மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டு திட்டம் (PMMSY) கீழ் உவர்நீர் இறால் வளர்ப்பிற்காக புதிய குளங்கள் அமைப்பதற்கு மானியம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோர் விண்ணப்பிக்கலாம் என நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சித்தலைவர் ப.ஆகாஷ், இ.ஆ.ப., தகவல் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் மீனவர்களின் வாழ்வாதரத்தை பெருக்கிடவும், உவர்நீர் இறால் வளர்ப்பினை அதிகரித்திடவும் அரசு பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன்படி பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டு திட்டம் (PMMSY) 2021-22-கீழ் உவர்நீர் இறால் வளர்ப்பிற்காக புதிய குளங்கள் அமைப்பதற்கு மானியம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. அவற்றின் விவரம் பின்வருமாறு-
40 முதல் 60 சதவீதம் மானியம்:
உவர்நீர் இறால் வளர்ப்பிற்காக புதிய குளங்கள் அமைப்பதற்கு 01 ஹெக்டேர் பரப்பிற்கு ஆகும் மொத்த செலவினம் ரூ.8.00 இலட்சத்தில் பொது பிரிவினருக்கு 40% மானியம் (ரூ.3.20 இலட்சம்) மற்றும் மகளிர் பிரிவினருக்கு 60% மானியம் (ரூ.4.80 இலட்சம்) வழங்கப்படுகிறது. மேலும் இக்குளங்களில் இறால் வளர்க்க உள்ளீடுகள் (இறால் குஞ்சு, தீவனம்) வழங்கும் திட்டத்தில் மொத்த செலவினம் ரூ.6.00 இலட்சத்தில் பொது பிரிவினருக்கு 40% மானியம் (ரூ.2.40 இலட்சம்) மற்றும் மகளிர் பிரிவினருக்கு 60% மானியம் (ரூ.3.60 இலட்சம்) வரை வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் மானிய தொகை பின்னேற்பு மானியமாக வழங்கப்படும் மற்றும் பெறப்படும் விண்ணப்பங்களில் மூப்பு நிலையின் அடிப்படையில் முன்னுரிமை அளித்து தேர்வு செய்யப்படும்.
இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோர் நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இயங்கி வரும் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர், நாகப்பட்டினம் அலுவலகத்தை தொடர்பு கொண்டு விண்ணப்பம் மற்றும் கூடுதல் விவரங்கள் பெற்று பயன்பெறலாம்.
சான்று அவசியம்:
மேலும் கடலோர நீர்வாழ் உயிரின வளர்ப்பு ஆணைய சட்டம் 2005 -ன் படி, கடலோர பகுதிகளில் உள்ள அனைத்து உவர்நீர் இறால் பண்ணைகளும் கடலோர நீர்வாழ் உயிரின வளர்ப்பு ஆணையத்தில் பதிவு செய்து பதிவு சான்று பெற வேண்டும்.
மேலும் பதிவு செய்யப்பட்ட இறால் பண்ணைகள் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை பதிவினை புதுப்பிக்க வேண்டும். மேலும் உயிர் பாதுகாப்பு முறைகள் அமைத்து இறால் வளர்க்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார்.
சாகர் மித்ரா- 02 காலிப்பணியிடம்:
நாகப்பட்டினம் மாவட்டம் வெள்ளப்பள்ளம் மற்றும் அண்ணாபேட்டை மீனவ கிராமங்களில் பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ஒப்பந்த அடிப்படையிலான பணியாளர் (சாகர் மித்ரா) 02 காலிபணியிடம் உள்ளது. அப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அவற்றின் விவரம் பின்வருமாறு-
அத்தியாவசிய தகுதிகள்: குறைந்தபட்ச கல்வி தகுதி இளங்கலை பட்டபடிப்பில் மீன்வள அறிவியல் (Fisheries Science) / கடல் உயிரியல் (Marine Biology) / விலங்கியல் (Zoology). மேற்கண்ட கல்வி தகுதியில் விண்ணப்பதாரர்கள் இல்லாதபட்சத்தில் பிற கல்வி தகுதியான வேதியல்(Chemistry)/தாவரவியல்(Botany) /உயிர் வேதியியல் (Bio-chemistry) /நுண்ணுயிரியல்(Micro biology) / இயற்பியல் (Physics) தகுதியானதாக கருதப்படும்.
யாருக்கெல்லாம் முன்னுரிமை:
மேலும் தகவல் தொழில்நுட்பம் அறிந்திருந்தால் முன்னுரிமை அளிக்கப்படும். தகுதி வரம்புகள் விண்ணப்பதாரர் தொடர்புடைய மாவட்டத்தில் சம்மந்தப்பட்ட வட்டத்தில் மீனவ கிராமம் / வருவாய் கிராமத்தை சேர்ந்த உள்ளூர் நபராக இருத்தல் வேண்டும். சம்மந்தப்பட்ட மீனவ கிராமம் / வருவாய் கிராமம் / தாலுக்காவில் விண்ணப்பதாரர்கள் இல்லாத பட்சத்தில் சம்மந்தப்பட்ட மாவட்டத்தில் உள்ள அண்மை கிராமம் / வருவாய் கிராமம் / வட்டத்தில் வசிக்கும் நபராக இருத்தல் வேண்டும்.
Read also: நல்ல மகசூல் தரும் கோ 10 கம்பு வீரிய ஒட்டு இரகத்தின் சாகுபடி தொழில்நுட்பம்!
வயது வரம்பு:
வயது வரம்பு 01.07.2024-ல் உள்ளவாறு 35 வயதுக்குள் இருத்தல் வேண்டும். வேலைத்திறன் அடிப்படையில் ஊக்கத்தொகை ரூ.15000/-மாதம் வழங்கப்படும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம் அளிப்பதற்கான கடைசி நாள்: 30.09.2024. முழுமையாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தினை மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் நாகப்பட்டினம் அலுவலகத்தில் அளித்திட வேண்டும்.
அனுப்ப வேண்டிய முகவரி: மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகம், ஒருங்கிணைந்த மீன்வளத்துறை அலுவலக கட்டிடம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், நாகப்பட்டினம்.
Read more:
வேளாண் துறையின் சவால்கள்- TNAU சார்பில் குளோபல் நானோ கனெக்ட் மாநாடு
செயல்விளக்க கண்காட்சியுடன் காந்திகிராம வேளாண் அறிவியல் மையத்தில் பொன்விழா ஜோதி தொடரோட்டம்!
Share your comments