ஒடிசா மாநிலத்தில் டிலியா போலா வகை மீன்கள், மீனவர் வலையில் சிக்கியதால் அவர் ஒரே நாளில் 2.8கோடி ரூபாய்க்கு அதிபதியாகியுள்ளார். உண்மையைச் சொல்லப் போனால் ஒரே இரவில், கனவில் கூட நினைத்துப்பார்க்காத அளவில், பணக்காரமாக மாறியுள்ளார். ஏனெனில் 2.8 கோடி ரூபாய்க்கு அந்த ஒரு மீன் ஏலம் போனது.
அசைவப் ப்ரியர்களைப் பொருத்தவரை, சிக்கன், மட்டன், மீன் என பல்வேறு வகைகள் இருந்தாலும், உணவில் தவறாது சேர்த்துக்கொள்ளுங்கள் என மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படும் இறைச்சி வகைகளில் ஒன்று மீன். ஏனெனில் மீன் உணவு, உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் தேவையான ஒன்று. அதனால்தான் இறைச்சிப் ப்ரியர்கள், அதிக விலை கொடுத்தேனும், மீனை வாங்கிச் சாப்பிடுகின்றனர். அதிலும் மருத்துவக்குணம் நிறைந்த மீன்களுக்கு என்ன விலை கொடுக்கவும் நிறுவனங்கள் வரிசை கட்டிக்கொண்டு நிற்கின்றன.
இந்நிலையில், ஒடிசா மாநிலம் திக்கா பகுதியில் உள்ள மீனவர் ஒருவரின் மீன் வலையில் 121 டிலியா போலா வகை மீன் சிக்கியது. இதன் மதிப்பு ரூ2.8 கோடியாகும். ஒரு மீன் சராசரியாக 18 கிலோ எடை கொண்டது. ஒரு கிலோ மீன் ரூ13 ஆயிரத்திற்கு விலை போனது.
கடந்தாண்டு இந்த டிலியா ரக மீன் ஓடிசா ராஜ் நகர் பகுதியை சேர்ந்த மீனவர் ஒருவர் வலையில் சிக்கியது. அப்பொழுது கிலோ ரூ10 ஆயிரத்திற்கு விற்பனையானது. இந்த டிலியா ரக மீனை அப்பகுதி மக்கள் மயூரி மீன் என அழைக்கிறார்கள். இந்த மீன் பிடிபட்ட விபரம் தெரிந்ததும் அப்பகுதி மக்கள் ஏராளமானோர் அந்த வீடியோவை பார்க்க கூடினர்.
ஏன் அதிகவிலை
இந்த மீன் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதற்கு முக்கியமான காரணம் ஒன்று இருக்கிறது. இந்த மீனின் வயற்றில் உள்ள சில பொருட்கள் மருத்துவ குணம் நிறைந்ததாம். அதை வாங்க தனியார் மருந்து நிறுவனங்கள் போட்டிபோட்டுக்கொண்டு வருவதுடன், என்ன விலையும் கொடுக்கின்றனர். அதனால் தான் இந்த மீனிற்கு இவ்வளவு மவுசு இருக்கிறது.
மேலும் படிக்க...
தடுப்பூசி போடாத நோயாளி-அறுவை சிகிச்சை செய்ய மறுத்த மருத்துவமனை!
குழந்தைகளுக்கு ரூ.3 லட்சம் உதவித்தொகை- மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!
Share your comments