1. விவசாய தகவல்கள்

சொட்டுநீர்ப் பாசனத்தின்போது கடைப்பிடிக்க வேண்டியவை எவை?

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
What are the requirements to be followed during drip irrigation?
Credit : Natria

வரப்பு உயர நீர் உயரும், நீர் உயர நெல் உயரும், நெல் உயர குடி உயரும் இதுவே அவ்வையின் அர்த்தம் மிகுந்த வரிகள்.இதில் குறிப்பிட்டிருப்பதன்படி, விவசாயமும், நீர்ப்பாசனமும் ஒன்றோடு ஒன்று பின்னிப்பினைந்த ஒன்று.

எதற்காக சொட்டுநீர் பாசனம் ? (Why Drip Irrigation?)

நீரைச் சேமிப்பதற்காகவும், குறித்த நேரத்தில் தேவையான தண்ணீர் பயிருக்குக் கிடைக்க வேண்டும் என்பதற்காகவும் சொட்டு நீர் பாசனம் பயன்படுத்தப்படுகிறது.

இந்த சொட்டு நீர்பாசனத்தின் சிறப்பு அம்சங்கள் குறித்துப் பார்ப்போம்.

சொட்டுநீர் பாசனம் (drip irrigation)

  • பயிர் கேட்டும் தண்ணீர் மட்டுமே கொடுக்கப்படுகிறது.

  • கட்டுப்படுத்தப்பட்ட பாசனம்.

  • வேர்களுக்கு அருகில் நீர் கொடுக்கப்படுகிறது

  • நீண்ட நேரம் நீர் அளிக்கப்படுகிறது

  • தட்டுப்பாடு இல்லாமல் அடிக்கடி நீர் தருவது

  • தண்ணீரைக் குறைந்த அளவில் கொடுப்பது

  • குறைந்த அழுத்தத்தில் தண்ணீர் கொடுக்கப்படுகிறது

நன்மைகள் (Benefits of drip irrigation)

  • மகசூல் அதிகரிக்கும் தேவையான அளவு ஈரப்பதம் இருக்கும். எனவே அதிக மகசூலும், தரமும் நன்றாக இருக்கும்.

  • பயிர் சீக்கிரம் அறுவடைக்கு (Harvesting) வருகிறது.

  • அதிக ஈரப்பதத்தினால் வரும் நோய்கள் (Disease)கட்டுப்பட வாய்ப்பு உருவாகிறது

  • 70 % வரை தண்ணீர் (Water)சிக்கனமாகிறது.

  • களைகள் (Pest) கட்டுப்பாட்டில் இருக்கும்.

  • தொழிலாளர்கள் கூலி (Salary) குறையும்.

  • உரம், பூச்சி மருந்து உள்ளிட்டவற்றைச் சொட்டுநீர் பாசன முறையில் தருவதாய் வீணாவது தடுக்கப்படுவதுடன், செலவும் (Expenditure) குறைய வாய்ப்பு உருவாகிறது.

  • தண்ணீர் மூலம் பரவும் நோய்கள்(Water Disease) குறையும்.

  • மேடு, பள்ளங்களைச் சமன் செய்யாமல் பயிர் செய்யலாம். இதன் மூலம் மேல் மண் அப்புறப்படுத்தப்பட வாய்ப்பு இல்லை.

  • சீக்கிரம் அறுவடைக்கு வருவதால் நல்ல விலை (Price) கிடைக்கும்.

கவனத்தில் கொள்ள வேண்டியவை (Things to keep in mind)

  • சாகுபடி நிலம் (Land) பற்றிய முழுமையான சேர்வை தேவை

  • ஒரு நாளைக்குத் தேவைப்படும் தண்ணீரின்  (Water) அளவு

  • கிணற்று நீர் வாய்க்கால் நீர் விவரம்

  • பயிரின் நீர் தேவை (Water Need)

  • பயிர் வகை (Crop Variety) அதன் வயது

  • மண் வகை (Sand)

  • வெயிலில் நீர் ஆவியாகும் அளவு

இவற்றைக் கருத்தில் கொண்டு சொட்டு நீர் பாசனம் மூலம் சாகுபடி செய்தால், நல்ல மகசூல் கிடைக்கும். அதிக லாபமும் ஈட்டலாம்.

மேலும் படிக்க...

விதைக்கிழங்கு உற்பத்தி தொழில்நுட்பத்தால் வருமானம் தரும் மூலிகைச் செடிகள்!

வெயிலின் தாக்கத்தால் 1000 ஏக்கர் பயிர்கள் கருகும் அபாயம்! தண்ணீர் திறந்து விட விவசாயிகள் கோரிக்கை!

பயிர்கள் செழிக்க கோடை உழவு அவசியம் - விவசாயிகளுக்கு ஆலோசனை!

English Summary: What are the requirements to be followed during drip irrigation? Published on: 16 March 2021, 09:04 IST

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.