தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தால் (TNAU) இந்த வருடம் வெளியிடப்பட்ட இரகங்கள் மற்றும் ஒட்டு இரகங்களைப் பிரபலப்படுத்தும் வகையில் 4 நாள் காணொளிக் கண்காட்சி நடைபெற்றது
19 இரகங்கள் மற்றும் 8 - கலப்பினங்கள்
நெல் - 5 இரகங்கள் முறையே, DT 53, கோ- 51, கோ - 53, அண்ணா 4, டி. பியாஸ் -5. MDU - 6, நெல் கலப்பினம் கோ ஆர்ஹெச் - 3, மக்காச்சோளம் கலப்பினம் முறையே - கோ 6, கோ (க)M8, கோ (க) 9, கம்பு கலப்பினம் - கோ 9, சோள ரகம் - கோ 32 பலமுறை அறுவடை தீவன சோளம் CSV 33 MF, பல்லாண்டு தீவன சோள இரகம் - கோ 31, தீவனத் தட்டைப்பயறு - கோ 9, தீவன வேலியசால் இரகம் - கோ 2, பனிவரகு ரகம் - ATL 1, சாமை இரகம் -ATL 1 தினை ரகம் ATL 1, தட்டைப்பயறு இரகம் - கோ CP. சூரிய காந்தி கலப்பினம் கோ க3, ஆமணக்கு இரகம் - YRCH1, வெங்காய இரகம் - கோ6, புடலை கலப்பினம் - கோ க1, பருத்தி இரகம் - கோ 17 ஆகியவற்றின் சிறப்பியல்புகள் காட்சிப்படுத்தப்பட்டன.
இந்தக் காணொளிக் கண்காட்சி கடந்த 19ம் தேதி முதல் 22ம் தேதி வரை இணையதளம் வழியாக நடத்தப்பட்டது. இவை பற்றி மேலும் தெரிந்துகொள்ள https://tnau.ac.in/vsew என்ற இணைப்பில் காணலாம்.
இதைத்தொடர்ந்து இணையவழிக்கருத்தரங்கம் நடைபெற்றது. வணிக மேம்பாட்டு இயக்குனர் முனைவர் சே.நேரியக்குமார் வரவேற்புரை ஆற்றினார்.
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத் துணை வேந்தர் முனைவர் நீ. குமார் தொடக்க உரை ஆற்றி கருத்தரங்கிற்கு தலைமைத் தாங்கினார். இதில் 67 தனியார் விதை நிறுவன நிர்வாகிகள் மற்றும் 47 வேளாண் பல்கலைக்கழக வல்லுநர்கள் இணையதளம் வாயிலாகக் கலந்து கொண்டனர்.
மேலும் படிக்க...
விவசாயிகளே வந்துவிட்டது எலக்ட்ரிக் டிராக்டர்- விலை ரூ.5.99 லட்சம்தான் !
வறுமையை ஒழித்துக் கிராமங்களை வளமாக்கும் MGNREGA!!
மத்திய அரசு வழங்கும் சூரிய மித்ரா பயிற்சி-தங்குமிடம், உணவு இலவசம்!
Share your comments