1. விவசாய தகவல்கள்

இலவசம்-பிரியாணிக்குத் தக்காளி- தக்காளிக்கு பிரியாணி!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
Tomatoes are free for biryani - details inside!
Credit : Dailythanthi

தக்காளி விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளதைக் கருத்தில்கொண்டு, இரண்டு பிரியாணி வாங்கினால் அரைக்கிலோ தக்காளி இலவசம் என வெளியிடப்பட்டுள்ள அறிவிப்புக்கு அமோக வரவேற்புக் கிடைத்துள்ளது.

வியாபார யுக்தி (Business Tactics)

எந்த நேரத்தில் எந்தப் பொருளுக்கு அதிகளவில் கிராக்கி இருக்கிறதோ, அதனை அதிகமாக விற்பனை செய்வது ஒரு யுக்தி. அதேநேரத்தில், வியாபாரம் மந்தமாக இருக்கும் காலங்களில், சில ஆஃபர்களை அறிவித்து வியாபாரத்தை சூடு பிடிக்கச் செய்வது விபாயாரிகளின் வாடிக்கை.

அதேநேரத்தில் எந்தப் பொருளின் விலை வாடிக்கையாளர்களுக்கு சுமையாக உள்ளதோ, அதைக் காட்டியும் விற்பனை செய்ய முடியும் என்பதை இந்த பிரியாணிக்கடை உரிமையாளர் நிரூபித்துள்ளார்.

தக்காளி இலவசம் (Tomatoes are free)

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் உள்ள ஆம்புர் பிரியாணி கடை உரிமையாளர், இரண்டு பிரியாணி வாங்கினால் அரை கிலோ தக்காளி இலவசமாக வழங்கப்படுமென அறிவித்துள்ளார்.

பிரியாணி இலவசம்

இதேபோல், தக்காளியை வழங்கும் வாடிக்கையாளர்களுக்கு பிரியாணி இலவசமாக வழங்கப்பட்டது. நேற்று ஒருநாள் மட்டும் இந்த சலுகை அமல்படுத்தப்பட்டது.

அமோக வரவேற்பு

இதையடுத்து வழக்கத்தைவிட பல மடங்கு பிரியாணி விற்பனையானது. மக்கள் கூட்டம் அதிகளவில் கூடியது. இதன் மூலம் பிரியாணியை (Biriyani) மார்க்கெட்டிங் செய்ய, தக்காளி விலையேற்றத்தைத் தங்களுக்கு சாதகமாக்கிக்கொண்ட இந்த கடைக்காரரின் முயற்சிக்கு வாடிக்கையாளர்களிடையே அமோக வரவேற்புக் கிடைத்துள்ளது.

தாறுமாறாக விலை (Occasionally priced)

மழை வெளுத்து வாங்குவதால் தக்காளி விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது. இதனால், அதிர்ச்சியில் இருக்கும் மக்கள், தக்காளி இல்லாமல் குழப்பு வைப்பது எப்படி? என கூகுளில் தேடி வருகின்றனர்.

கூகுள் கீ வேர்டு லிஸ்டில், தக்காளி இல்லாமல் குழம்பு வைப்பது எப்படி? என்பது முதன்மையான இடத்தைப் பிடித்துள்ளது. அந்தளவுக்கு தக்காளி விலை மக்களைக் கிறுகிறுக்க வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க...

பண்ணை பசுமைக் கடைகளில் தக்காளி விற்பனை செய்யப்படும் என தமிழக அரசு அறிவிப்பு!

தொடர் மழை எதிரொலி: தக்காளி விலை உயர்ந்தது!

English Summary: Tomatoes are free for biryani - details inside! Published on: 24 November 2021, 07:41 IST

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.