தாய்லாந்து, இந்தோனேசியா, வியட்நாம் உள்ளிட்ட நாடுகளில் பயோ பிளாக் முறையில் தொட்டியில் மீன் வளர்க்கப்படுகிறது. இந்தியாவில் வடமாநிலங்களில் இறால் மீன்கள் வளர்க்கப்படுகிறது. குளங்களில் அதிக எண்ணிக்கையில் மீன்கள் வளர தேவையான அளவு ஆக்சிஜன் கிடைக்காது. தீவனங்களின் கழிவுகளும் மீன்களின் எச்சமும் தண்ணீரில் கலந்து நச்சுத்தன்மையுள்ள அமோனியாவாகவும் நைட்ரைட் மற்றும் நைட்ரேட்டாகவும் மாறும். 1000 லிட்டர் தண்ணீருக்கு 5 கிலோ மீன்கள் தான் உற்பத்தி செய்ய முடியும். பயோ பிளாக் முறையில் 1000 லிட்டர் தண்ணீரில் 35 முதல் 40 கிலோ மீன்கள் உற்பத்தி செய்யலாம்.
பயோபிளாக் தொழில்நுட்பம் (Bio blog Technology)
இந்த முறையில் நன்மை தரக்கூடிய நுண்ணுயிர்களை உருவாக்குவதால் அவை மீன்களின் எச்சம், தீவன கழிவுகளை உணவாக கிரகிக்கிறது. பயோபிளாக் என்ற துகள்களை வெளியிடுவதால் இந்த துகள்கள் மீன்களுக்கு சத்தான உணவாகிறது. இந்த துகள்களில் புரோட்டீன் 49, கார்போஹைட்ரேட் 11, கொழுப்பு சத்து 5 சதவீதம், தேவையான அமிலம், நுண்ணூட்ட சத்துக்கள் உள்ளது.
இரும்பு கம்பிகள் மற்றும் தார்பாலின் சீட்டால் வட்டத்தொட்டி அமைக்க ரூ.35 ஆயிரம் ஆகும். 5 முதல் 8 ஆண்டுகள் வரை உழைக்கும். இதன் மேல் நிழல்வலை அமைக்க, ஆக்சிஜன் செலுத்துவதற்கான 90 வாட்ஸ் மோட்டார் குழாய்கள் உட்பட உபகரணங்கள் வாங்க ரூ.14 ஆயிரம் ஆகும். 13 ஆயிரம் லிட்டர் தண்ணீரை நிரப்பி 100 மி.லி குளோரின் இடவேண்டும்.
இரண்டு நாட்கள் கழித்து 8 முதல் 10 கிலோ அயோடின் நீக்கப்பட்ட கல் உப்பு இடவேண்டும்.
தண்ணீரின் அமில, காரத்தன்மை அளவு 6.5க்கு குறைவாக இருந்தால் ஒரு வாளியில் 20 லிட்டர் தண்ணீரில் 500 கிராம் கிளிஞ்சல் சுண்ணாம்பை கலந்து தொட்டிக்குள் ஊற்ற வேண்டும். அளவு 8க்கு மேல் இருந்தால் ஒரு வாளியில் 20 லிட்டர் தண்ணீரில் 330 கிராம் சமையல் சோடா கலந்து தொட்டிக்குள் ஊற்ற வேண்டும்.
தீவனம் (Fodder)
ஒரு தொட்டியில் ஒரே ரகத்திலான 5 கிராம் எடை கொண்ட 900 குஞ்சுகளை விடலாம். ஒரு கிலோ மீன் உற்பத்திக்கான செலவு ரூ.53. முதல் 6 வாரங்களுக்கு தினமும் மீன் குஞ்சுகளின் எடையில் 15 சதவீதம் தீவனத்தை 5 வேளையாகவும், 6 மாதங்கள் வரை ஒரு சதவீதம் தீவனம் அளிக்க வேண்டும்.
4 முதல் 6 மாதங்களில் 420 கிலோவுக்கு அதிகமான மீன்கள் மகசூல் எடுக்கலாம். ஒரு கிலோ 120- - 150 ரூபாய் விலை கிடைக்க வாய்ப்புள்ளது. ஓர் அறுவடை காலத்துக்கு தண்ணீர் மாற்ற தேவையில்லை.
இளங்கோவன், வேளாண்மை இணை இயக்குனர்
பாசன மேலாண்மை பயிற்சி நிலையம்
துவாக்குடி
திருச்சி 98420 07125
மேலும் படிக்க
நெற்பயிாில் கதிர்நாவாய் பூச்சித் தாக்குதலை கட்டுப்படுத்துவது எப்படி?
பூத்துக் குலுங்கும் சூரியகாந்தி மலர்கள்: மகிழ்ச்சியில் விவசாயிகள்!
Share your comments