PKVY : புதிய முறையில் இயற்கை விவசாயத்திற்கு ரூ.50,000 வழங்கும் மத்திய அரசு! முழு விபரம் உள்ளே!

Daisy Rose Mary
Daisy Rose Mary
Credit : Agriculture post

இயற்கை விவசாயம் செய்ய விருப்பமா? இயற்கை விவசாய முறைகளை அறிவது எப்படி? அதற்கான தகவல்கள் எங்கே கிடைக்கும்? இவைகளைத்தான் நீங்கள் தேடுகிறீர்கள் என்றால் இந்த செய்தித் தொகுப்பு உங்களுக்காகத்தான்.

பாரம்பரிய விவசாயத் திட்டம்

இயற்கை வேளாண் முறைகளை ஊக்குவிக்க மத்திய மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. ஆனால், இந்த இயற்கை விவசாயம் குறித்த ஒரு முழுமையான புரிதல் பெரும்பாலான விவசாயிகளிடம் இருப்பதில்லை. இதற்கெனவே, மத்திய அரசு பரம்பரகத் கிருஷ் விகாஷ் யோஜனா (பாரம்பரிய விவசாயத் திட்டம்) ஒன்றை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தின் மூலம் இயற்கை விவசாயம் செய்யும் வருவர் ஒரு ஹெக்டேருக்கு ரூ.50,000 வரை பெற முடியும்.

PKVY என்றால் என்ன?

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு தொடர்ந்து இயற்கை வேளாண்மையை ஊக்குவித்து வருகிறது, மேலும் பரம்பரகத் கிருஷி விகாஷ் யோஜனா என்ற பாரம்பரிய வேளாண் திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டம் 2015-இல் தொடங்கப்பட்டது. இது மத்திய அரசு நிதி நிர்வாகம் மற்றும் நிலையான வேளாண்மைக்கான தேசிய மிஷன் ஆகியவற்றின் கீழ் நீடித்த மண் சுகாதார மேலாண்மை கொண்டுள்ளது.

இந்த திட்டத்தின் கீழ், 50 அல்லது அதற்கு மேற்பட்ட விவசாயிகள் இயற்க வேளாண் முறையை மேற்கொண்டு 50 ஏக்கர் நிலப்பரப்பு கொண்ட ஒரு இயற்கை வேளாண் பண்ணையை (கிளஸ்டர்) உருவாக்குகின்றனர்.

PKVY திட்டத்தில் நிதியுதவி

இந்த பாரம்பரிய வேளாண் திட்டத்தின் கீழ் விவசாயம் செய்யும் விவசாயிகளுக்கு மத்திய மற்றும் மாநில அரசால் 60:40 என்ற விகிதத்தில் நிதியுதவி வழங்கப்படுகிறது. மற்றும் வடகிழக்கு மற்றும் இமயமலை சார்ந்த மாநிலங்களுக்கு மத்திய மற்றும் மாநில அரசுகள் 90:10 என்ற விகிதத்திலும், மேலும், யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு 100% நிதியுதவி வழங்குகிறது.

ரூ.50,000 அள்ளித்தரும் PKVY

புதிதாக இயற்கை விவசாயம் மேற்கொள்ள விரும்பும் விவசாயிகளுக்கு 3 ஆண்டுகளுக்கு ரூ.50,000 வழங்கப்படுகிறது. மத்திய அரசு சார்பில் ரூ.31000 அதாவது 61% வழங்கப்படுகிறது. இயற்கை விவசாயத்திற்கு தேவையான உரம், பூச்சிக்கொல்லி மருந்துகள் மற்றும் மண்புழு உரம் போன்றவற்ற வாங்குவதற்காக இந்த நிதியுதவி வழங்கப்படுகிறது.

இயற்கை வேண்மைக்கான சான்றிதழ்

இயற்கை வேளாண்மைக்கான சான்றிதழைப் பெற, நீங்கள் ஒரு முகவர் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
PKVY திட்டத்தின் கீழ், கிளஸ்டர் அணுகுமுறை மற்றும் PGS சான்றிதழ் மூலம் இயற்கை வேளாண் கிராமத்தை உருவாக்குவதன் மூலம் இயற்கை வேளாண்மை ஊக்குவிக்கப்படுகிறது.

PGS - பி.ஜி.எஸ் என்பது இயற்கை விளை பொருட்களை சான்றளிக்கும் ஒரு செயல்முறையாகும். மேலும் உற்பத்தி மற்றுத் நிர்ணயிக்கப்பட்ட தரச் சான்றுகளை உறுதி செய்கிறது. இந்த சான்றிதழ் ஒரு ஆவண அறிக்கையின் வடிவத்தில் வழங்கப்படுகிறது.

இயற்கை வேளாண் முறை குறித்த கூடுதல் தகவல்களைப் பெற.. இங்கே கிளிக் செய்யவும்.

பாரம்பரிய வேளாண் திட்டம் குறித்த கூடுதல் தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும். 

மேலும் படிக்க...

விவசாயிகளுக்கு ரூ.5000 வரை ஓய்வூதியம் கிடைக்க வழிசெய்யும் அரசு திட்டங்கள்!

லட்சாதிபதி ஆகனுமா? இந்த அஞ்சலகத் திட்டத்தில் சேருங்க!

மாதம் ரூ.42 செலுத்தினால் ஆயுள் வரை ஓய்வூதியம்- அடல் பென்சன் யோஜனா திட்டம்!

English Summary: PKVY scheme Organic farming is promoted through cluster approach and PGs certification. Govt is Offering Rs. 50,000 for Farming Published on: 18 January 2021, 05:53 IST

Like this article?

Hey! I am Daisy Rose Mary. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.