1. விவசாய தகவல்கள்

நானோ யூரியா-வை பயன்படுத்தி, மண்ணின் வளத்தை காத்திடுங்கள்

Deiva Bindhiya
Deiva Bindhiya
Use nano urea to maintain soil fertility

நானோ யூரியா (NANO UREA): யூரியாவுக்காக நாட்டின் பல்வேறு பகுதிகளில் அவ்வப்போது விவசாயிகள் கலக்கம் அடைவதை பார்க்க முடிகிறது. எனவே, தற்போது நானோ யூரியா குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த அரசுகள் நடவடிக்கை எடுத்துள்ளன. பீகார் மாநில IFFCO யூரியா பற்றாக்குறை நீக்க IFFCO-வுடன் சேர்ந்து, இந்த முயற்சியை தொடங்கி உள்ளது.

IFFCO ஏற்கனவே நானோ யூரியாவைப் பயன்படுத்தத் தொடங்கியது. உலகிலேயே முதன்முறையாக இந்தியாவில் தயாரிக்கப்பட்ட நானோ திரவ யூரியா ஜூலை 8 முதல் சந்தைக்கு வந்துள்ளது. இப்போது 6 ரதங்கள் மூலம் நானோ யூரியா குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். IFFCO இயக்குனர் பிரேம்சந்திர முன்ஷி இதற்கான தொடக்கத்தை தொடங்கி வைத்தார்.

IFFCO இயக்குனர் பிரேம்சந்திர முன்ஷி, இந்த ரதங்களை கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்த திரவ யூரியா குறித்து மாநில விவசாயிகளுக்கு தெரிவிக்க 6 ரதங்கள், பல்வேறு மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன. இந்த பிரச்சார ரதங்களை கொடியசைத்து துவக்கி வைத்த IFFCO இயக்குனர் பேசுகையில், நானோ யூரியாவால் அரசும், விவசாயிகளும், மண்ணும் பயன்பெறும். மண் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். இந்த யூரியா விலையிலும் குறைவாக இருப்பதால், விவசாயிகளின் வருமானமும் அதிகரிக்கும். தேரில் இருக்கும் எல்இடி டிவி மூலம் இது குறித்த முழு தகவலும் விவசாயிகளுக்கு தெரிவிக்கப்படும். கொரானா நெறிமுறையின் கீழ், ரதம், மாவட்டங்களில் மாலை 6 மணி வரை மட்டுமே வலம் வரும்.

ஒன்றிய அரசு ஒப்புதல் (Central Government approval)

IFFCO முதலில் யூரியாவை நானோ தொழில்நுட்பத்துடன் தயாரித்தபோது, ஒன்றிய அரசு இந்த ஆராய்ச்சிக்கு ஒப்புதல் அளித்தது. இந்த திரவ யூரியாவைப் பயன்படுத்தினால் விவசாயிகளின் செலவு 60 சதவீதம் குறையும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

யூரியா வீணாவதும் தடுக்கும் (Prevent urea wastage)

மண்ணுடன் கலந்த கிரானுலேட்டட் யூரியாவில் 30 முதல் 40 சதவீதம் மட்டுமே தாவரங்கள் பயன்படுத்த முடிகிறது. மீதமுள்ள யூரியா மண்ணில் கலந்து அதன் ஆரோக்கியத்தை பாதிக்கிறது. அதே சமயம் மண்ணின் ஊடாக நிலத்தடியில் சென்று தண்ணீரை மாசுபடுத்துகிறது. மறுபுறம், தெளித்த பிறகு , நானோ யூரியாவின் 10% மட்டுமே காற்றில் பறக்கிறது. மீதமுள்ள 90 சதவீத நைட்ரஜனை தாவரங்கள் பயன்படுத்துகின்றன. இதனால் விவசாயிகளின் பணம் மிச்சமாகும்.

எப்படி நானோ யூரியா உபயோகிப்பது (How to use Nano urea)

அதன் பயன்பாட்டிற்கு, ஒரு லிட்டர் தண்ணீரில் 20 முதல் 30 மில்லி யூரியாவை கலந்து கரைசல் தயாரிக்கப்படுகிறது. ஒரு ஏக்கர் விவசாய நிலத்திற்கு 125 லிட்டர் தண்ணீர் கரைசல் தயார் செய்ய வேண்டும். பயறு வகை பயிர்களுக்கு ஒரு முறையும் மற்ற பயிர்களுக்கு இரண்டு முறையும் தெளிக்க வேண்டும். ஆனால் விதைப்பு நேரத்தில் பயன்படுத்தப்படுவதில்லை. அப்போது வழக்கமான யூரியாவை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

மேலும் படிக்க:

காபி விலை உயர்வு: அதிக அளவில் பயிரிட்டும் இந்தியாவுக்கு பலன் இல்லை

பயிர் நிவராண நிதி முதல் TNPSC வேலைவாய்ப்பு வரையிலான அறிவிப்பு!

English Summary: Use nano urea to maintain soil fertility Published on: 08 January 2022, 12:16 IST

Like this article?

Hey! I am Deiva Bindhiya. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.