வாழை மரங்களை தார் வெட்டிய பின் அப்படியே விடுவதும் வெட்டி வாய்க்காலில் வீசுவதும் பருத்தி, கம்பு, மக்காச்சோள பயிர்களை அறுவடை (Harvest) செய்த பின் தீவைப்பதும் தவறு. அரையடி மண் உருவாக ஆயிரம் ஆண்டுகளாகிறது. அத்தகைய உயிர்ச்சத்துள்ள மண்ணுக்கு தீ வைப்பது கொள்ளிக்கட்டையால் நம் தலையை சொறிவதற்கு சமம்.
தீ வைத்தல் (Fire)
தீ வைப்பதால் நன்மை செய்யும் உயிரினங்கள் முற்றிலும் அழிந்து மண் மலடாகிறது. உரத்தை கிரகிக்கும் சக்தியை மண் இழந்து விடுகிறது. இட்ட உரம் பயிருக்கு கிடைக்காத சூழலும் ஏற்படும். அடுத்த பயிர் வளர்வதும் சரியாகாது. சத்து குறைந்த சூழலில் மண்ணில் சத்து சேர்ப்பதும் கடினம்.
தொடர் சாகுபடிக்கு (Continuous Cultivation)
பயிர்க் கழிவுகளை முறையாக அகற்றாமல் அங்கேயே நீண்ட நாட்கள் விட்டு வைத்தால் அதில் சாறு உறிஞ்சும் பூச்சிகள் வாழ ஆரம்பிக்கும். குறிப்பாக பருத்தி பயிரை (Cotton Crops) நீண்ட நாட்கள் வைத்தால் சாறு உறிஞ்சும் பூச்சிகள் குடியிருந்து அருகிலுள்ள பயிர்களை தாக்க ஆரம்பிக்கும்.
தோட்டத்திலேயே அடுக்கி வைத்த பருத்தி மாரில் எலிகள் குடியிருந்து இதர பயிர்களை தாக்கும். தொடர் சாகுபடிக்கு (Continuous Cultivation) திட்டம் தீட்டி அடுத்த பயிர் விதைகளை முதல் பயிர் இருக்கும் போதே விதைப்பதும், அடுத்து நடுவதற்கு நாற்று விடுவதும் நாற்று வாங்கி நடவுக்கு திட்டமிடுவதும் விவசாயிகளின் வரவை இருமடங்காக்கும்.
வரிசை விதைப்பு உத்தியும் இயந்திர நடவு மூலமும் எள் போன்ற பயிர்களை நாற்று விட்டு 15 நாட்களுக்குள் நடவு செய்வதும் நல்ல வழி.
இளங்கோவன்
துணை இயக்குனர்
பாசன நீர் மேலாண்மை பயிற்சி பள்ளி,
திருச்சி
98420 07125
மேலும் படிக்க
நிலக்கடலையில் பூச்சித் தாக்குதலைத் தடுக்க ஊடுபயிர் அவசியம்!
வடிகால் வசதியின்மையால் மழையில் மூழ்கிய பயிர்கள்: விழிக்குமா அரசு!
Share your comments