பிரதான் மந்திரி கிஷான் மந்தன் திட்டத்தின் மூலம், 60 வயதைக் கடந்த விவசாயிகளுக்கு ஓய்வூதியமாக மாதம் 3000 ரூபாய் வழங்கப்படுகிறது.
நலத்திட்டங்கள் (Welfare schemes)
விவசாயிகளின் நலனுக்காகப் பல்வேறு நலத்திட்டங்களை மத்திய அரசு நடைமுறைப்படுத்தி வருகிறது.
அந்த வகையில், அண்மையில், மத்திய அரசால் வயது முதிர்ந்த விவசாயிகளின் நலனை பாதுகாக்கவும், நாட்டில் உள்ள சிறு, குறு விவசாயிகளின் சமூக முன்னேற்றத்திற்காகவும் பிரதான் மந்திரி கிஷான் மந்தன் திட்டம் (Pradhan Mantri Kisan Mandhan Yojana) அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது.
மாதாமாதம் ஓய்வூதியம் (Monthly pension)
பிரதான் மந்திரி கிஷான் மந்தன் திட்டத்தின் மூலம், 60 வயதைக் கடந்த விவசாயிகளுக்கு ஓய்வூதியமாக ரூபாய் 3000 வழங்கப்படும்.
ஆண்டுக்கு ரூ.36,000 (Rs 36,000 per year)
மாதம் 3 ஆயிரம் வீதம் ஓர் ஆண்டுக்கு மொத்தம் 36,000 ரூபாய் ஓய்வூதியம் கிடைக்கிறது.
மனைவிக்கும் ஓய்வூதியம் (Spouse pension)
-
ஒருவேளை, பயனாளி 60 வயதைக் கடந்து, உயிரிழந்த நிலையில் அவரது வாழ்க்கைத் துணைக்கு 50 விழுக்காடு ஓய்வூதியத் தொகை வழங்கப்படும்.
-
பயனாளிக்கு வாழ்க்கை துணை இல்லாத சூழலில், வேறு யாரும் இத்திட்டத்தின் மூலம் பயன்பெற இயலாது.
தகுதி (Qualification)
-
இத்திட்டத்தின் மூலம் பயன் பெற 18 முதல் 40 வயதிற்குட்பட்ட விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்.
-
அதோடு, அவர்களின் வருமானம் பதினைந்தாயிரத்திற்கும் குறைவாக இருக்க வேண்டும்.
39 லட்சம் பேர் (39 lakh people)
இதுவரையில், இந்த திட்டத்தில் சுமார் 39 லட்சம் விவசாயிகள் பதிவு செய்துள்ளனர்.
விண்ணப்பிப்பது எப்படி? (How to apply?)
விவசாயிகள், இந்த ஓய்வூதிய திட்டத்தில் பயனடையத்ட்டத்தின் அதிகாரப்பூர்வ இணைய தளமான https://maandhan.in/, இந்த இணைய தளத்தில் பதிவு செய்து கொள்ளலாம்.
மேலும், இ-சேவை மையங்களிலும் பதிவு செய்யலாம். பதிவு செய்த பின், விவசாயிகள் இத்திட்டத்தில் தங்களை இணைத்துக் கொண்ட வயதின் அடிப்படையில், 55 ரூபாய் முதல் 200 ரூபாய் வரை செலுத்த வேண்டும்.
மேலும் படிக்க...
மூத்த குடிமக்களுக்கு ஓர் நற்செய்தி! FD வட்டிச் சலுகை நீட்டிப்பு!
இறந்த விவசாயி பெயரில் டிராக்டர் கடன் - மெகா மோசடி செய்த நிறுவனம்!
10 ரூபாயில் சூப்பர் திட்டம்! அரசு ஊழியர் அல்லாதவர்களும் பென்ஷன் பெற வாய்ப்பு!
Share your comments