எதிர்கால வாழ்க்கைக்கு இன்றியமையாதது சேமிப்பு. ஆனால், அவை எந்த அளவிற்கு சேமிக்க முடியும் என்று யாராலும் கூற இயலாது. அரசு வேலைகள் அல்லது பெரிய அளவிலான தனியார் பணிகளில் இருப்பவர்களுக்கு பணிக்காலத்திற்குப் பிறகு பொதுவாக ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. ஆனால், விவசாயிகள் மற்றும் பிற சிறு குறு தொழிலாளர்களுக்கு இந்த ஓய்வூதியம் கிடையாது. அவர்களின் வாழ்க்கையின் பாதுகாப்பிற்கென மத்திய மாநில அரசுகள் சில நல்ல ஓய்வூதிய திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
நீங்கள் விவசாயிகள், சிறுகுறு தொழிலாளர்களாக இருந்தால் சிறிய முதலீடுகளை செலுத்துவதன் மூலம் உங்கள் எதிர்காலத்தை எவ்வாறு பாதுகாக்க முடியும் என்பது பற்றிய தகவல்களை இங்கே கொடுத்துள்ளோம். கோடிக்கணக்கான விவசாயிகளின் எதிர்காலத்தைப் பாதுகாக்க அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதுபோன்ற திட்டங்களில் சிறந்த நான்கு திட்டங்களின் பட்டியல் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.
பிரதான் மந்திரி கிசான் மன்தன் யோஜனா
இந்த திட்டம் விவசாயிகளுக்கானது. PMKY திட்டத்தின் மூலம் 60 வயதைக் கடந்த விவசாயிகளுக்கு மாதந்தோறும் ரூ.3000 ஓய்வூதியம் கிடைக்கச் செய்கிறது. இந்த திட்டத்தில் சிறு குறு விவசாயிகள் வைத்திருக்கும் நிலத்தால் பயனடையலாம். ஆண் அல்லது பெண் பேதம் கிடையாது, இருவரும் தகுதியானவர்கள். இந்த திட்டத்தின் பலன்களைப் பெற, நீங்கள் 18 வயது உடையவாக இருந்தால் அடுத்த 40 ஆண்டுகளுக்கு மாதந்தோறும் ரூ. 55 மட்டுமே செலுத்த வேண்டியது இருக்கும். பின்னர் உங்களுக்கு ஓய்வூதியமாக ரூ.3000 வழங்கப்படும். மேலும், உங்கள் வயது 30 வயது என்றால், நீங்கள் ரூ.110ம், 40 வயது என்றால் ரூ.200 என உங்கள் 60 வயது வரை செலுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
அடல் ஓய்வூதிய திட்டம் (Atal Pension Yojana)
அமைப்புசாரா துறையில் உள்ள அனைவருக்கும் அரசாங்கத்தால் நடத்தப்படும் திட்டம் தான் இந்த அடல் ஓய்வூதிய திட்டம் (Atal Pension Yojana). இந்த திட்டத்தை 18 முதல் 40 வயதிலும் பெறலாம். இந்த திட்டத்தின் கீழ் உங்கள் கணக்கைத் திறக்க, நீங்கள் அருகிலுள்ள வங்கி அல்லது தபால் நிலையத்தைப் அணுகி கூடுதல் தகவல்களை கேட்டு பெற்றிடுங்கள். நீங்கள் முதலீடு செய்ய வரும்பினால் ரூ.210 வீதம் அடுத்த 40 ஆண்டுகளுக்கு செலுத்தி வந்தால் 60 வயதை எட்டிய பிறகு ரூ.5000 ஓய்வூதியமாக வழங்கப்படும்.
பிரதான் மந்திரி ஷ்ரம் யோகி மன்தன் யோஜனா (Pradhan Mantri Shram Yogi Maan-Dhan Yojana)
பிரதான் மந்திரி ஷ்ரம் யோகி மன்தன் யோஜனா திட்டமும் அமைப்புசாரா துறைகளில் உள்ள தொழிலாளர்களுக்கானது. இது ஒரு தன்னார்வ மற்றும் பங்களிப்பு ஓய்வூதிய திட்டமாகும், இந்த திட்டத்தின் கீழ் நீங்கள் குறைந்தபட்சம் உறுதிசெய்யப்பட்ட மாத ஓய்வூதியம் ரூ. 60 வயதை கடந்த பிறகு ரூ.3000, மற்றும் பயனாளர் இறந்துவிட்டால், அவரது துணைவிக்கு 50% ஓய்வூதியத்தை குடும்ப ஓய்வூதியமாகப் பெற உரிமை உண்டு. குடும்ப ஓய்வூதியம் துணைவிக்கு மட்டுமே பொருந்தும். 18 முதல் 40 வயதுக்குட்பட்ட விண்ணப்பதாரர்கள் மாதாந்தம் ரூ. 55 முதல் ரூ.200 வரை அவர்கள் 60 வயதை எட்டும் வரை செலுத்த வேண்டும்.
வர்த்தகர்கள் & சுயதொழில் செய்பவர்களுக்கான தேசிய ஓய்வூதிய திட்டம் யோஜனா
இந்த திட்டம் குறிப்பாக முதியோரின் பாதுகாப்பு மற்றும் எதிர்கால பாதுகாப்பிற்காக செயல்படுகிறது. ஆண்டு வருவாய் ரூ. 1.5 கோடி அல்லது அதற்கும் குறைவாக உள்ளவர்களும், 18-40 வயதுக்குட்பட்டவர்களாக இருப்பவர்கள் இந்த திட்டத்தில் பயன் பெறலாம். பயனாளி EPFO / ESIC / NPS / PM-SYM இன் உறுப்பினராகவோ அல்லது வருமான வரி செலுத்துவோராகவோ இருக்கக்கூடாது. நீங்கள் மாத பங்களிப்பாக ரூ. 55 முதல் 200 வரை, உங்கள் 60 வயதை எட்டும் வரை செலுத்த வேண்டும். இதில், பயனாளியின் 60 வயதிற்குப் பிறகு மாதத்திற்கு குறைந்தபட்சம் ரூ.3000 வரை ஓய்வூதியம் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க...
இந்தியர் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசம்! - மத்திய அரசு தகவல்!!
தோட்டக்கலைப் பயிர்களில் நுண்ணீர் பாசனம் அமைக்க மானியம் - விண்ணப்பிக்க அழைப்பு!!
விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து வான் சாகசம் செய்த NRI பெண்!
துத்தநாக சத்துப் பற்றாக்குறையைப் போக்கும் ஜிங்க் சல்பேட்- விவசாயிகள் கவனத்திற்கு!
Share your comments