விவசாயிகள், வேளாண் அலுவலர்களைத் தொடர்பு கொள்ள வேண்டுமானால் நேரடியாக வேளாண் அலுவலகத்திற்கு சென்று காத்திருந்து தான் சந்திக்க வேண்டும். இதற்காக, விவசாயிகளுக்கு அதிக நேரம் செலவாகிறது. விவசாயிகளின் நேரத்தை மிச்சப்படுத்தவும், வேளாண் அலுவலர்களின் பணிச்சுமையைக் குறைக்கவும், ஒரு புதிய வாட்ஸ்அப் குழு (Whatsapp group) திண்டுக்கல்லில் வட்டார அளவில் தொடங்கப்பட்டுள்ளது. இந்தக் குழு, விவசாயிகளின் சந்தேகங்களை உடனுக்குடன் தீர்ப்பதோடு, ஆலோசனைகளையும் வழங்குகின்றனர் வேளாண் அதிகாரிகள்.
உழவர்-அலுவலர் தொடர்பு திட்டம்
விவசாயிகளுக்கு பல்வேறு தொழில்நுட்ப ஆலோசனைகள் (Technical Advise) வழங்கும் வகையில், வேளாண் மற்றும் தோட்டக்கலையில் 'உழவர்-அலுவலர் தொடர்பு திட்டம் (Farmer-Officer Communication Project) அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் நேரடியாக விவசாயிகளை சந்தித்து அலுவலர்கள் ஆலோசனை வழங்குவர். நவீன தொழில்நுட்பங்கள், மானிய திட்டங்களை (Subsidy Scheme) விவசாயிகளுக்கு அலுவலர்கள் விளக்கவும் செய்கின்றனர். கூட்டம் நடத்துதல், செயல் விளக்கம் அளித்தல் ஆகிய பணிகளையும் மேற்கொள்கின்றனர்.
வாட்ஸ்அப் குழு
வேளாண், தோட்டக்கலையில் தலா ஒரு அலுவலர், ஒவ்வொரு கிராமத்திலும் 10 முன்னோடி விவசாயிகளை தொடர்பு கொண்டு உரிய கால இடைவெளியில் ஆலோசனை வழங்குவர். அலுவலர்கள் கிராம ஊராட்சிக்கு செல்வதையும், வேளாண் தகவல்களை (Agri Information) பரிமாறிக் கொள்வதையும் நவீன தொழில்நுட்பங்களை கொண்டு உயரதிகாரிகள் கண்காணிப்பர். இதற்காக 14 ஒன்றியங்களிலும் வட்டார அளவில் விவசாயிகளை உடனடியாக தொடர்பு கொள்ள, தகவல்களை பரிமாறிக்கொள்ள 'வாட்ஸ் ஆப்' குழுக்கள் துவங்கப்பட்டுள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.
Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்
மேலும் படிக்க
பயிர்களின் தரத்தை உயர்த்தும் பாசன நீரை பரிசோதிக்கும் வழிமுறை!
விவசாயிகள் இயற்கை விவசாயத்தில் ஈடுபட வேண்டும், வேலூர் கலெக்டர் வலியுறுத்தல்
Share your comments