பாரம்பரிய நெல் ரகங்களைப் பயிரிடும் விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில், 50 சதவீத மானியத்தில் அந்த நெல் ரகங்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே விவசாயிகள் இந்த வாய்ப்பை நன்குப் பயன்படுத்திக்கொள்ளுமாறு, அறிவுறுத்தப்படுகிறார்கள்.
ஒரு லட்சம் விவசாயிகள்
காஞ்சிபுரம், வாலாஜா பாத், குன்றத்துார், ஸ்ரீபெரும்புதுார், உத்திரமேரூர் ஆகிய ஒன்றியங் களில், ஒரு லட்சம் விவசாயிகள் உள்ளனர். பெரும் பாலான விவசாயிகள் தமிழகம் மற்றும் ஆந்திரமாநில ரக நெல்லை சாகு படி செய்து வருகின்றனர்.
45 நெல் மூட்டைகள்
ஒவ்வொரு விவசாயியும், 35 நெல் மூட்டைகள் முதல், 45 நெல் மூட்டை கள் வரையில் மகசூல் பெறுகின்றனர்.ஒரு சில விவசாயிகள் மட்டுமே, பாரம்பரிய ரக நெல்லை சாகுபடி செய்து, அரிசியாக மாற்றி விற்பனை செய்து வருகின்றனர்.பாரம்பரிய ரக விதை நெல்லை, இயற்கை விவசாயிகளிடம் வாங்கிசாகுபடி செய்து வருகின் றனர்.ஒரு சிலருக்கு, பாரம் பரிய ரக விதை நெல் கிடைப்பதில்லை.
இதை தவிர்க்கும் பொருட்டு, சிறுகாவேரி பாக்கம் மாநில விதைப் பண்ணையில் உற்பத்தி செய்யப்பட்டு இருக்கும் துாயமல்லி மற்றும் சீரக சம்பா விதை நெல்லை, காஞ்சிபுரம் மாவட்ட விவசாயிகளுக்கு வினியோகம் செய்யும் பணியை வேளாண்துறை துவக்கி உள்ளது.அதன்படி 1,710 கிலோ சீரக சம்பா நெல் மற்றும் 1,650 கிலோ துாயமல்லி விதை வினியோகம் செய்யப்பட்டுள்ளது.
இது, அந்தந்த வட்டாரத்தைச் சேர்ந்த விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது. இதுதவிர, 550 கிலோ துாயமல்லி, 250 கிலோ சீரக சம்பா நெல் வேலுார் மாவட்டத்திற்கு வழங்கப்பட்டு உள்ளது.இது பாரம்பரிய ரக நெல்லை சாகுபடி செய்யும் விவசாயிகளை ஊக்கப்படுத்தும் விதமாக இருப்பதாக விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
பாரம்பரிய ரகங்கள்
இதுகுறித்து, காஞ்சிபுரம் மாவட்ட வேளாண் இணை இயக்குனர் முனைவர் பி.இளங்கோவன் கூறிய தாவது:மாநில அரசு விதை பண்ணையில் இருந்து, முதல் முறையாக துாய மல்லி, சீரக சம்பா நெல்லை உற்பத்தி செய்து உள்ளோம். அதை, அந்தந்த வட்டார வேளாண் விரிவாக்க மையங்களுக்கு ஏற்ப பிரித்து வழங்கப்பட்டுள்ளது. சாகுபடி செய்ய நினைக்கும் விவசாயிகள் வாங்கி பயன்பெறலாம். இத்திட்டம் வெற்றி பெற்றால், விரிவுப் படுத்த உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.
50 சதவீத மானியம்
பாரம்பரிய ரக நெல் உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு, அரசு 50 சதவீத மானியம் வழங்குகிறது. அதாவது, ஒரு கிலோ பாரம்பரிய ரக நெல்லின் விலை, 25 ரூபாயாகும். அதில், 12.50 ரூபாய் மானியம் வழங்கிறது. மீதம், 12.50 ரூபாய் செலுத்தி 20 கிலோ விதை நெல் வாங்கி செல்லலாம். அதற்குரிய பட்டா, சிட்டா, அடங்கல், ஆதார் ஆகிய விபரங்களை அந்தந்த வட்டார வேளாண் விரிவாக்க மையங்களில், விவசாயிகள் அளித்து பயன்பெறலாம்.
மேலும் படிக்க...
விடாது துரத்தும் காகங்கள்- தலையில் கொத்துவதால் அலறும் பெண்மணி!
Share your comments