6 வது ஆண்டில் PM-KMY: குறைந்த பிரீமியத்தில் விவசாயிகளுக்கான ஓய்வூதியத் திட்டம்!

Muthukrishnan Murugan
Muthukrishnan Murugan
Pradhan Mantri Kisan Maandhan Yojana

செப்டம்பர் 12, 2019 அன்று தொடங்கப்பட்ட பிரதான் மந்திரி கிசான் மாந்தன் யோஜ்னா (PM-KMY: Pradhan Mantri Kisan Maandhan Yojana) நாடு முழுவதும் நிலம் வைத்திருக்கும் சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு (SMFs- small marginal farmers) சமூகப் பாதுகாப்பை வழங்கி வருகிறது.

இந்த முதியோர் ஓய்வூதிய திட்டம் ஒரு தன்னார்வ மற்றும் பங்களிப்பு ஓய்வூதிய திட்டமாகும். இத்திட்டத்தின் கீழ், தகுதியுள்ள குறு, சிறு விவசாயிகளுக்கு 60 வயதை எட்டிய பிறகு மாதந்தோறும் ரூ.3,000 நிலையான ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. விவசாயிகள் ஓய்வூதிய நிதிக்கு மாதாந்திர பங்களிப்பை வழங்க வேண்டும். அதற்கு இணையான நிதியை மத்திய அரசும் தனது பங்களிப்பாக செலுத்தும் என்பது இத்திட்டத்தின் கூடுதல் அம்சம். இந்நிலையில் திட்டம் தொடர்பான விவரம் பின்வருமாறு-

பங்களிப்பு விவரம்:

இத்திட்டத்தின் கீழ்,  குறு, சிறு விவசாயிகள் ஓய்வூதிய நிதிக்கு மாதாந்திர சந்தா செலுத்தி பதிவு செய்யலாம். 18 முதல் 40 வயதுக்குட்பட்ட விவசாயிகள் தங்களது 60 வயது வரை, மாதத்திற்கு ரூ.55 முதல் ரூ.200 வரை தங்களது பங்களிப்பாக செலுத்த வேண்டும். மத்திய அரசும் விவசாயிகள் செலுத்தும் பணத்திற்கு இணையாக பங்களிக்கும்.

60 வயதை நிரம்பியதும், பதிவு செய்யப்பட்ட விவசாயிகள் மாதந்தோறும் ரூ.3,000 ஓய்வூதியம் பெறுவார்கள். ஆயுள் காப்பீட்டுக் கழகம் (Life Insurance Corporation) இந்த ஓய்வூதிய நிதியை நிர்வகிக்கிறது. மேலும் பயனாளிகள் பதிவு பொது சேவை மையங்கள் (சி.எஸ்.சி) மற்றும் மாநில அரசுகள் மூலம் எளிதாக்கப்படுகிறது.

யாரெல்லாம் இத்திட்டத்தில் இணைய முடியும்?

2 ஹெக்டேர் வரை சாகுபடி செய்யக்கூடிய நிலங்களைக் கொண்ட மற்றும் 2019 ஆகஸ்ட் 1 நிலவரப்படி மாநில/யூனியன் பிரதேச நிலப் பதிவுகளில் பட்டியலிடப்பட்டுள்ள அனைத்து விவசாயிகளும் இத்திட்டத்தின் கீழ் பலன்களைப் பெற தகுதியுடையவர்கள். 2024, ஆகஸ்ட் 6, நிலவரப்படி, மொத்தம் 23.38 லட்சம் விவசாயிகள் இத்திட்டத்தில் இணைந்துள்ளனர்.

இத்திட்டத்தின் கீழ் பீகார் மாநிலத்தில் 3.4 லட்சத்திற்கும் அதிகமான விவசாயிகள் பதிவு செய்து முன்னணியில் உள்ளனர். பீகாரை தொடர்ந்து ஜார்கண்ட் மாநிலத்தில் 2.5 லட்சத்திற்கும் அதிகமான விவசாயிகள் இணைந்துள்ளனர். தமிழ்நாட்டிலுள்ள 1.10 லட்சம் விவசாயிகள் இத்திட்டத்தில் இணைந்துள்ளனர்.

திட்டத்தில் இணைவது எப்படி?

திட்டத்தில் சேர, தகுதியான விவசாயிகள் அருகில் உள்ள பொது சேவை மையத்திற்கு (CSC) செல்ல வேண்டும் அல்லது மாநில அல்லது யூனியன் பிரதேச அரசுகளால் நியமிக்கப்பட்ட நோடல் அதிகாரியை (PM-Kisan) தொடர்பு கொள்ள வேண்டும். www.pmkmy.gov.in இல் உள்ள திட்டத்தின் அதிகாரப்பூர்வ இணைய போர்டல் மூலமாகவும் பதிவு செய்யலாம் . வழங்க வேண்டிய தகவல்கள் விவரம் பின்வருமாறு-

  • விவசாயி / மனைவியின் பெயர் மற்றும் பிறந்த தேதி
  • வங்கி கணக்கு எண்
  • IFSC/ MICR குறியீடு
  • மொபைல் எண்
  • ஆதார் எண்

Read also: தென்னை இலையில் V வெட்டு & வளர்ச்சி பாதிப்பு- காண்டாமிருக வண்டுக்கு தீர்வு என்ன?

குடும்ப ஓய்வூதியம் பெறும் போது சந்தாதாரர் இறந்துவிட்டால், அவரது மனைவி சந்தாதாரர் பெற்ற தொகையில் 50%-க்கு சமமான குடும்ப ஓய்வூதியத்தினை (அதாவது மாதத்திற்கு ரூ.1500) பெறுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

முதுமைக் காலத்தில் விவசாயிகளுக்கு பாதுகாப்பு சூழலை வழங்குவதற்காக தொடங்கப்பட்ட PM-KMY திட்டம் நடைமுறைக்கு வந்து தற்போது ஐந்து ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.

Read more:

உளிக்கலப்பை கொண்டு உழவு- ஏன் அவசியம் தெரியுமா?

உவர்நீர் இறால் வளர்க்க ரூ.4.80 இலட்சம் வரை மானியம்- விண்ணப்பங்கள் வரவேற்பு!

English Summary: PM KMY farmers monthly pension scheme Successfully completed 5 years Published on: 11 September 2024, 02:13 IST

Like this article?

Hey! I am Muthukrishnan Murugan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.