சாலையோர வியாபாரிகள் ரூ.10,000 உடனடிக் கடன் பெறும் SVANidhi திட்டம்!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
SVANidhi scheme to get Rs 10,000 loan from low interest roadside vendors! How to apply?
Credit: Samayam Tamil

சாலையோர வியாபாரியா நீங்கள்? உங்களுக்கு ஆண்டுக்கு ரூ.10,000 கடன் தரும் SVANidhi திட்டம் பற்றித் தெரியுமா? விண்ணப்பிக்கலாம் வாங்க.

மத்திய அரசின் திட்டம் (Central Government Scheme)

சாலையோர வியாபாரிகளின் பொருளாதார தேவைகளைப் பூர்த்தி செய்வதைக் கருத்தில்கொண்டு அவர்களிடம் இருந்து எவ்வித ஆவண உத்தரவாதமும் பெறாமல், ஆண்டிற்கு ரூ.10 ஆயிரம் உடனடிக் கடன் வழங்கும் திட்டத்தை மத்திய அரசு அண்மையில் அறிமுகப்படுத்தியுள்ளது.

ஆத்மநிர்பார் பாரத் திட்டத்தில் Pradhan Mantri SVANidhi Yojana எந்த புதிய பிரிவின் கீழ் சுமார் 20 லட்சம் கோடி பேரைக் கவர இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதற்கென நாடு முழுவதும் சுமார் 4 லட்சம் சிஎஸ்சி (Common Service Centers (CSC) ) அமைக்கப்பட்டுள்ளன. இதைத்தவிர ஆன்லைன் மூலமும் ஆத்ம நிர்பார் பாரத் திட்டத்தில் சாலையோர வியாபாரிகள் இணையலாம்.

இந்த திட்டத்தின் ஒருபகுதியாக, PM SVANidhi mobile app வைத்திருந்தால், எந்தவித ஆவண உத்தரவாதமும் இன்றி உடனடியாக ரூ.10 ஆயிரம் கடனாக வழங்கப்படுகிறது.

இதுவரை 31 லட்சத்து 64 ஆயிரம் பேர், Pradhan Mantri SVANidhi Yojana திட்டத்தில் கடன் பெற விண்ணப்பித்துள்ளனர். அதேபோல், இதுவரை 16 லட்சத்து 77 ஆயிரம் பேருக்கு கடன் வழங்க ஒப்புதல் பெறப்பட்டு, 12 லட்சத்து 17 ஆயிரம் கடன்தொகையும் பட்டுவாடா செய்யப்பட்டு உள்ளது.

எப்படி விண்ணப்பிப்பது? (How to Apply)

கடன் பெறுவதில் சிக்கல் இருந்தால், PM SVANidhi mobile appயை Google Play Storeரில் இருந்து உங்கள் மொபைல் போனுக்கு பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள். இதன் மூலம் எளிதில் கடனைப் பெற முடியும்.

திருப்பி செலுத்துவது (Repayment)

இவ்வாறு வாங்கிய கடனை மாதா மாதம் சிறுதொகை மூலம் ஓராண்டிற்குள் திருப்பிச் செலுத்திவிட வேண்டும். விதிக்கப்பட்ட காலக்கெடுவிற்குள் பணத்தை செலுத்தினால், உங்களுக்கு அரசின் மானியத்துடன் சேர்த்து வட்டி 7 சதவீதமாகக் குறைக்கப்படும். அரசின் மானியம் நேரடியாக வங்கிக்கணக்கிற்கு வந்துசேரும்.

கடன் பெறுவதில் சிக்கல் (Trouble getting credit)

இந்தத் திட்டத்தின் கீழ், கடன் பெற, வியாபாரிகள் சார்ந்துள்ள நகராட்சி அல்லது கிராமப் பஞ்சாயத்து தலைவர்களிடம் இருந்து, சாலையோர வியாபாரி என்பதற்கான ஒப்புதல் கடிதத்தைப் பெறுவதில் சிக்கல் நீடிக்கிறது. இதன் காரணமாக டெல்லி உள்ளிட்ட சில யூனியன் பிரதேசங்கள் மற்றும் மாநிலங்களில் சாலையோர வியாபாரிகளுக்கு கடன் வழங்குவது தாமதமாகிறது.

மேலும் படிக்க...

மாதம் ரூ.42 செலுத்தினால் ஆயுள் வரை ஓய்வூதியம்- அடல் பென்சன் யோஜனா திட்டம்!

செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் இணையவதற்கு, ரோட்டரி கிளப் இலவச உதவி! பெற்றோர்களுக்கு அழைப்பு!

ஆன்லைனில் டிஜிட்டல் அக்கௌன்ட்! SBI வங்கியின் புதிய திட்டம்!

 

English Summary: SVANidhi scheme to get Rs 10,000 loan from low interest roadside vendors! Published on: 20 January 2021, 09:24 IST

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.