1. விவசாய தகவல்கள்

மாங்காய்க்கு z+ பாதுகாப்பு!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
Z + protection for mangoes!

மாங்காயிற்கு z+ செக்யூரிட்டி பாதுகாப்பு போடப்பட்டுள்ளது என்றால் உங்களால் நம்பமுடிகிறதா? உண்மை அதுதான். இந்த z+ செக்யூரிட்டி பாதுகாப்பு என்பது மத்திய அரசோ, மாநில அரசோ வழங்கவில்லை. இயற்கை அன்னைக் கொடுத்த உச்சக்கட்டப் பாதுகாப்பு.

கோடை காலம் என்றவுடன் நம்நினைவுக்கு வருவது முக்கனிகளுள் ஒன்றான மாம்பழம். இதன் விளைச்சல்காலமே நமக்கு கோடையாக இயற்கை தந்த வரம். அந்த வகையில், தற்போது தமிழகம் முழுவதும் மாம்பழ சீசன் துவங்கிவிட்டது. கோடை காலம் என்றால் மாங்காய் விளைச்சல் அதிகமாகவிடும். தெருவோர கடைகள், மார்க்கெட்களில் மாங்காய் மற்றும் மாம்பழங்களின் வருகை அதிகரித்து விடும்.

இந்தக் கோடை காலத்தில் மாம்பழத்தையும், மாங்காயையும் ருசிக்கத் தவறிவிட்டால், நாம், இன்னும் 12 மாதங்கள் காத்திருக்க வேண்டும்.
குறிப்பாக, நகரங்களை விட கிராமங்களில் தான் மாங்காய் விளைச்சல் அதிகம். கிராமங்களிலும் வீடுகளிலும் மாமரம் இருக்கும் மாந்தோப்புகளும் இருக்கும். இதில் மாங்காய் சீசன் துவங்கும் போது மாந்தோப்புகளுக்கு பாதுகாப்பு போட்டு விடுவார்கள். இதனால் மாங்காய் திருடு போவது தவிர்க்கப்படும். மாமர விவசாயம் செய்பவர்களுக்கு நல்ல மகசூலும் கிடைக்கும்.

இப்படியாக ஒரு மாங்காய்க்கு z+ பாதுகாப்பு போடப்பட்டுள்ளது என சொன்னால் நம்புவீர்களா? ஐபிஎஸ் அதிகாரி விஜய் என்பவர் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த புகைபபடத்தில் ஒரு மாங்காயை சுற்றி தேனீக்கள் கூடு கட்டியுள்ளன. அதை பார்க்கும் போது அந்த மாங்காய்க்கு தேனிகள் பாதுகாப்பாக இருப்பது போல தெரிகிறது.

அந்த மாங்காயை யார் பறிக்க முயன்றாலும் அவர்களைத் தேனீக்கள் பதம்பார்த்துவிடும். இதனால் அவர் இந்த மாங்காய்க்கு z+ பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இந்த செய்தி சமூகவலைத்தளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

மேலும் படிக்க...

இதைக் குடித்தால், வெயிலுக்கும் Goodbye- அதிக Weightக்கும் Goodbye!

தூக்கத்தைத் தொலைத்தவரா நீங்கள்? இந்த ஒரே பானம் போதும்!

English Summary: Z + protection for mangoes!

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2025 Krishi Jagran Media Group. All Rights Reserved.