எவ்வித ஆவண உத்தரவாதமும் இன்றி சாலையோர வியாபரிகளுக்கு கடன் வழங்கும் திட்டம் அமோக வரவேற்பைப் பெற்றுள்ளது.
சாலையோர வியாபாரிகளின் பொருளாதார தேவைகளைப் பூர்த்தி செய்வதைக் கருத்தில்கொண்டு அவர்களிடம் இருந்து எவ்வித ஆவண உத்தரவாதமும் பெறாமல், ஆண்டிற்கு ரூ.10 ஆயிரம் உடனடிக் கடன் வழங்கும் திட்டத்தை மத்திய அரசு அண்மையில் அறிமுகப்படுத்தியுள்ளது.
ஆத்மநிர்பார் பாரத் திட்டத்தில் Pradhan Mantri SVANidhi Yojana எந்த புதிய பிரிவின் கீழ் சுமார் 20 லட்சம் கோடி பேரை கவர இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கென நாடு முழுவதும் சுமார் 4 லட்சம் சிஎஸ்சி (Common Service Centers (CSC) ) அமைக்கப்பட்டுள்ளன. இதைத்தவிர ஆன்லைன் மூலமும் ஆத்ம நிர்பார் பாரத் திட்டத்தில் சாலையோர வியாபாரிகள் இணையலாம்.
இவர்களில் 14 லட்சத்து 34 ஆயிரம் பேரின் விண்ணப்பங்களுக்கு Pradhan Mantri SVANidhi Yojana திட்டத்தின் கடன் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல், இதுவரை 7 லட்சத்து 88 ஆயிரம் பேருக்கு கடனும் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் ஒருபகுதியாக, PM SVANidhi mobile app வைத்திருந்தால், எந்தவித ஆவண உத்தரவாதமும் இன்றி உடனடியாக ரூ.10 ஆயிரம் கடனாக வழங்கப்படுகிறது.
எப்படி விண்ணப்பிப்பது? (How to Apply)
கடன் பெறுவதில் சிக்கல் இருந்தால், PM SVANidhi mobile appயை Google Play Storeரில் இருந்து உங்கள் மொபைல் போனுக்கு பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள். இதன் மூலம் எளிதில் கடனைப் பெற முடியும்.
திருப்பி செலுத்துவது (Repayment)
இவ்வாறு வாங்கிய கடனை மாதா மாதம் சிறுதொகை மூலம் ஓராண்டிற்குள் திருப்பிச் செலுத்திவிட வேண்டும். விதிக்கப்பட்ட காலக்கெடுவிற்குள் பணத்தை செலுத்தினால், உங்களுக்கு அரசின் மானியத்துடன் சேர்த்து வட்டி 7 சதவீதமாகக் குறைக்கப்படும். அரசின் மானியம் நேரடியாக வங்கிக்கணக்கிற்கு வந்துசேரும்.
மேலும் படிக்க...
80% அரசு மானியத்தில் அசத்தல் வியாபாரம்- முழு விபரம் உள்ளே!
ஆவின் நிறுவனத்தில் வேலை- ரூ.50,000 வரை ஊதியம்!
அழகுக்கும் கழுதைக்கும் ஆயிரம் சம்மந்தம் - தெரியுமா உங்களுக்கு!
Share your comments