PMMSY- KIOSK: நவீன மீன் அங்காடி அமைக்க 6 லட்சம் வரை மானியம்! முழு விவரம்

Muthukrishnan Murugan
Muthukrishnan Murugan
6 lakhs for setting up modern fish shop

திருப்பத்தூர் மாவட்டத்தில் மீன் வளர்க்க ஆர்வமுள்ள விவசாயிகள் பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டு திட்டத்தின் (PMMSY - 2023-24 )கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் மூலம் பயனடைய விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் தெரிவித்துள்ளார். இதுத்தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பின் விவரம் பின்வருமாறு-

கீழே பட்டியலிடப்பட்டுள்ள இத்திட்டத்தில் இம்மாவட்ட இலக்குக்கு அதிகமாக விண்ணப்பங்கள் பெறப்படுமாயின் பயனாளர்கள் முன்னுரிமை மற்றும் தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் எனவும் மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. திட்டம் மற்றும் மானிய விவரங்கள் முறையே-

புதிய மீன்வளர்ப்பு குளங்கள்:

புதிய மீன் வளர்ப்பு குளங்கள் அமைத்திட திருப்பத்தூர் மாவட்டத்திற்கு 0.5 ஹெக்டர் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் 1.0 ஹெக்டேருக்கு ஆகும் செலவின தொகை ரூ.7,00,000/-ல் பொதுப்பயனாளிகளுக்கு (GC) 40% மானியம் ரூ. 2,80,000/- பெண்கள் மற்றும் ஆதிதிராவிட பயனாளிகளுக்கு (SC) 60% மானியம் ரூ. 4,20,000/- மானியமாக வழங்கப்படும்.

நன்னீர் மீன்வளர்ப்பு குளங்களுக்கு உள்ளீட்டு மானியம்:

நன்னீர் மீன்வளர்ப்பு குளங்களுக்கு உள்ளீட்டு மானியம் வழங்குதல் திட்டத்திற்கு திருப்பத்தூர் மாவட்டத்திற்கு 0.5 ஹெக்டர் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் 1.0 ஹெக்டேருக்கு ஆகும் செலவின தொகை ரூ.4,00,000/-ல் பொதுப்பயனாளிகளுக்கு (GC) 40% மானியம் ரூ.1,60,000/- பெண்கள் மற்றும் ஆதிதிராவிட பயனாளிகளுக்கு (SC) 60% மானியம் ரூ.2,40,000/- மானியமாக வழங்கப்படும்.

சிறிய அளவிலான பயோபிளாக் குளங்கள் அமைத்தல்:

சிறிய அளவிலான பயோபிளாக் குளங்கள் அமைத்தல் திட்டத்திற்கு திருப்பத்தூர் மாவட்டத்திற்கு ஒரு (1) அலகு இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் அலகு ஒன்றிற்கு ஆகும் செலவின தொகை ரூ.7,50,000/-ல் பொதுப்பயனாளிகளுக்கு (GC) 40% மானியம் ரூ.3,00,000/- பெண்கள் மற்றும் ஆதிதிராவிட பயனாளிகளுக்கு (SC) 60% மானியம் ரூ.4,50,000/- மானியமாக வழங்கப்படும்.

வீட்டின் பின்புறம்/கொல்லைபுற அலங்கார மீன்வளர்ப்பு:

வீட்டின் பின்புறம்/கொல்லைபுற அலங்கார மீன்வளர்ப்பு திட்டத்திற்கு அலகு ஒன்றிற்கு ஆகும் செலவின தொகை ரூ.3,00,000/-ல் பொதுப்பயனாளிகளுக்கு (GC) 40% மானியம் ரூ. 1,20,000/- பெண்கள் மற்றும் ஆதிதிராவிட பயனாளிகளுக்கு (SC) 60% மானியம் ரூ. 1,80,000/- மானியமாக வழங்கப்படும்.

நடுத்தர அளவிலான அலங்கார மீன்வளர்ப்பு:

நடுத்தர அளவிலான அலங்கார மீன்வளர்ப்பு திட்டத்திற்கு அலகு ஒன்றிற்கு ஆகும் செலவின தொகை ரூ.8,00,000/-ல் பொதுப்பயனாளிகளுக்கு (GC) 40% மானியம் ரூ.3,20,000/- பெண்கள் மற்றும் ஆதிதிராவிட பயனாளிகளுக்கு (SC) 60% மானியம் ரூ.4,80,000/- மானியமாக வழங்கப்படும்.

நவீன மீன் அங்காடி (KIOSK):

நவீன மீன் அங்காடி (KIOSK) திட்டத்திற்கு அலகு ஒன்றிற்கு ஆகும் செலவின தொகை ரூ.10,00,000/-ல் பொதுப்பயனாளிகளுக்கு (GC) 40% மானியம் ரூ.4,00,000/- பெண்கள் மற்றும் ஆதிதிராவிட பயனாளிகளுக்கு (SC) 60% மானியம் ரூ. 6,00,000/- மானியமாக வழங்கப்படும்.

குளிரூட்டப்பட்ட நான்கு சக்கர வாகனம்:

குளிரூட்டப்பட்ட நான்கு சக்கர வாகனம் அலகு ஒன்றிற்கு ஆகும் செலவின தொகை ரூ.20,00,000/-ல் பொதுப்பயனாளிகளுக்கு (GC) 40% மானியம் ரூ.8.00,000/- பெண்கள் மற்றும் ஆதிதிராவிட பயனாளிகளுக்கு (SC) 60% மானியம் ரூ. 12,00,000/- மானியமாக வழங்கப்படும்.

Read more: பாசிப்பயறு மற்றும் நிலக்கடலையில் புதிய இரகம் வெளியீடு- கைக்கொடுக்குமா விவசாயிகளுக்கு?

குளிர்காப்பு பெட்டியுடன் கூடிய இருசக்கர வாகனம்:

குளிர்காப்பு பெட்டியுடன் கூடிய இருசக்கர வாகனம் அலகு ஒன்றிற்கு ஆகும் செலவின தொகை ரூ.75,000/-ல் பொதுப்பயனாளிகளுக்கு (GC) 40% மானியம் ரூ.29,319/- பெண்கள் மற்றும் ஆதிதிராவிட பயனாளிகளுக்கு (SC) 60% மானியம் ரூ.44,319/- மானியமாக மீனவர் கூட்டுறவு சங்க உறுப்பினர்களுக்கு வழங்கப்படும்.

மேலும் இத்திட்டத்தில் பயன் பெற விரும்புபவர்கள் உடனடியாக மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர், வேலூர் அலுவலகத்தை (எண்.16,5-வது மேற்கு குறுக்கு தெரு, காந்திநகர், காட்பாடி, வேலூர்- 632006) (அலுவலக தொலைபேசி எண். 0416- 2240329, அலைபேசி எண். 75400 09947, மின்னஞ்சல் adfifvellore1@gmail.com) தொடர்பு கொண்டு உரிய விண்ணப்பம் பெற்று விண்ணப்பிக்குமாறு மாவட்ட ஆட்சியர் க.தர்ப்பகராஜ் தெரிவித்துள்ளார்.

Read more:

நெல்லில் விதை உறக்கம்- என்ன செய்து நீக்கலாம்? வல்லுநர்களின் விளக்கம்

அரசின் மானியத்தோடு வீட்டுக் கொல்லைப்புறத்தில் அலங்கார வண்ண மீன் வளர்ப்பது எப்படி?

English Summary: In PMMSY KIOSK scheme Grant up to 6 lakhs for setting up modern fish shop Published on: 06 March 2024, 03:40 IST

Like this article?

Hey! I am Muthukrishnan Murugan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.