
மருத்துவர்கள் வீடு தேடி வந்து நோயாளிகளுக்கு சிகிச்சை செய்த காலமெல்லாம் மலையேறிவிட்டது. பகுதிக்கு ஒரு மருத்துவமனை என மருத்துவமனைகளும் பெருகிவிட்டன. அதற்கு ஏற்ப நோய்களும் அதிகரித்துவிட்டன.
இருப்பினும் எல்லா நேரங்களிலும் எல்லாராலும் மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெற இயலாது. இதனைக் கருத்தில் கொண்டு, மத்திய அரசு கொண்டுவந்துள்ள திட்டமே eSANJEEVANI.
முதியவர்கள் (The elderly People)
நம் அனைவரது வீடுகளிலும், வயதானத் தாத்தா, பாட்டி, அம்மா, அப்பா இருப்பாங்க.பெரும்பாலும் அவர்கள்Blood_pressure (இரத்தக் கொதிப்பு) மற்றும் Diabetes (நீரழிவு நோய்) னு மாத்திரை சாப்பிட கூடியவர்களா இருப்பார்கள்.
ஏதேனும் உடல்நலக்குறைவு ஏற்பட்டால், உடனடியாக அவங்களை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லமுடியாத சூழ்நிலை இருக்கலாம்.
கொரோனா ஊரடங்கு (Corona curvature)
அதுவும் கொரோனா ஊரடங்கு காலத்துல மருத்துவனைக்கு போனால் நோய் தொற்று ஏற்படும் என்ற அச்சமும் பல பேருக்கு இருக்கும். தலைவலி, உடம்பு வலினு எதுவாக இருந்தாலும் பக்கத்துல இருக்க மருத்துவமனைக்கு போக கூடிய முடியாமல், பலர் வீட்டிலேயே முடங்கி இருக்க நேரிடும்.
மத்திய அரசின் திட்டம் (Federal Government Plan)
இவர்களுக்காக மத்திய அரசு கொண்டுவந்துள்ளதே இந்தத் திட்டம். இணையதள வசதி இருந்தால் போதும். சிறியவர்கள் கூட Google_chrome ல் www.eSanjeevaniopd.in என்று type பண்ணி search பண்ணிணால் போதும். Open ஆகும்.
சிகிச்சை பெற என்ன செய்வது?
-
Patient_Registration னு இருக்கும் அத click பண்ணி உள்ளே போக வேண்டும்.
-
உங்கள் Mobile numberயை type பண்ணிணால் OTP வரும். அதைக் கொண்டு நீங்கள் உள்ளே சென்றால் போதும்.
-
Patient details type பண்ணனும்.
-
அப்புறம் நீங்கள் எந்த district னு போட்டால் போதும்.
-
அவ்ளோதாங்க உங்க வேலை. அங்க Online ல இருக்கும் Doctor க்கு உங்கள் வருகையைக் காமிக்கும்.
-
நீங்க Video_call மூலமாக உங்கள் உடல் பிரச்னையைச் சொல்லி Consultation பண்ணிக்கலாம்.
-
அவங்க ( டாக்டர்) உங்க complaint கேட்டு Tablets ( மருந்துகளை) உங்களுக்கு Online மூலயமா message ல tablets ah a அனுப்பிடுவாங்க.
-
அத நீங்க Medical_shopற்கு கொண்டு சென்று, ( pharmacy) காட்டி மருந்து வாங்கிக்கொள்ளலாம்.
-
இது முழுக்க முழுக்கக் கட்டணமில்லா சேவை
-
இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், "போலி_டாக்டர்கள்" கிட்ட ஏமாற வேண்டிய அவசியம் வராது.
-
வீட்ல இருந்து Food Order பண்ற மாதிரி வீட்ல இருந்தே மருத்துவரையும் பார்க்க முடியும்.
-
இந்த website காலை 10 மணி முதல் மதியம் 3 மணி வரை செயல்படும்.
ஞாயிற்றுக்கிழமைகள்கூட (Even on Sundays)
Sunday கூட நீங்கள் Consultation பண்ணலாம். திருப்பூர் மாவட்டம் தமிழ்நாட்டில் இந்த E consultation யில் முதல் இடத்தை பிடித்தது குறிப்பிடத்தக்கது. கொரோனா காலத்தில் குழந்தைகளுக்கும், பெரியவர்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
மேலும் படிக்க...
PM-Kisan திட்டத்தின் கீழ் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கும் ரூ.2000! - மத்திய அரசு!
பதநீரைக் குளிர்பானமாக மாற்ற புதிய திட்டம்
PAN card வைத்திருப்பவர்கள் இதனை உடனே செய்யுங்கள்
Share your comments