கடல் வழுக்கை கீரை அல்லது ஓர்புடு தாவரம் மண்ணிலுள்ள சோடியம் உப்பை உறிஞ்சி எடுத்து மலடாகி கிடக்கும் நிலத்தை செலவில்லாமல் விளைநிலமாக மாற்றும் தன்மையுடைது. இரசாயன உரங்களை தொடர்ந்து பயன்படுத்துவதால் மண்ணில் உப்புத்தன்மை அதிகரித்து வளம் குறைந்து கொண்டே வருகிறது. தமிழகத்தில் பெரும்பாலான நிலம் உவர்த்தன்மையுடன் பயிர் வளர்ச்சி குறைந்து மகசூல் இழப்பு ஏற்படுகிறது. கடல் வழுக்கை கீரை அல்லது ஓர்புடு என்பது பூக்கும் தாவரம். வழவழப்பான தடித்த இலைகள், ஊதா நிறப் பூக்களுடன் தரையோடு ஒட்டி வளரும். வீடுகளில் அலங்காரத்திற்காக வளர்ப்பதுண்டு.
அதிசய செடி (Amazing Plant)
இரண்டாண்டு ஆய்வுக்கு பின் கோவை வேளாண் பல்கலைக்கழக சுற்றுச்சூழல் அறிவியல் துறையினர் இதன் தனித்தன்மையை உறுதிப்படுத்தியுள்ளனர். கடற்கரை ஓரங்களிலும், உவர்நிலங்களிலும் ஓர்பூடு தாவரம் அதிகமாக வளர்கிறது. அந்த சூழலில் செழித்து வளர்வதால் தனக்கு தேவையான சத்துக்களை உவர் நிலத்திலிருந்தே பெறுகிறது. மண்ணில் உள்ள 70 சதவீத உப்புத்தன்மையை, சோடியம் உப்பை தனது வளர்ச்சிக்கு இந்த செடி அதிகளவில் எடுத்து கொள்கிறது.
உப்பு படிந்த நிலத்தை இந்த தாவரம் மெல்ல மீட்டெடுத்து நன்னிலமாக மாற்றுகிறது என்பதால் எதிர்காலத்தில் இதன் தேவை பல மடங்கு அதிகமாக இருக்கும். அழகுச் செடியாகவும், கால்நடைகளுக்கு தீவனமாகவும், புற்றுநோய் எதிர்ப்பு மருந்து மூலப்பொருளாகவும், உணவுப் பொருளாகவும் பயன்படுகிறது.
கடலோரப் பகுதிகளில் இறால் மீனுடன் சேர்த்து சமைப்பதற்கு இந்த செடியை பயன்படுத்துகின்றனர். இதை வங்கராசி கீரை என்பர்.
அருண்ராஜ், மகேஸ்வரன், சபரிநாதன் தொழில்நுட்ப வல்லுனர்கள்
சென்டெக்ட் வேளாண் அறிவியல் மையம், தேனி, 96776 61410
மேலும் படிக்க
கொரோனா வைரஸக் கட்டுப்படுத்த தாவரத்தில் இருந்து தடுப்பூசி!
கம்பம் பகுதியில் நெல் அறுவடை துவங்கியது: குவிண்டால் ரூ. 2060க்கு கொள்முதல்!
Share your comments