கொரோனா ஊரடங்கு காலத்தில் வேளாண் இடுபொருட்கள் (Agri Inputs) தடையின்றி கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக செங்கல்பட்டு மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் சுரேஷ் தெரிவித்துள்ளார்.
மானிய விலை
செங்கல்பட்டு மாவட்டத்தில் நடப்பு சொர்ணாவரி பட்டத்தில் தோராயமாக 10 ஆயிரம் ஏக்கர் நெல் சாகுபடி (Paddy Cultivation) செய்யப்பட்டுள்ளது. வேளாண் இடு பொருட்களான விதை நெல், பயிர் விதைகள் மற்றும் உயிர் உரங்கள் போதுமான அளவு வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. விவசாய பொருட்கள் தங்களுக்கு தேவையான புதிய ரக நெல் விதைகள் மற்றும் உயிர் உரங்கள் நுண்ணூட்ட கலவை அந்தந்த வேளாண்மை விரிவாக்க மையங்களில் மானிய விலையில் பெற்று கொள்ளலாம்.
இருப்பு விவரம்
எஸ்.ஆர்.ஐ, முறையில் நெல் நடவு செய்து விவசாயிகள் இரட்டிப்பு மகசூல் (Yield) பெற கேட்டு கொள்ளப்படுகிறது. மாவட்டத்தில் தனியார் மற்றும் கூட்டுறவு விற்பனை மையங்களிலும் போதுமான அளவு விதைநெல் உரம் இருப்பு வைக்கப்பட்டுள்ளது அனைத்து அரசு வேளாண்மை விரிவாக்க மையங்களில் காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரையும், தனியார் விற்பனை மையங்களில் காலை 6 மணி முதல் 10 மணி வரையிலும் விற்பனை நடைபெறும். தனியார் விற்பனை நிலையங்களில் இருப்பு விவரம் அடங்கிய தகவல் பலகைகள் வைக்கவும் தகுந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கடுமையான நடவடிக்கை
டி.ஏ.பி. உரம் மூட்டை ரூ. 1600 வீதம் விற்பனை செய்யவும், கூடுதல் விலைக்கு விற்பனை செய்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது விவசாயிகள் தங்கள் சாகுபடி தொடர்பான அனைத்து தகவல்களையும் கீழ்கண்டவாறு தங்கள் வட்டார உதவி இயக்குனர்களின் தொலைபேசி எண்கள் வாட்ஸ்அப் (Whatsapp) மூலம் தெரிந்து கொண்டு தகுந்த சேவைகளை பெற்றுக்கொள்ளுமாறு அதில் கூறப்பட்டிருந்தது.
காட்டாங்கொளத்தூர்-9363202221.
சிட்லபாக்கம்-9363202221,
திருப்போரூர்-9363202221,
திருக்கழுக்குன்றம்-8925629457,
மதுராந்தகம்-9894781887,
அச்சரப்பாக்கம்-8940905083,
பவுஞ்சூர்-9952916247,
சித்தாமூர்-8056198593.
மேலும் படிக்க
கொரோனா ஊரடங்கால் டன் கணக்கில் வீணாகிறது முல்லைப் பூக்கள்!
தென்னை விவசாயத்தைச் சேர்ந்த 10,000 பேர் வேலையிழப்பு!
Share your comments