1. விவசாய தகவல்கள்

காளான் வளர்ப்பு மூலம் ரூ,50000 சம்பாதிக்கலாம்

T. Vigneshwaran
T. Vigneshwaran

Mushroom Cultivation Tips

தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் காளான் பண்ணை அமைத்து கடந்த ஐந்து வருடங்களுக்கும் மேலாக காளான் உற்பத்தி தொழில் ஈடுபட்டு வரும் பெண் தொழில் முனைவரான சிந்துஜா மாத வருமானமாக 50,000 ரூபாய் வரை வருமானம் ஈட்டுகிறார்.

காளான் வளர்ப்பு

தேனி மாவட்டம் கம்பம் பகுதியைச் சேர்ந்தவர் சிந்துஜா. இவர் கடந்த ஐந்து வருடங்களுக்கும் மேலாக காளான் பண்ணையில் இருந்து காளான் உற்பத்தி செய்து வெளி சந்தைகளில் விற்பனை செய்து வருகிறார். தொடக்கத்தில் டெய்லரிங் செய்து வந்த சிந்துஜாவிற்கு கூடுதல் வருமானம் தேவைப்பட்ட காரணத்தினால் சுய தொழில் ஒன்றை செய்ய வேண்டும் என எண்ணி உள்ளார். வீட்டிலேயே சுயதொழில் தொடங்குவதற்கான வழிமுறைகள் குறித்தும் தேடி வந்துள்ளார்.

அப்போது கம்பம் சுற்று வட்டார பகுதிகளில் காளான் தேவை அதிகமாக இருப்பதை அறிந்த சிந்துஜா சிறிய அளவிலான காளான் குடில் அமைத்து காளான் உற்பத்தி செய்யத் தொடங்கியுள்ளார். ஆரம்பத்தில் 10 க்கு 16 அளவில் குடில் அமைத்து காளான் உற்பத்தி செய்ய தொடங்கிய இவர் தற்போது 20 சென்ட் இடத்தில் காளான் பண்ணை அமைத்து பெண் தொழில் முனைவோராக உருவாகியுள்ளார் சிந்துஜா.

சிறிய அளவில் காளான் பண்ணை அமைத்து விற்பனை தொடங்கிய காலகட்டத்தில் , இவர் உற்பத்தி செய்த காளானுக்கு அதிக தேவை ஏற்பட்டதால் தொழில் யுத்தியை அறிந்து கொண்டு அதிக அளவில் காளான் உற்பத்தி செய்ய கற்றுக் கொண்டுள்ளார்.

பின் படிப்படியாக காளான் உற்பத்தி பரப்பளவை அதிகரித்து தற்போது சிப்பிக் காளன் வகைகளில் ப்ளோரிடான், ஹெச் யு, பிங்க் என வெவ்வேறு வகைகளில் காளான் உற்பத்தி செய்து விற்பனை செய்து வருகிறார்.

உற்பத்தி செய்த காளானிலிருந்து காளான் சூப் பவுடர்,காளான் ரசப்பொடி, காளான் மசால் பொடி என காளான் மதிப்பு கூட்டப்பட்ட பொருள்களும் தயார் செய்து விற்பனை செய்து வருகிறார்.நாளொன்றுக்கு 25 முதல் 30 கிலோ வரை உற்பத்தி செய்யும் இவர் மொத்த விலையில் ஒரு கிலோ காளான் 200 ரூபாய்க்கு விற்பனை செய்து வருகிறார்.

மேலும் படிக்க:

மகள்களின் திருமணத்திற்கு 74 லட்சம் ரூபாய் வழங்கப்படும்

வேளாண் இயந்திரங்களுக்கு 50% மானியம்

English Summary: You can earn Rs 50000 through mushroom cultivation

Like this article?

Hey! I am T. Vigneshwaran. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2025 Krishi Jagran Media Group. All Rights Reserved.