தமிழக விவசாயிகள், 38 லட்சம் பேருக்கு, இந்த ஆண்டின் மூன்றாவது தவணையாக, பிரதமரின் விவசாய உதவித்தொகை, விரைவில் வழங்கப்பட உள்ளது. நாடு முழுதும் உள்ள விவசாயிகளுக்கு, பிரதமர் கிசான் சம்மான் நிதி யோஜனா திட்டத்தின் (PM kisan samman nidhi yojana) கீழ், ஆண்டுதோறும், 6,000 ரூபாய் வழங்கப்படுகிறது.
பிரதமர் கிசான் சம்மான் நிதி யோஜனா திட்டம்:
பிரதமர் கிசான் சம்மான் நிதி யோஜனா திட்டத்தில் 2,000 ரூபாய் வீதம் மூன்று தவணைகளாக (3 Installment) வழங்கப்படுகிறது. தமிழகத்தில், இத்திட்டத்தின் கீழ், 44 லட்சம் பேர் பயனாளிகளாக சேர்க்கப்பட்டனர். இதில், விவசாயிகள் அல்லாதோர் பலர் இடம் பெற்றுள்ளதாக சர்ச்சை எழுந்தது. இது தொடர்பாக, CBCID போலீசார் விசாரணை நடத்தினர். விவசாயிகள் அல்லாதோரின் வங்கி கணக்குகளில் செலுத்தப்பட்ட பணம் பறிமுதல் செய்யப்பட்டது. பயனாளிகள் பட்டியலை சரிபார்த்த வேளாண் துறையினர், விவசாயிகள் அல்லாத ஆறு லட்சம் பேரை பட்டியலில் இருந்து நீக்கினர். மீதமுள்ள, 38 லட்சம் பயனாளிகளின் பட்டியல், மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
700 கோடி வரவு:
நாடு முழுதும் உள்ள விவசாயிகளுக்கு, இந்த ஆண்டின் மூன்றாவது தவணை நிதியை விடுவிக்கும் பணியை, மத்திய அரசு தற்போது துவங்கியுள்ளது. அதன்படி, தமிழக விவசாயிகளின் வங்கி கணக்குகளில் (Bank Account) விரைவில், 700 கோடி ரூபாய்க்கு மேல் வரவு (Credit) வைக்கப்பட உள்ளது. இதற்கான பணிகளில், வேளாண் துறையினர் கவனம் செலுத்தி வருகின்றனர்.
இரு புயல்கள் அடுத்தடுத்து தமிழகத்தை தாக்கிய நிலையில், பயிர்கள் மழைநீரில் மூழ்கியதால் விவசாயிகள் கவலையில் உள்ளனர். இந்நிலையில் மத்திய அரசின் இந்த உதவித்தொகை விரைவில் கிடைத்தால், விவசாயிகளுக்கு பயனுள்ளதாக அமையும்.
Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்
மேலும் படிக்க
நாடு முழுவதும் விவசாயிகள் சார்பில் பாரத் பந்த்! தமிழகத்தில் 1 இலட்சம் போலீசார் குவிப்பு!
பெண்களுக்கு வழங்கும் ஸ்கூட்டருக்கு மானிய இலக்கு குறைப்பு!
Share your comments