பிரதம மந்திரியின் வேலைவாய்ப்பு உருவாக்கும் (PMEGP) திட்டத்தில் ரூ.10.00 கோடி வரை மானியத்துடன் கூடிய கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் திரு.வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப.,அவர்கள் தகவல்.
பிரதம மந்திரியின் வேலைவாய்ப்பு உருவாக்கும் (PMEGP) திட்டத்தின் கீழ் கிராமப்புற மற்றும் நகர்ப்புற இளைஞர்கள் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட தனியார் வங்கிகளின் மூலமாக கடனுதவி பெற்று புதிதாக உற்பத்தி மற்றும் சேவை சார்ந்த தொழில் தொடங்க ஆர்வமிக்க தொழில் முனைவோரிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இத்திட்டத்தின் கீழ் பயன் பெற விரும்புவோர் 18 வயதிற்கு மேல் இருக்கவேண்டும். சேவைப்பிரிவின் கீழ் ரூ. 5 இலட்சம் வரையிலான திட்ட அளவிற்கும் உற்பத்திப் பிரிவின் கீழ் ரூ. 10 இலட்சம் வரையிலான திட்ட அளவிற்கும் கல்வித் தகுதி எதுவும் தேவையில்லை. இதற்கு அதிகமான மதிப்பிலான தொழில் திட்டங்களுக்கு எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும். சேவைப் பிரிவிற்கு அதிகபட்சமாக ரூ. 10 இலட்சம் வரையிலும் உற்பத்திப் பிரிவிற்கு ரூ. 50 இலட்சம் வரையிலும் அனுமதிக்கப்படுகின்றது. 2023-24 ஆம் நிதி ஆண்டிற்கான குறியீடு 304 நபர்களுக்கு ரூ.992 லட்சம் மானியம் என விருதுநகர் மாவட்ட தொழில் மையத்திற்கு மானிய ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் வழி முறைகளைப் பின்பற்றி வங்கியால் ஒப்புதல் அளிக்கப்பட்ட தொழில் திட்டங்களுக்கு அதிகபட்சமாக நகர்ப்புறத்தில் 25 சதவீத மானியம், கிராமப்புறத்தில் 35 சதவீதம் மானியம் வழங்கப்படுகிறது. சொந்த மூலதனம் பொது பிரிவினருக்கு திட்டமதிப்பீட்டில் 10 சதவீதமும் சிறப்பு பிரிவினருக்கு 5 சதவீதம் ஆகும்.
ஆர்வமுள்ள தொழில் முனைவோர்கள் www.kviconline.gov.in (pmegp e tracking system) என்ற இணையதளத்தில் Agency அலுவலகம் DIC என டிக் செய்து உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
இது தொடர்பாக மேலும் விபரங்களுக்கு பொது மேலாளர், மாவட்ட தொழில் மையம், மாவட்ட ஆட்சியர் வளாகம், விருதுநகர் 89255-34036 என்ற முகவரியில் அணுகி பயனடையுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப., அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்கள்.
வெளியீடு : செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம், விருதுநகர்.
மேலும் படிக்க:
Latest tamil news: Uzhavan App மூலம் பாரம்பரிய இயற்கை விவசாயம் செய்ய விண்ணப்பங்கள் வரவேற்பு
பட்ஜெட் விலையில் ஏதர் எனர்ஜி செட் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் 450s அறிமுகம்
Share your comments