கொரோனா ஊரடங்கையொட்டி புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கும் PM- kisan திட்டத்தின் மூலம் 2000 ரூபாய் வழங்கப்படும் என்றும், உரிய பயனாளிகள் விண்ணப்பித்து பயனடையலாம் என மத்திய வேளாண் துறை அமைச்சர் கைலாஷ் சவுத்ரி கூறியுள்ளார் .
புலம்பெயர்ந்த தொழிலாளர்கள்
கொரோனா தொற்று நோய் மற்றும் ஊரடங்கு போன்ற காரணங்களால் பல புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்களில் வேலையை இழந்து வாழ்வாதரத்திற்காக மீண்டும் அவர்களின் சொந்த கிராமங்களுக்கு திரும்பியுள்ளனர். பெரும்பாலான தொழிலாளர்கள் விவசாய சமூகத்துடன் தொடர்புடையவர்கள் என்பதால், பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனா திட்டத்தின் கீழ் (PM Kisan Samman Nidhi Yojana)புலம்பெயர்ந்த தொழிலாளர்களும் இணையலாம் என்று மத்திய வேளாண் துறை அமைச்சர் கைலாஷ் சவுத்ரி கூறியுள்ளார். மேலும், அவர்களுக்கும் விவசாயிகளைப் போன்று ரூ.2000 உதவித்தொகை அவரவர்களது வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
தற்போதைய நெருக்கடி சூழ்நிலையில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் நிலையை கருத்தில் கொண்டு மத்திய அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாகவும், பிரதான் மந்திரி கிசான் திட்டத்தின் பயனைப் பெற வேளாண் நிலத்தின் ஆவணங்களைத் தவிர, வங்கி கணக்கு எண் மற்றும் ஆதார் எண் ஆகியவை அவசியம் என்றும் மத்திய அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
பலனடையாத 70லட்சம் விவசாயிகள்
இத்திட்டத்தின் கீழ், இது வரை மத்திய அரசு ஐந்து தவணைகளில் விவசாயிகளுக்கு பணம் வழங்கியுள்ளது. இந்நிலையில், நிதி பெற விண்ணப்பித்த விவசாயிகளில் சுமார் 70 லட்சம் பேருக்கு சிறு சிறு தவறுகளால் நிதியுதவி கிடைக்கப்பெறவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன. பி.எம் கிசான் திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு 14.5 கோடி விவசாயிகளுக்கு பணம் வழங்கப்பட உள்ளது. ஆனால் இதுவரை 9.68 கோடி விவசாயிகள் மட்டுமே இதன் பலனை அடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மீண்டும் வாய்ப்பு
பிரதான் மந்திரி கிசான் திட்டத்தின் கீழ் நிதியைப் பெற விவசாயிகள் பதிவுசெய்திருந்தும், பணம் கிடைக்கப்பெறவில்லை எனில், உங்கள் ஆவணத்தில் தவறுகள் இருக்கலாம் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். அதாவது உங்கள் ஆதார் அட்டை அல்லது வங்கி கணக்கு எண் தொடர்பான தகவல்களை தவறாக பதிவாகி இருக்கலாம் என்றும் கூறுகின்றனர்.
இந்நிலையில் இந்த விடுபட்ட விவசாயிகளுக்கு உதவும் வகையில் தவறுகளை சரிசெய்து மீண்டும் விண்ணப்பித்து பலனை பெற மத்திய அரசு வழிவகை செய்துள்ளது.
அதன்படி, பிரதான் மந்திரி கிசான் திட்டத்தின் அதிகாரபூர்வ இணையதளத்திற்கு https://pmkisan.gov.in/ சென்று உங்களின் தவறுகளை சரி செய்துக்கொள்ள முடியும். உங்கள் பெயரில் வேறு ஏதேனும் தவறு இருந்தால், நீங்கள் உங்கள் கணக்காளர் அல்லது வேளாண் துறை அலுவலகத்தை தொடர்பு கொள்ள வேண்டும் என்றும் மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க...
பால் போல் வெண்மையான முகம் பெற இதை செய்தால் போதும்!
பதநீரைக் குளிர்பானமாக மாற்ற புதிய திட்டம்
PAN card வைத்திருப்பவர்கள் இதனை உடனே செய்யுங்கள்
Share your comments