பயிர் வளர யூரியா, டி.ஏ.பி உள்ளிட்ட உரங்கள் அவசியமான ஒன்று என்பது விவசாயிகளின் கருத்து. ஆனால், இதற்கு மாற்றாக இயற்கை விவசாயிகள் பயன்படுத்துவது எது தெரியுமா?
அதுதான் தயிர். அப்படியே பயன்படுத்தாமல், தயிரை மாற்றி பொன்னியமாகப் பயன்படுத்துவது தமிழர் பண்பாட்டின் சிறப்பு அம்சம்.
குறைந்த செலவில் நிறைவான லாபத்தை தரும் இயற்கை விவசாயத்தில், ரசாயன உரங்களுக்கு பதிலான இயற்கை மருந்து மற்றும் பூச்சிக்கொல்லிகள் பயன்படுத்தப்படுகின்றன.
அந்த வகையில் இயற்கை விவசாயத்தில் தயிரைப் பயன்படுத்தி நல்ல மகசூல் எடுத்து வருகின்றனர் விவசாயிகள். தயிரையே சற்று மாற்றி யூரியா (Urea ), டி.ஏ.பி-க்கு மாற்றாக விவசாயத்தில் பயன்படுத்தி நல்ல மகசூல் எடுத்து வருகிறார்கள் பீகார் விவசாயிகள்.
2 லிட்டர் தயிரைக் கொண்டு 25 கிலோ யூரியாவின் பயன்பாட்டை குறைக்க முடியும் என்று தெரிவித்துள்ளனர். இதை இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகமும் தற்போது அங்கீகரித்துள்ளது.
ஆனால் தமிழகத்தைப் பொருத்தவரை, பயிர்களின் வளர்ச்சிக்கு தயிர் பல ஆண்டுகளாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக தயிரைப் பொன்னியமாக மாற்றி இயற்கை விவசாயிகள் பயன்படுத்தி வருகின்றனர்.
எப்படித் தயாரிப்பது? (How to Prepare)
-
5 லிட்டர் தயிரை காற்று புகாத பானையில் வைத்து அடைத்து, அதற்குள் செம்புக் கம்பியைப் போட்டுவிட வேண்டும்.
-
கம்பியின் கால்வாசி பகுதி வெளியே தெரியும் வகையில் வைக்க வேண்டியது அவசியம்.
-
4, 5 நாட்களுக்கு பிறகு பார்த்தால், தயிர் பச்சை நிறமாக மாறியிருக்கும். இந்தக் கலவைக்கு பொன்னியம் என்று பெயர்.
பொன்னியத்தின் பயன்கள் (Benefits)
-
பொன்னியத்துடன் 5 லிட்டர் வேஸ்ட் கம்போஸரை கலந்து எல்லாப் பயிர்களுக்கும் பயன்படுத்தலாம். இதனால் பூச்சிகள் பயிர்களை அண்டவே அண்டாது.
-
யூரியாவிற்கு பதிலாக பயன்படுத்தும்போது, பொன்னியத்தின் அளவைச் சற்று கூடுதலாக சேர்ப்பது நல்லது.
-
நெல், காய்கறிகள், மக்காச்சோளம், கோதுமை என்று அனைத்துப் பயிர்களின் மீதும் தெளிக்கலாம். இதனால் பயிர்களுக்குத் தேவையான நைட்ரஜன் சத்து கிடைக்கிறது.
-
இதனால் யூரியாவைப் பயன்படுத்த வேண்டிய அவசியம் இருக்காது.
-
பயிர்களைத் தாக்கும் பூஞ்சண நோய்கள், பூச்சிகள் ஆகியவை கட்டுப்படுத்தப்படுகிறது.
-
பொன்னியத்துடன், மண்புழு உரம் கலந்த கலவையை நெற்பயிர் என்றால் தூவலாம்.
-
களர்பாலை நிலங்களில், சில பயிர்கள் விளையாது. அந்த மாதிரியான நிலங்களை மாற்ற இந்த பொன்னியத்தை தென் மாவட்டங்களில் அதிகளவில் பயன்படுத்தியது நம்மடைய பாரம்பரியம்.
-
தற்போது இந்த பொன்னியம் டெல்டா மாவட்டங்களில் பிரபலமாகி வருகிறது.
-
யூரியாவை விடக் குறைந்த விலை கொண்ட இந்த பொன்னியத்தை, எருவுடன் சேர்ந்தும் போடலாம்.
-
மண்ணுடன் கலந்தும் பயன்படுத்தலாம்
தகவல்
வெங்கடேஸ்வரன்
இயற்கை விவசாயி
திருவண்ணமாலை
மேலும் படிக்க...
நிறைந்த லாபம் ஈட்ட நாட்டுக்கோழி வளர்ப்பு - மானியம் பெறஉடனே விண்ணப்பியுங்கள்!
பயிர்களின் Big Boss-ஸாகத் திகழும் அசோபாஸ்!
அரசு நிதி ஒதுக்கீடு செய்வதில் மெத்தனம் - பட்டுக்கூடு உற்பத்தியாளா்கள் கவலை!
Share your comments