வேளாண் இயந்திரமயமாக்கல் (SMAM) திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு அதிகாரம் அளிக்க, இந்திய அரசு, தனிப்பயன் பணியமர்த்தல் மையங்கள், பண்ணை இயந்திர வங்கி, உயர் தொழில்நுட்ப மையங்கள் மற்றும் பல்வேறு விவசாய இயந்திரங்கள் விநியோகம் போன்ற பண்ணை இயந்திரமயமாக்கலின் பல்வேறு நடவடிக்கைகளுக்கு நிதியை வெளியிட்டுள்ளது.
SMAM திட்டத்தின் நோக்கம் (OBJECTIVE OF SMAM PROJECT)
இந்த திட்டத்தின் கீழ், விவசாய இயந்திரமயமாக்கல் நிலம், நீர் ஆற்றல் வளங்கள், மனிதவளம் மற்றும் விதைகள், உரங்கள், பூச்சிக்கொல்லிகள் போன்ற பிற உள்ளீடுகளின் பயன்பாட்டை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது, இது கிடைக்கும் சாகுபடிப் பகுதியின் உற்பத்தித்திறனை அதிகரிக்கவும், கிராமப்புற இளைஞர்களுக்கு விவசாயத்தை மிகவும் இலாபகரமான மற்றும் கவர்ச்சிகரமான தொழிலாக மாற்றவும் உதவிச் செய்கிறது. வேளாண் இயந்திரமயமாக்கல் என்பது விவசாயத் துறையின் நிலையான வளர்ச்சிக்கான முக்கிய இயக்கிகளில் ஒன்றாகும். நிலையான வேளாண் இயந்திரமயமாக்கல் வளர்ச்சிக்கு சமீபத்திய தொழில்நுட்பத்தால் போதுமான அளவு ஆதரிக்கப்படும் பொருத்தமான மற்றும் துல்லியமான விவசாய இயந்திரங்கள் தேவைப்படும்.
எனவே, மத்திய அரசின் வேளாண் இயந்திரமயமாக்கல் துணைத் திட்டத்தின் (SMAM) கீழ் பதிவு தொடங்கியுள்ளது. www.agrimachinery.nic.in என்ற இணையதளத்தில் விவசாயிகள் பதிவு செய்ய தொடங்கலாம். இதற்கு முக்கிய ஆவணங்களாக, ஆதார் அட்டை, வங்கி பாஸ்புக், கையால் எழுதப்பட்ட ரசீது மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் தேவைப்படும். SC/ST பிரிவைச் சேர்ந்தவர்கள் சாதி சான்றிதழ் சமர்பிக்க வேண்டும்.
இத்திட்டத்தின் மூலம் சிறு குறு விவசாயிகள், பெண்கள் மற்றும் பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியின மக்கள் பயனடைவார்கள். அங்கீகரிக்கப்பட்ட விவசாயிகள் சங்கங்கள், அங்கீகரிக்கப்பட்ட சமிதி, விவசாய பணியாளர்கள் போன்றவற்றுக்கு பண்ணை இயந்திர வங்கி அமைக்க அதிகபட்சமாக 40 சதவீதம் மானியம் வழங்கப்படும்.
எப்படி விண்ணப்பிக்க வேண்டும்? (How to apply?)
1. முதலில், அவர்களின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்லவும்: https://agrimachinery.nic.in/.
2. முதல் பக்கத்தில் 5 விருப்பங்களைக் காண்பீர்கள், மேலும் அதில் "Farmer" விருப்பத்தையும் காண்பீர்கள்.
3. அதன் பிறகு, மற்றொரு சாளரம் திறக்கப்பட்டு உங்கள் மாநிலம் மற்றும் உங்கள் ஆதார் எண்ணைக் கேட்கும், அதனை உள்ளிட வேண்டும்.
4. அனைத்து தகவல்களையும் கவனமாக பதிவிடவும், அதன் பின் "சமர்ப்பி" பொத்தானைக் கிளிக் செய்யவும்.
இப்போது, குடியிருப்பு விவரங்களுடன் உங்கள் தனிப்பட்ட தகவலை உள்ளீடு செய்ய வேண்டும்.
மேலும் படிக்க:
MSP: குறுவை பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு அமைச்சரவை ஒப்புதல்
Share your comments