பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் மானியத் தொகை உயர்வு - விழுப்புரம் மாவட்ட பயனாளிகளுக்கு அழைப்பு!

KJ Staff
KJ Staff
Free House
Credit : Pinterest

விழுப்புரம் மாவட்டத்தில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின வகுப்பை சார்ந்த தகுதியான 3,862 பயனாளிகளுக்கு, உயர்த்திய அரசு மானியத்தில் (Subsidy) இலவச வீடுகள் கட்டிக் கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில், கடந்த 2011ம் ஆண்டு, சமூக பொருளாதார சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில், அனைத்து சமூகத்தினரும் இடம் பெற்றுள்ளனர்.

பிரதம மந்திரி குடியிருப்பு திட்டம்:

கடந்த 2019-20ம் ஆண்டு, ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின வகுப்பை சார்ந்த தகுதியான பயனாளிகளாக 3,862 பேர் பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தின் (Prime Minister's Housing Scheme) கீழ் இலவச வீடுகள் கட்டித்தர தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்த பயனாளிகள் விபரம் www.villupuram.nic.in இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இவர்களுக்கு, அந்த வீடுகள் கட்டுவதற்கான வேலை உத்தரவு வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ், ஒரு வீடு கட்டுவதற்கு மத்திய, மாநில அரசு பங்குத் தொகையாக 1 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. அதோடு, மாநில அரசின் மேற்கூரை நிதி (Roofing finance) 50 ஆயிரம் ரூபாய், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் மூலம் 90 திறன் சாரா மனித சக்தி நாட்களுக்கு, 23 ஆயிரத்து 310 ரூபாய் மற்றும் தனிநபர் வீட்டு கழிவறை கட்ட 12 ஆயிரம் ரூபாய் மானியம் (Subsidy) உட்பட மொத்தம் 2 லட்சத்து 5 ஆயிரத்து 310 ரூபாய் வழங்கப்பட்டது.

கான்கிரீட் வீடு:

தமிழக அரசு மேற்கூரை நிதியை 70 ஆயிரம் ரூபாய் கூடுதலாக உயர்த்தி, மொத்தம் 2 லட்சத்து 75 ஆயிரத்து 310 ரூபாய் அரசு மானியமாக வழங்கப்படுகிறது. இந்த வாய்ப்பை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின வகுப்பை சார்ந்த பட்டா இருந்தும் கான்கிரீட் வீடு (Concrete house) இல்லாத பயனாளிகள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை:

பயனாளிகள், வீட்டு மனை பட்டா, வங்கி கணக்கு எண் (Bank Account), தேசிய ஊரக வேலை உறுதி அட்டை எண் ஆகிய முழு விபரங்களை சம்பந்தபட்ட வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் வழங்கி இத்திட்டத்தில், உயர்த்திய அரசு மானியத்தில் இலவச வீடு (Free house) பெற்று கொள்ளலாம். இது சம்பந்தமான கூடுதல் விபரங்களுக்கு, வட்டார அளவில் சம்பந்தபட்ட பி.டி.ஓ.,க்களையும், மாவட்ட அளவில், ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலரை (வீடுகள் மற்றும் சுகாதாரம்) தொடர்பு கொள்ளலாம்.

தொடர்புக்கு:

பி.டி.ஓ.,க்கள் மொபைல் எண்கள்

  1. காணை 74026 06366,
  2. கோலியனுார் 74026 06371,
  3. கண்டமங்கலம் 74026 06376,
  4. விக்கிரவாண்டி 74026 06381,
  5. ஒலக்கூர் 74026 06386,
  6. மயிலம் 74026 06391,
  7. செஞ்சி 74026 06408,
  8. வல்லம் 74026 06414,
  9. மேல்மலையனுார் 74026 06420,
  10. மரக்காணம் 74026 06396,
  11. வானுார் 74026 06402,
  12. முகையூர் 74026 06345,
  13. திருவெண்ணெய்நல்லுார் 74026 06351.

Kishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்

மேலும் படிக்க

செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் இணையவதற்கு, ரோட்டரி கிளப் இலவச உதவி! பெற்றோர்களுக்கு அழைப்பு!

ஆன்லைனில் டிஜிட்டல் அக்கௌன்ட்! SBI வங்கியின் புதிய திட்டம்!

English Summary: Grant increase in PM's housing scheme - Villupuram district calls on beneficiaries! Published on: 07 January 2021, 08:37 IST

Like this article?

Hey! I am KJ Staff. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.