திருச்சி தேசிய வாழை ஆராய்ச்சி மையம் சார்பில் வாழை ரகங்கள் ஏற்றுமதி மற்றும் சந்தைப்படுத்துதல் குறித்து கருத்தரங்கு திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் ஹோட்டலில் நடைபெற்றது. இதில் 200க்கும் மேற்பட்ட ஏற்றுமதியாளர்கள் கலந்துகொண்டார். மேலும் வாழை வகைகள் மற்றும் வாழையிலிருந்து செய்யப்பட்ட மதிப்பு கூட்டு பொருட்களான வாழை ஜாம் ஆகியவையும் காட்சிக்கு வைக்கப்பட்டன.
இதுகுறித்து தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தின் முதன்மை விஞ்ஞானி சுரேஷ்குமார் கூறும்போது, ”இந்தியாவில் ஏறக்குறைய 30 மில்லியன் மெட்ரிக் டன் வாழைப்பழங்கள் உற்பத்தி ஆகிறது.வாழைப்பழம் உற்பத்தியில் உலகளவில் அதிகம் உற்பத்தி செய்யும் நாடாக இந்தியா வளர்ந்துள்ளது.
எந்த ஒரு நாடும் உற்பத்தி செய்யாத அளவிற்கு இந்தியா வாழைப்பழ உற்பத்தியில்சாதனைப் படைத்துள்ளது. இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் மொத்த பழங்களின் எண்ணிக்கையில் மூன்றில் இரு பங்காக வாழைப்பழம் உள்ளது.
தமிழ்நாடு-14.2 சதவிகிதம் , குஜராத் - 13.8 சதவிகிதம், ஆந்திர பிரதேசம் - 13.4 சதவிகிதம் என மூன்று மாநிலங்கள் மட்டும் இந்தியாவின் மொத்த வாழைப்பழம் உற்பத்தியில் 40 சதவீதத்தைப் பிடித்துள்ளன.
மேலே கூறிய மூன்று மாநிலங்களை தவிர்த்து பிற மாநிலங்கள் அனைத்தும் சேர்த்து 58.6 சதவீதம் வரை வாழைப்பழம் உற்பத்தியை அளிக்கின்றன.
மேலும் படிக்க:
Share your comments