உணவு இல்லையேல் உயிர் இல்லை. அந்த வகையில், உயிர்வாழ உணவு மிக இன்றியமையாதது. இந்த உணவை சமைக்க சமையல் எரிவாயு சிலிண்டரின் தேவையும் மிக முக்கியமானது.
அடுப்பு எரிக்கும் பெண்கள் (Stove burning women)
நம் நாட்டில் வறுமையில் வாடும் குடும்பங்களைச் சேர்ந்த பெண்கள், தினமும், உணவு சமைப்பதற்காக, முள், சுள்ளி ஆகியவற்றை பொறுக்கி வந்து அடுப்பெரிப்பதை இன்றும் வழக்கமாகக் கொண்டுள்ளனர். இந்த நடைமுறைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாகவும், இல்லத்தரசிகளின் சுமையை எளிமையாக்குவதற்காக, பிரதமரின் உஜ்வாலா யோஜனா திட்டத்தை (Pradhan Mantri Ujjwala Yojana) மத்திய அரசு கொண்டுவந்தது.
குறிப்பாக வறுமைக் கோட்டுக்குக் கீழ் (BPL) இருக்கும் பெண்களுக்கு உதவுவதற்காக 2016ஆம் ஆண்டு உத்தரப் பிரதேச மாநிலத்தில் பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டத்தை மோடி அரசு அறிமுகம் செய்தது.
நாடு முழுவதும் வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழும் குடும்பங்களுக்கு ஐந்து கோடி சமையல் சிலிண்டர் இணைப்புகள் வழங்குவதே இந்தத் திட்டத்தின் இலக்கு. இத்திட்டத்திற்காக மத்திய அரசு ரூ.8,000 கோடியை ஒதுக்கியது. சுகாதாரமான எரிவாயுவை வழங்குவதே இத்திட்டத்தின் முக்கியமான நோக்கமாகும்.
தகுதி (Qualifications)
-
இலவச சமையல் சிலிண்டர் வாங்குவதற்கு வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ள குடும்பத்தைச் சேர்ந்த வயது வந்த பெண், ஏற்கெனவே சமையல் சிலிண்டர் இணைப்பு பெறாதவராக இருக்க வேண்டியது அவசியம்.
-
விண்ணப்பதாரர் இந்தியக் குடியுரிமை பெற்றிருக்க வேண்டும்.
-
பெண்ணின் பெயரிலேயே சிலிண்டர் இணைப்பு வழங்கப்படும்.
-
விண்ணப்பதாரர் வேறு எந்த சமையல் சிலிண்டர் திட்டத்திலும் பயனாளியாக இருக்கக்கூடாது.
-
பட்டியல் வகுப்பு/பழங்குடியின குடும்பங்கள், பிரதமரின் யோஜனா திட்டம், அந்த்யோத்யா அன்ன யோஜனா, காட்டுவாசிகள், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், தேயிலை மற்றும் முன்னாள் தேயிலைத் தோட்ட பழங்குடியினர், நதியோர தீவுகளில் வசிக்கும் மக்கள் ஆகிய ஏழு பிரிவுகளின் கீழ் பயனாளிகள் கண்டறியப்படுகின்றனர்.
தேவைப்படும் ஆவணங்கள் (Documents)
-
நகராட்சி தலைவர் (நகர்ப்புற பகுதி) அல்லது பஞ்சாயத்துத் தலைவர் (கிராமப்புற பகுதி) வழங்கிய வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ள மக்களுக்கான சான்றிதழ்
-
ஆதார் அல்லது வாக்காளர் அடையாள அட்டை
-
ரேஷன் அட்டை
-
அனைத்து குடும்ப உறுப்பினர்களின் ஆதார் எண்கள்
-
அண்மையில் எடுத்த பாஸ்போர்ட் சைஸ் போட்டோ
-
ஜாதிச் சான்றிதழ்
- முகவரிச் சான்று
-
விண்ணப்பதாரரின் ஒப்புதல் கடிதம்
-
ஜன் தன் வங்கிக் கணக்கு எண் அல்லது வங்கி பாஸ்புக்
விண்ணப்பிப்பது எப்படி? (How to apply)
இத்திட்டத்திற்கான விண்ணப்பப் படிவத்தை நிரப்பி தேவையான ஆவணங்களுடன் அருகிலுள்ள கேஸ் ஏஜென்சியில் சமர்ப்பிக்க வேண்டும்.
விதிகள்(Rules)
-
இலவச சமையல் சிலிண்டர் இணைப்பு பெறுவதற்கு பதிவு செய்யப்பட்ட செல்போன் எண் அவசியமாகும்.
-
முதல் முறையாக சிலிண்டர் இணைப்பு பெறும்போது அதற்கான தொகை பயனாளியின் வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்யப்படும்.
-
அதன் பின்னர் அவர் சிலிண்டருக்கான பணத்தைக் கொடுத்து சிலிண்டர் வாங்க வேண்டும்.
-
கொரோனா நெருக்கடி காலத்தில் அறிவிக்கப்பட்டதின் படி, கரீஃப் கல்யாண் யோஜனா திட்டத்தின் கீழ் 3 சிலிண்டர்கள் மட்டுமே இலவசமாக வழங்கப்படும்.
-
உஜ்வாலா திட்டத்தில் ஒரு மாதத்துக்கு ஒரு இலவச சிலிண்டர் மட்டுமே வாங்க முடியும்.
மேலும் படிக்க...
மிளகாய் பொடியில், கழுதை மலம் கலப்படம்- மக்களே உஷார்!
பருவநிலை மாற்றத்தைத் தாங்கக்கூடிய விவசாயத்தை உருவாக்க வேண்டும்!
Share your comments