கிராமப்புற மக்களைப் பொருத்தவரை வாழ்வாதாரத்தைப் பெருக்க வீடுதோறும் ஆடு, மாடுகளை வளர்ப்பது வழக்கம். ஆனால் தற்போது அதுதான் சிறந்த முதலீட்டுக்கான தொழிலாகவும் மாறிவிட்டது.
நல்ல லாபம் தரும் தொழில் என்பதால், தங்களுடைய முழுநேரத் தொழிலை விட்டுவிட்டு, நகராசிகள் பலரும் கோழிப்பண்ணை அமைக்கத் துவங்கிவிட்டனர். அதிலும் தற்போது கொரோனா நெருக்கடி காலத்தில், செய்த வேலையை விட்டுவிட்டு, சொந்த ஊர் திரும்பியவராக நீங்கள்? அப்படியானால் இந்தத்திட்டத்தைப் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்.
தேசிய கால்நடைத் திட்டம் (National Livestock Scheme)
சிறிய அளவு முதல் பெரிய அளவு வரை கோழிப்பண்ணை அமைத்து வருமானம் ஈட்ட மத்திய அரசின் தேசிய கால்நடைத் திட்டம் (National Livestock Scheme)உதவுகிறது. இந்தத் திட்டத்தின்படி கோழி வளர்ப்பு முதலீட்டு நிதி வழங்கப்படுகிறது. இதில் வான்கோழி(Duck) வாத்து (Gees), காடை கோழி, கினி கோழி வளர்க்க வறுமைக் கோட்டிற்கு மேல் உள்ளவர்களுக்கு திட்டமதிப்பில் 25 சதவீதம் மானியம் அளிக்கப்படுகிறது.
ரூ.7.5 லட்சம் வரை மானியம் (Subsidy up to Rs. 7.5 lakhs)
அதாவது ரூ.30 லட்சம் திட்டமதிப்பு என்றால், அதில் 25 சதவீதம் அதாவது ரூ.7.5 லட்சம் வரை மானியம் கிடைக்கும். வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் மற்றும் SC மற்றும் ST பிரிவினருக்கு அதிகபட்சம் 33 சதவீதம் அதாவது ரூ.10 லட்சம் வரை மானியம் வழங்கப்படும்.
முட்டைக் கோழி பண்ணை (Egg chicken farm)
கலப்பின முட்டைக்கோழி பண்ணையில் 2 ஆயிரம் முதல் 20 ஆயிரம் கோழிகள் வரை வளர்க்க வறுமைக் கோட்டிற்கு மேல் உள்ளவர்களுக்கு ரூ.20 லட்சம் வரையும், வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் மற்றும் SC/ST பிரிவினருக்கு ரூ.26 லட்சமும் மானியமாக கிடைக்கும்.
கறிக்கோழி பண்ணை (Poultry farm)
-
கலப்பினக் கறிக்கோழி பண்ணை அமைக்க வறுமைக்கோட்டிற்கு மேல் உள்ளவர்களுக்கு ரூ.11 லட்சமும், வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் மற்றும் SC/ST பிரிவினருக்கு ரூ.15 லட்சம் வரையும் மானியம் வழங்கப்படுகிறது.
-
நாட்டுக்கோழி வளர்ப்பு பண்ணை அமைக்க வறுமைக்கோட்டிற்கு மேல் உள்ளவர்களுக்கு ரூ.5 லட்சமும், வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் மற்றும் SC/ST பிரிவினருக்கு ரூ.6.6 லட்சம் வரையும் மானியம் வழங்கப்படும்.
இறைச்சிக்கூடம் (Butchery)
சில்லரை வர்த்தக இறைச்சிக்கூடம் அமைக்க அமைக்க வறுமைக்கோட்டிற்கு மேல் உள்ளவர்களுக்கு ரூ.2.5 லட்சமும், வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் மற்றும் SC/ST பிரிவினருக்கு ரூ.3.3 லட்சம் வரையும் மானியம் வழங்கப்படும்.
நடமாடும் விற்பனைக் கூடம் (Mobile sales hall)
-
நடமாடும் விற்பனைக்கூடம் அமைக்க வறுமைக்கோட்டிற்கு மேல் உள்ளவர்கள் ரூ.2.5 லட்சத்தையும், வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் மற்றும் SC/ST பிரிவினருக்கு ரூ.3.3 லட்சத்தையும் மானியமாகப் பெறமுடியும்.
-
மத்திய அரசு செயல்படுத்திவரும் இந்த திட்டத்தில் விவசாயிகள் பயன்பெறலாம். மேலும் விபரங்களுக்கு அருகில் உள்ள கால்நடை மையங்களை அணுகலாம்.
மேலும் படிக்க...
எந்தெந்த பயிர்களுக்கு திரவ உயிர் உரங்களைப் பயன்படுத்தலாம்? பட்டியல் இதோ!
தமிழகத்தில் விவசாயத்திற்கான இலவச மின்வினியோக நேரம் மாற்றம்!
விவசாயிகளுக்கு விரைவில் கரும்பு நிலுவைத் தொகை -அமைச்சர் எம்.சி.சம்பத் உறுதி!
Share your comments