விவசாயிகளிடமிருந்து உடனடி கொள்முதல், தனியார் பங்குடன் சீரான சேமிப்பு, நுகர்வோருக்குத் தரமான உணவு பொருட்கள் என்ற, மத்திய அரசின், திட்டத்தை ஆதரிப்போம் என காவிரி நீர்ப்பாசன விவசாயிகள் நலச் சங்கம் தெரிவித்துள்ளது.
மத்திய அரசின் வேளாண் மசோதாக்களை ஏற்க மறுத்து, பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட வடமாநில விவசாயிகள் டெல்லியின் எல்லைகளில் கடந்த சில மாதங்களாகப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
ஆனால் மத்திய அரசோ விவசாயிகளின் கோரிக்கையை ஏற்க முன்வராமல், போராட்டத்தை முடக்குவதிலேயே முழுகவனம் செலுத்தி வருகிறது.
புதியத் திட்டம் (New project)
இதனிடையே விளைபொருட்களை விவசாயிகளிடமிருந்து உடனடி கொள்முதல் செய்ய ஏதுவாக, தனியார் பங்குடன் சீரான சேமிப்பு- நுகர்வோருக்கு தரமான உணவுப் பொருட்கள் என்றத் திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
இதுகுறித்து, காவிரி நீர்ப்பாசன விவசாயிகள் நலச்சங்க தலைவர் மகாதானபுரம் ராஜாராம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டிருப்பதாவது:
தொடரும் அச்சம் (Fear of continuing)
மத்திய அரசின், மூன்று வேளாண் மசோதாக்கள் மூலம் குறைந்தபட்ச ஆதரவு விலை, கட்டாய கொள்முதல் இவற்றை, அரசு விட்டு விடுமோ என்ற அச்சம் தொடர்கிறது.
கொள்முதல் நிலையத்தின் மூலமாக விவசாயிகளின் நெல், கோதுமை சிறுதானியங்கள் மற்றும் பருப்பு வகைகள் குறைந்தபட்ச ஆதரவு விலையுடன், மாநில அரசு கொள் முதல் செய்து வருவதை, மத்திய அரசு கை விட்டு விட்டு, தனியாரிடம் ஒப்படைத்து விடுமோ என விவசாயிகள் அச்சப்படுகின்றனர்.
ஆனால், மத்திய அரசு தனியார் பங்களிப்புடன், குவாலிட்டி கவுன்சில் ஆப் இந்தியா என்ற அமைப்பு மூலம் திட்டத்தை மேம்படுத்தி, அதன் மூலம் உணவு தானியங்களின் தரத்தை உயர்த்தி கொள்முதல், சேமிப்பு, வினியோகம் வரையிலான வழிமுறையைச் செயல்படுத்த உறுதி பூண்டுள்ளது.
சங்கிலித் தொடர் இணைப்புத் திட்டம் (Chain link connection scheme)
மத்திய அரசின் உணவுக் கழகம் கொள்முதல் தொடங்கி, தரமாகச் சேமிப்பு செய்து, திரும்பவும் மக்களுக்கு பொது விநியோகம் மூலம் தரமான உணவு தானியம் வழங்கும் சங்கிலித் தொடர் இணைப்புத் திட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தத் திட்டம் மூலம், பொது விநியோகத் திட்டத்தால் பயன்பெறும், 67 சதவீதக்குடும்பங்களுக்கு மாதாந்திர ரேஷன் மூலம் தரமான உணவு தானியங்களை வழங்க உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக, இந்திய உணவுக் கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
திட்டத்தை ஆதரிப்போம் (We will support the project)
எனவே விவசாயிகளுக்கும், நுகர்வோருக்கும் பயன்தரப்போகிற இந்த சிறப்பான மத்திய அரசின் திட்டத்தை ஆதரிப்போம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க...
ஊட்டியில் கேரட் விலை குறைந்தது! கவலையில் விவசாயிகள்!
உரங்களின் விலை உயர்வு நிறுத்தி வைப்பு! பழைய விலைக்கே வாங்கி கொள்ளலாம்!
உரங்கள் விலை உயர்வால் விவசாயிகள் வேதனை! விலைவுயர்வைக் குறைக்க கோரிக்கை!
Share your comments