விவசாயிகள் குறைந்த வட்டியில் குறுகியகாலக் கடன் பெற உதவும் வகையில் மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ள திட்டமே கிசான் கிரெடிட் கார்டு திட்டம்.
அதிலும் பொருளாதாரத் தேவையை எதிர்கொள்ளமுடியாமல் தவிக்கும் விவசாயிகளுக்கு உடனுக்குடன் கடன் வழங்க ஏதுவாக இந்தத் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.
2.5 லட்சம் பேர் (2.5Lakh)
இந்தத்திட்டத்தில் இதுவரை 2.5 லட்சம் விவசாயிகள் கிசான் கிரெடிட் கார்டு (Kisan Credit Card KCC)வழங்கப்பட்டுள்ளது. மேலும், 2.5 கோடி விவசாயிகளுக்கு கிசான் கிரெடிட் கார்டுகள் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சிறப்பு அம்சம் (Features)
-
இந்த கிசான் கிரெடிட் கார்டுகள் மூலமாக விவசாயிகள் அதிகபட்சமாக ரூ.3 லட்சம் வரை கடன் பெற முடியும்.
-
வேளாண் பணிகளுக்கும், வேளாண் கருவிகள் வாங்கவும் கடன் அளிக்கப்படுகிறறது.
ரூ.1.60 லட்சம் வரை எந்தவித உத்தரவாதமும் இல்லாமல் குறைந்த வட்டியில் கடன் வழங்கப்படுகிறது.
-
கிசான் கிரெடிட் கார்டுகளுக்கான செயல்முறை கட்டணங்கள் (processing fee) உள்ளிட்ட பல்வேறு கூடுதல் கட்டணங்களை மத்திய அரசு ஏற்கெனவே ரத்து செய்துவிட்டது.
-
இத்திட்டத்தின் கீழ் 2 % வட்டிக்கு கூட கடன் வழங்கப்படுகிறது.
தகுதி (Qualify)
-
கால்நடை விவசாயம், மீன் வளர்த்தல் மற்றும் வேளாண்மை சார்ந்த எந்தவொரு நபரும் கிசான் கிரெடிட் கார்டுகளுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்தான்.
-
மற்றவர்கள் நிலத்தில் விவசாயத் தொழில் செய்யும் விவசாயிகளும் இதற்கு விண்ணப்பிக்கலாம்.
-
18 முதல் 75 வயது வரம்பிலானவர்கள் மட்டுமே விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.
-
60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு துணை விண்ணப்பதாரர் கட்டாயம் அவசியம்.
வங்கிகள் (Banks)
கிசான் கிரெடிட் கார்டை பெற ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, ஆக்சிஸ் பேங்க், இந்தியன் ஓவர்சீஸ் பேங்க், ஹெச்டிஎஃப்சி பேங்க் என உங்களுக்கு விருப்பமான வங்கியை தேர்ந்தெடுத்து அந்த வங்கியின் இணையதளத்தில் விண்ணப்பத்தை டவுன்லோட் செய்து ப்ரிண்ட் எடுத்துக்கொள்ள வேண்டும்.
தேவைப்படும் ஆவணங்கள் (Documents)
விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து ஆதார் அட்டை, பான் அட்டை, 100 வேலை திட்ட அட்டை, வாக்காளர் அட்டை போன்ற ஏதேனும் ஒரு ஆவணத்துடன் சேர்த்து, நில ஆவணங்கள், பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, கூடுதலாக வங்கி கேட்கும் ஆவணங்களுடன் வங்கிக் கிளையில் சமர்ப்பிக்க வேண்டும்.
கடன் தொகைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டவுடன் விண்ணப்பதாரரின் வீட்டிற்கு கிசான் கிரெடிட் கார்டு அனுப்பப்படும். இதனைக்கொண்டு, கார்டு உரிமையாளர்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கிக் கொள்ளலாம். கடன் தொகைக்கு மட்டுமே அரசு வட்டி வசூலிக்கும்.
திருப்பி செலுத்துதல் (Repayment)
3 ஆண்டுகள் வரை கடன் பெற முடியும்.இந்தக் கடனை அறுவடைக் காலங்களில்கூட விவசாயிகள் திருப்பிச் செலுத்தும் வசதியும் உள்ளது.
மேலும் படிக்க...
80% அரசு மானியத்தில் அசத்தல் வியாபாரம்- முழு விபரம் உள்ளே!
தினமும் ரூ.160 செலுத்தி ரூ.23 லட்சத்தை அள்ளுங்கள்- LICயின் Money back Plan!
PM SVANidhi Mobile App மூலம் ரூ.10ஆயிரம் உடனடிக் கடன்-ஆத்ம நிர்பார் பாரத் அபியான் திட்டம்!
Share your comments