தோட்டக்கலைத் துறையில் மானியத்தில் வழங்கப்படும் திசுவாழைக் கன்றுகளைப் பெற்று விவசாயிகள் பயன்பெறலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
பயிரிடும் பரப்பை அதிகரிக்க (To increase the cultivation area)
தோட்டக்கலைப் பயிா்களின் பரப்பளவை அதிகரிக்கும் வகையில் தேசிய தோட்டக்கலை இயக்கம், தேசிய வேளாண் வளா்ச்சி திட்டம், ஒருங்கிணைந்த தோட்டக்கலை சாகுபடி திட்டம், பிரதம மந்திரி நுண்ணீா் பாசன திட்டம் உள்பட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
இதில் ஒவ்வொரு திட்டத்தின் கீழும் விவசாயிகளுக்கு மானிய விலையில் இடுபொருள்கள், விதைகள், நாற்றுகள் உள்ளிட்டவை வழங்கப்பட்டு வருகின்றன.
திசு வாழைக்கன்று (Tissue banana seedling)
இந்நிலையில் மாநிலத் திட்டத்தின் கீழ் மானிய விலையில் திசுவாழைக் கன்றுகள் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதில் நடப்பாண்டு கோவை மாவட்டத்துக்கு 75 ஹெக்டேருக்கு மானியம் வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.
திசு வாழை சாகுபடி செய்ய விரும்பும் விவசாயிகள் வட்டார தோட்டக்கலைத் துறை அலுவலகத்தை தொடா்புகொள்ளலாம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
ரூ.37,500 மானியத்தில்
இது தொடா்பாகத் தோட்டக்கலைத் துறை துணை இயக்குநா் எம்.புவனேஸ்வரி கூறியதாவது:
கோவை மாவட்டத்தில் மானிய திட்டத்தின் கீழ் திசுவாழை கன்றுகள் வழங்கப்படுகின்றன. இதில் ஒரு ஹெக்டேருக்குத் தேவையான வாழை கன்றுகள் ரூ.37,500 மானியத்தில் வழங்கப்படுகிறது.
முன்பதிவு- முன்னுரிமை (Booking- Priority)
நேந்திரன், ஜி.9 என இரண்டு ரகங்கள் வழங்கப்படுகிறது. ஒரு விவசாயிக்கு அதிகபட்சமாக ஒரு ஹெக்டேருக்கு மானியம் வழங்கப்படுகிறது. முன்பதிவு செய்துள்ள விவசாயிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் மானியம் வழங்கப்படும்.
எனவே விவசாயிகள் அந்தந்த வட்டார தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநா் அலுவலகத்தை தொடா்புகொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் படிக்க...
Share your comments