7th Pay Commission லேடஸ்ட் நியூஸ் : மத்திய அரசு ஊழியர்களுக்கு சில உற்சாகமான செய்திகளை, இந்த பதிவில் பார்க்கலாம். எதிர்காலத்தில் ஃபிட்மென்ட் காரணி அதிகரிப்பை அரசு அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த செய்தியை பல ஊடகங்கள் உறுதி செய்துள்ளன. குறைந்தபட்ச அடிப்படை வருமானத்தை மாதம் ஒன்றுக்கு 18,000 ரூபாயில் இருந்து 26,000 ரூபாயாக உயர்த்துவதற்கு, ஃபிட்மென்ட் காரணியை அதிகரிப்பதில் அரசு கவனம் செலுத்தி வருகிறது.
மத்திய அரசு ஊழியர்கள் ஃபிட்மென்ட் காரணியை உயர்த்த வேண்டும் என நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதனால் குறைந்தபட்ச சம்பளம் மாதம் ரூ.18 ஆயிரத்தில் இருந்து ரூ. 26 ஆயிரமாக உயர்த்தப்பட்டும். இது விரைவில் அனைத்து மத்திய ஊழியர்களுக்கும் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விவகாரத்தில் அரசு மற்றும் ஊழியர்கள் சங்கம் ஒப்பந்தம் செய்து கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இப்போது மிதம் இருப்பது இந்த அறிவிப்பு மட்டுமே. அமைச்சரவை செயலாளரும், ஊழியர் சங்கமும் இதற்கு முன்னர் சந்தித்துள்ளனர். ஃபிட்மென்ட் காரணியில் அரசு கவனம் செலுத்தி வருவதாக, இந்தக் கூட்டத்தில் சங்கத்திற்கு உறுதியளிக்கப்பட்டது.
இந்த மாதம் முடிவு அறிவிக்கப்படும் (Decision To Be Announced This Month)
இந்த மாத இறுதிக்குள் முடிவெடுக்கும் என மத்திய அரசு ஊழியர்கள் எதிர்பார்த்துள்ளனர்.
தேர்தல் வரவிருப்பதாலும் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதாலும் காலதாமதம் ஏற்படும் என கூறப்படுகிறது. ஹோலி பண்டிகைக்கு முன்னதாக ஊழியர்கள், இந்த மாபெரும் பரிசைப் பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
அடிப்படை ஊதியம் ரூ 26,000 ஆக இருக்கும்
இந்த போனஸ் மூலம் மத்திய அரசு ஊழியர்களின் அடிப்படை ஊதியம் ரூ.26,000 ஆக உயரும். நிதி நிபுணர் அஜய் குமார் ஸ்ரீவஸ்தவாவின் கூற்றுப்படி, மத்திய அரசு ஃபிட்மென்ட் காரணியை உயர்த்தினால், மத்திய அதிகாரிகளின் சம்பளம் தவிர்க்க முடியாமல் உயரும். ஊழியர்களின் குறைந்தபட்ச அடிப்படை ஊதியம் ரூ.6,000-லிருந்து ரூ.18,000 ஆக உயர்த்தப்பட்டபோது, கடந்த 2016-ல் ஃபிட்மென்ட் காரணி உயர்த்தப்பட்டது. ஃபிட்மென்ட் காரணியில் திட்டமிடப்பட்ட அதிகரிப்பு குறைந்தபட்ச அடிப்படை ஊதியமாக ரூ.26,000 ஆக இருக்கலாம்.
உயர்வுக்கான கொடுப்பனவுகள்
அதே நேரத்தில் ஊழியர்களின் அகவிலைப்படியும் உயரும். அகவிலைப்படியானது அடிப்படை ஊதியத்தின் 31%க்கு சமமாக இருக்கும். அகவிலைப்படி விகிதத்தை அடிப்படை சம்பளத்துடன் பெருக்குவதன் மூலம், அகவிலைப்படி கணக்கிடப்படுகிறது. அதாவது, அடிப்படை வருமானம் உயரும்போது, அகவிலைப்படியும் உயரும். இது குறித்து பணியாளர்கள் மத்தியில் மகிழ்ச்சி நிலவுகிறது.
மேலும் படிக்க:
SBI, HDFC, ICICI வாடிக்கையாளர்களுக்கு குட் நியூஸ்: அது என்ன?
Share your comments