முந்திரி கடலோரப் பகுதிகளில் அதிக அளவில் விவசாயம் செய்யப்படுகிறது. இப்பயிருக்கு அதிக குளிர் மற்றும் அதிக வறட்சியைத் தாங்கும் தன்மையில்லை. கடல் மட்டத்திலிருந்து 300 மீ வரை சாகுபடி செய்யப்படுகிறது. முந்திரி அனைத்து வகையான மண்ணிலும் வளர்ந்து, பயன் தரக்கூடியது. இப்பயிருக்கு நல்ல வடிகால் வசதி மிகவும் அவசியம்.
முந்திரி விவசாயம் (Cashew Farming)
வி.ஆர்.ஐ.2 என்ற விருத்தாசலம் உயர் ரக முந்திரி ரகம் தான், நமது நாட்டின் தேசிய ரகமாகும். இதன் பருப்பும், பழமும் பயன் தரும் பொருளாக ஏற்றுமதி செய்யப்படுகிறது. மேலும் இது மருத்துவ எரிபொருளாகவும் பயன் அளிக்கிறது. வறட்சியான நிலங்களில் கூட ஏக்கருக்கு ஏறக்குறைய 800 கிலோ முந்திரி பருப்பை சாகுபடி செய்யலாம். அனைத்து விமான பருவ நிலைகளிலும், ஒரே சீராக மகசூலைத் தருவதால், முந்திரியை ஊடுபயிராகவோ வேலியின் வரப்பு பகுதியிலோ, அதிகம் பார்வையிடும் வாய்ப்பில்லாத பகுதியிலோ, வளம் குறைந்த நீர் வசதி உடைய இடத்திலோ, குத்தகை தோட்டங்களிலோ எளிதில் நட்டு சாகுபடி செய்யலாம்.
அரசுப் பண்ணைகளில் உயர்ந்த வி.ஆர்.ஐ.2 ரகம் கிடைக்கும். அடர் நடவு முறையில், வரிசைக்கு வரிசை மற்றும் செடிக்கு செடி 4 மீட்டர் இடைவெளி விட்டு, இளம் தண்டுகளை ஒட்டுக் கன்றாக நடலாம். 9 வருடங்கள் பராமரித்த பின்பு, மரங்களுக்கு இடையே இடைவெளியை 8 மீட்டர் வரிசைக்குள் வருமாறு பாதியாக குறைத்து, பருவம் தவறாமல் வருமானத்தை ஈட்டலாம். செம்புரை மண், மணற்பாங்கான மண், செம்மண் மற்றும் கரு மண்ணிலும் முந்திரிப் பயிரை வளர்க்கலாம். முந்திரிப் பயிரானது, களர் மற்றும் உவர் உள்ள மண்ணில் அதிக மகசூல் தராது. இந்த மாதிரியான இடத்தில், நிலத்தை சீர்திருத்தம் செய்த பின்பு முந்திரி விவசாயத்தை தொடங்கலாம்.
வேலியோரம் முந்திரியை வளர்த்தால் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும். முந்திரியில் ஊடுபயிராக மணிலா, எள், மரவள்ளி மற்றும் வெட்டிவேர் என்ற வாசனைப் புல் வளர்த்து இலாபம் ஈட்டலாம். வீட்டுத் தோட்டத்தில் வைத்தாலும் அதிக அளவு பயன் தரக்கூடியது முந்திரி.
முந்திரிப் பயிரை, நட்ட மூன்றாவது ஆண்டிலிருந்து காய்க்கத் தொடங்கும். நன்கு பழுத்த பழங்களிலிருந்து மார்ச் முதல் மே மாதங்களில் அறுவடை செய்து, முந்திரிக் கொட்டைகள் பிரித்தெடுக்கப்படு உலர்த்தப்படுகிறது. ஆண்டிற்கு ஒரு மரம் 3 முதல் 4 கிலோ முந்திரிக் கொட்டைகளை கொடுக்கும்.
மேலும் படிக்க
Share your comments