மோடி அரசு, ஜீரோ பட்ஜெட் இயற்கை விவசாயத்தை (ZBNF) பின்பற்றுமாறு விவசாயிகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது. ரசாயன உர விவசாயத்தை விட்டுவிட்டு இயற்கை விவசாயத்துக்கு பிரதமர் மோடி முக்கியத்துவம் அளித்து வருகிறார். கடந்த மாதம் தான், ஜீரோ பட்ஜெட் இயற்கை விவசாயம் குறித்து ஏற்பாடு செய்யப்பட்ட, ஒரு பெரிய நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்றார்.
இதன்பின், இயற்கை விவசாயத்தை கடைப்பிடிப்பது குறித்து வேளாண் அமைச்சகம் விவசாயிகளின் மொபைலுக்கு வேளாண்மை குறித்து மெசேஜ் அனுப்பி இருந்தது. ஆனால் இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சிலின் ( ICAR ) குழு, விவசாயிகள் பெரிய அளவில் ZBNF-ஐ ஏற்றுக்கொண்டால், அது உற்பத்தியில் பெரும் குறைப்புக்கு வழிவகுக்கும் என்று கூறியுள்ளது.
ICAR அமைத்த இந்த நிபுணர் குழுவின் தலைவரும், தெலுங்கானா மாநில வேளாண் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தருமான வி பிரவீன் ராவ் கூறுகையில், விவசாயிகள் செயற்கை இரசாயனங்கள் பயன்படுத்துவதை நிறுத்திவிட்டு, பண்ணையில் உள்ள உயிரிப்பொருட்களின் பயன்பாட்டை அதிகப்படுத்தினால், உற்பத்தி குறைய வாய்ப்பு உள்ளது. நாட்டின் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது இரண்டு பட்ஜெட் உரைகளில், ஜீரோ பட்ஜெட் இயற்கை விவசாயம், விவசாயிகளின் வருவாயை இரட்டிப்பாக்குவதற்கான முன்மாதிரி என்று விவரித்திருந்தார். ஆனால், ICAR குழுவின் கருத்து வேறுவிதமாக உள்ளது.
மானாவாரி பகுதிகளில் ZBNF பரிசோதனை (ZBNF testing in rainfed areas)
இந்த குழு விரைவில் தனது அறிக்கையை சமர்ப்பிக்கும் என தெரிகிறது. ZBNF இல் நீண்டகால களப் பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி, 16 பேர் கொண்ட வேளாண் விஞ்ஞானிகள் மற்றும் விவசாயிகள் குழு ZBNF குறித்த எதிர்கால ஆராய்ச்சிகள், பாசனப் பகுதிகளில் மட்டுமின்றி மானாவாரிப் பகுதிகளிலும் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளது. விவசாயிகள் பாசனப் பகுதிகளில் உற்பத்தியின் பெரும்பகுதியை உற்பத்தி செய்கிறார்கள்.
1970 களின் முற்பகுதியில் அதிக மகசூல் தரும் விதைகள், ரசாயன உரங்கள் மற்றும் உறுதியான நீர்ப்பாசனம் ஆகியவற்றின் மூலம் தொடங்கிய பசுமைப் புரட்சியானது அரிசி, கோதுமை, பருப்பு வகைகள் மற்றும் எண்ணெய் வித்துக்கள் போன்ற பல விவசாயப் பயிர்களை அதிக அளவில் உற்பத்தி செய்யும் நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது என்று வேளாண் விஞ்ஞானிகள் கூறுகின்றனர். கடந்த நான்கு தசாப்தங்களாக, ரசாயன உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகளின் அதிகப்படியான பயன்பாடு காரணமாக மண்ணின் வளம் குறைந்துள்ளது.
விவசாயிகள் பின்பற்ற வேண்டிய முறைகள் (Methods to be followed by farmers)
ஊடுபயிர், பயிர் பல்வகைப்படுத்தல் மற்றும் ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை ஆகியவற்றின் மூலம் ஜீரோ பட்ஜெட் இயற்கை விவசாயத்திலிருந்து ஒருங்கிணைந்த உற்பத்தி முறைக்கு மாற ICAR குழு பரிந்துரைத்துள்ளது. தெலுங்கானா மாநில வேளாண் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ராவ், ஏழு மாநிலங்களில் ZBNF-ஐ ஏற்றுக்கொண்டதாகக் கூறும் விவசாயிகளுடன் தொடர்புகொள்வதைத் தவிர, நிலையான விவசாயத்தை மேம்படுத்துவதற்கான பல்வேறு வழிகளில் ICAR குழு 1,400 க்கும் மேற்பட்ட அறிவியல் பத்திரிக்கைகளை ஆய்வு செய்துள்ளது.
மேலும் படிக்க:
Share your comments