந்தை நிலவரம், காப்பீடு, வானிலை போன்ற தகவல்களை தெரிந்து கொள்ள இயலும்.
- உழவன் செயலி மூலம், பயிர்களில் தோன்றும் பூச்சி தாக்குதல், நோய் அறிகுறி போன்றவற்றை தங்களின் செல்போனில் பதிவேற்றம் செய்து, அதற்கான ஆலோசனை பெறும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
- உழவன் செயலியில் உள்ள பண்ணை வழி காட்டி மூலம் பாதிக்கப்பட்ட பயிரின் புகைப்படங்களை பதிவேற்றம் செய்து, செல்போன் மூலமாகவே அதற்கான பரிந்துரைகளை பெற்று உடனுக்குடன் தீர்வு காண இயலும். இதன் மூலம் விவசாயிகள் தங்கள் பயிர்களை பாதுகாத்து பயன் பெற முடியும்.
விவசாயிகளுக்கு உழவன் செயலி ஒரு உற்ற நண்பனாக கிடைத்துள்ளது. இதன் மூலம் அனைத்து விவசாயிகளும் தங்களது இருப்பிடத்திலிருந்தே வேளாண் சார்ந்த எல்லா தகவல்களையும் பெற்று பயன்பெறலாம்.
Share your comments