தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 3 மணி நேரத்திற்கு கனமழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
18 மாவட்டங்கள் (18 districts)
அதிலும் குறிப்பாகத் தமிழகத்தைப் பொறுத்தவரை, மொத்தம் 18 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம்தெரிவித்துள்ளது.
அடுத்தடுத்து உருவான காற்றழுத்தத் தாழ்வு காரணமாக அதி கனமழைக் கொட்டித் தீர்த்தது. இதனால் சென்னை மற்றும் அதன் புறநகர் மாவட்டங்களில் நீர்நிலைகள் நிரம்பியதால், தாழ்வானப் பகுதிகள் தீவுபோல மாறின. மக்களின் இயல்புவாழ்க்கை பெரிதும் பாதிக்ககப்பட்டது.
புதியக் காற்றழுத்தத் தாழ்வு (New barometric pressure)
இந்நிலையில் தெற்கு வங்க கடற்பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறக்கூடும். இது மேலும் மேற்கு வடமேற்கு திசையில் வரும் நாட்களில் தமிழக கரையை நோக்கி நகரக்கூடும். இதன் காரணமாக தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று தெரிவித்திருந்தது.
இதற்கிடையே, சென்னை, செங்கல்பட்டு, டெல்டா மற்றும் தென்மாவட்டங்கள் உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று அதிகாலை முதல் மழை பெய்து வருகிறது.
3 மணி நேரத்திற்கு (Next 3 hours)
இதையடுத்து தமிழகத்தில் அதிகாலை முதல் பெய்து வரும் மழை அடுத்த 3 மணி நேரத்திற்கு தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
எந்தெந்த மாவட்டங்கள்?
அதன்படி, சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், ராமநாதபுரம், தூத்துக்குடி, நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சாவூர், பெரம்பலூர், அரியலூர், நாமக்கல், புதுக்கோட்டை, கன்னியாகுமரி, நெல்லை, ஆகிய 18 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
புதுவையிலும்
இதேபோல், புதுச்சேரி மற்றும் காரைக்கால் மாவட்டத்திலும் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை பெய்யும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க...
4 நாட்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை!
உருவாகிறது 4-வது புயல் சின்னம் - தென் மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!
Share your comments