திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் பகுதியில் தேனீ வளர்க்க 40 சதவீதம் மானியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
20% மகசூல் அதிகரிப்பு (20% yield increase)
இதுகுறித்து மடத்துக்குளம் தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் திவ்யா கூறியதாவது:
விளைச்சலைப் பெருக்குவதில் தேனீக்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. விளைநிலங்களில் தேனீ வளர்ப்பதால் 20 சதவீதம் சாகுபடி அதிகரிக்கிறது.
இந்த அடிப்படையில் விவசாயிகள் பயன்பெறும் வகையில் தேனீ வளர்க்க 40 சதவீதம் மானியம் கொடுக்கப்படுகிறது. ஒரு ஏக்கர் பரப்பளவில் 20 பெட்டிகள் வரை வைத்து தேனீ வளர்க்கலாம்.
5 கி.மீ.தூரம் (5 km away)
புதிய கூட்டில் தேன் எடுக்க மூன்று மாதங்கள் ஆகும். ஐந்து கி.மீ., தூரம் வரை பறந்து சென்று தேனை சேகரித்து வரும் திறன் தேனீக்களுக்கு உண்டு.
தேனீப் பெட்டிகள், தேனீக்கள், தேன் எடுக்கும் கருவி அனைத்திற்கும் 40 சதவீதம் பின்னேற்பு மானியமாக வழங்கப்படுகிறது.ஒவ்வொரு மாதமும் 6-ந் தேதியன்று கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தால் தேனீ வளர்ப்பு குறித்த பயிற்சி நேரடியாக வழங்கப்படுகிறது.
மடத்துக்குளம் தோட்டக்கலைத்துறை வாயிலாக 100 தேனீ பெட்டிகள், தேனீக்கள், காலனி, 10 தேன் எடுக்கும் கருவி, 40 சதவீத மானியத்தில் வழங்கப்பட உள்ளது.
தேவைப்படும் ஆவணங்கள் (Documents required)
-
சிட்டா
-
அடங்கல்
-
உரிமைச்சான்று
-
ரேஷன் கார்டு
-
ஆதார் அட்டை
-
பேங்க் பாஸ்புக்
-
பாஸ்போர்ட் அளவுப் புகைப்படம்
எனவே தேனீ வளர்க்க விரும்பும் விவசாயிகள், மேற்கண்ட ஆவணங்களுடன் தோட்டக்கலைத்துறை அலுவலகத்தை அணுகலாம்.
கூடுதல் விவரங்களுக்கு தாமோதரன் - 96598 38787, பிரபாகரன் - 75388 77132 ஆகியோரை தொடர்புத் கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் படிக்க...
80 - 85 % வரை மானியம் கிடைக்கும் தொழில்- ரூ.5 லட்சம் வரை வருமானம்!
வேலையற்ற இளைஞர்கள் பால் பண்ணைகள் திறக்க மானியம் வழங்கும் அரசு!
Share your comments