1. விவசாய தகவல்கள்

பயிர் செழிப்பிற்கு புத்துயிர்ப் பெறும், பாரம்பரிய ஏர்க் கலப்பை உழவு முறை!

KJ Staff
KJ Staff
Traditional farming
Credit : Dinamalar

விளைநிலங்களின் நீர்ப்பிடிப்பு திறனை அதிகரிக்க, பாரம்பரிய முறைப்படி, உடுமலை பகுதி, கிராமங்களில், ஏர் கலப்பையில், உழவு செய்வதை பின்பற்றி வருகின்றனர். வேளாண் நிலங்களில், அனைத்து வகை சாகுபடிக்கும் (Cultivation) ஆதாரமாக அமைவது, மண் வளம் ஆகும். அணை மற்றும் கிணற்றுப்பாசன சாகுபடி (Well Irrigation Cultivation) அதிகரிக்கும் முன்பு, பருவமழையை அடிப்படையாகக்கொண்டு, பல்வேறு விவசாய சாகுபடி பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது. அப்போது, நிலத்தை உழவு செய்ய, ஏர் கலப்பை முறையே அதிகளவு பின்பற்றப்பட்டு வந்தது. இதற்காக, பெரும்பாலான வீடுகளில், காளைகள் பராமரிக்கப்பட்டு; அவற்றின் சாணம் (Dung), தொழு உரமாக பயன்பட்டு வந்தது.

மீண்டும் ஏர்க் கலப்பை:

டிராக்டர் பயன்பாடு அதிகரித்த பிறகு, ஏர் கலப்பை உழவு முறைகள், கைவிடப்பட்டு, நாட்டு காளைகள் வளர்ப்பும் குறைந்தது. தற்போது, இயற்கை வேளாண்மை குறித்த, விழிப்புணர்வு (Awareness) அதிகரித்துள்ள நிலையில், நாட்டு மாடு, காளைகளை பராமரிக்க, ஆர்வம் அதிகரித்துள்ளது. உழவுப்பணிகளுக்கும், ரேக்ளா போட்டிகளுக்காகவும், நாட்டு ரக காளைகள் அதிகளவு வளர்த்து வருகின்றனர். அதே போல், செம்மண் மானாவாரி நிலங்களில், ஏர் உழவு முறை மீண்டும் பின்பற்றப்படுகிறது. வடகிழக்கு பருவமழைக்குப் (North-east Monsoon) பிறகு, பரவலாக தற்போது, விளைநிலங்களில், உழவுப்பணிகள் தீவிரமடைந்துள்ளது.

மானாவாரி நிலங்களில், ஏர் கலப்பையை கொண்டு உழுவதால், அதிக ஆழம் வரை, மண்ணில், 'சால்' உருவாகும். இதனால், மழைக்காலத்தில், அதிகளவு நீர் பிடிப்பு திறன் (Moisture) விளைநிலத்துக்கு கிடைக்கும்; சாகுபடியும் செழிக்கும். சோளம் (Maize) உட்பட தானியங்கள் விதைப்புக்கு, ஏர் கலப்பை முறையே சிறந்ததாகும். காளைகள் பராமரிப்பு மற்றும் ஏர் கலப்பையை, பயன்படுத்தி உழவு செய்ய தெரிந்தவர்கள் எண்ணிக்கை கணிசமாக குறைந்து விட்டது, என்று விவசாயிகள் கூறுகின்றனர்.

இந்நிலையில் மீண்டும் விவசாயிகள் ஏர்க் கலப்பை முறைக்கு திரும்பி இருப்பது வரவேற்கத்தக்கது. நாட்டு மாடுகள் மற்றும் ஏர்க்கலப்பை கொண்டு பாரம்பரிய விவசாயத்தை மீட்டெடுக்கின்றனர் விவசாயிகள். அனைத்து விவசாயிகளுக்கும் ஏர்க்கலப்பை பற்றிய விழிப்புணர்வு ஏற்பட்டால், பாரம்பரிய விவசாய முறை புத்துயிர்ப் பெறும்.

Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்

மேலும் படிக்க

உரச்செலவை குறைத்து விளைச்சலை அதிகரிக்க உதவும் பசுந்தாள் உரத்தின் பயன்கள்!

ஈரோடு சந்தையில் மஞ்சள் விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி!

English Summary: Traditional plough Plowing System Revives Crop Prosperity! Published on: 17 February 2021, 06:37 IST

Like this article?

Hey! I am KJ Staff. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.