கொரோனா நெருக்கடி காலத்தில் வேலையிழந்து, தற்போது புதிய வேலையில் சேர்ந்தவர்கள் பயனடையும் வகையில், Atmanirbhar Bharat Rozgar Yojana திட்டத்தின் கீழ் தொழிலாளர் வைப்புநிதி சலுகையை மத்திய அரசு அறிவித்துள்ளது.
கொரோனா நெருக்கடியால், பலவீனமடைந்த இந்தியப் பொருளாதாரத்தை மீட்டெடுக்க மத்திய அரசு பல்வேறு சலுகைகளை அறிவித்து வருகிறது. இதன் ஒருபகுதியாக, ஆத்ம நிர்பார் பாரத் ரோஸர் யோஜனாத் திட்டத்தில் ரூ.2.65 லட்சம் கோடி மதிப்பிலான பொருளாதார மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.
இதன்படி கொரோனா நெருக்கடி காலத்தில் வேலையிழந்து, தற்போது புதிய வேலையில் சேர்ந்தவர்களுக்கு, அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு PF எனப்படும் மாதாந்திர தொழிலாளர் வைப்புத்தொகையை மத்திய அரசே செலுத்தும்.
ஆத்மநிர்பார் பாரத் ரோஜர் யோஜனா திட்டம்
மாதம் 15 ஆயிரத்திற்கு குறைவான ஊதியத்திற்கு, புதிதாக வேலையில் சேரும் நபருக்கு PF தொகையைச் செலுத்துவதில் சலுகை வழங்க வேண்டும் என்பதே, இந்த
Atmanirbhar Bharat Rozgar Yojana திட்டத்தின்படி இலக்கு.
சலுகையைப் பெறத் தகுதி (Qualify)
-
இந்த சலுகையைப் பெற வேண்டுமானால், நீங்கள் 2020ம் ஆண்டு மார்ச் 1ம் தேதி முதல் செப்டம்பர் 30ம் தேதிக்குள் வேலையை இழந்திருக்க வேண்டும் அல்லது வேலையை ராஜினாமா செய்தவராக இருக்க வேண்டும்.
-
அதுமட்டுமல்லாமல், இந்த அக்டோபர் 1 அல்லது அதற்கு பிறகு PF வசதி கொண்ட நிறுவனத்தில் புதிதாக வேலைக்கு சேர்ந்திருக்க வேண்டும்.
சலுகை (Offer)
இவ்விரு தகுதிகளையும் பூர்த்தி செய்தால், உங்கள் பெயரில் மாதத்திற்கு செலுத்த வேண்டிய தொழிலாளர் வைப்பு நிதியை, மத்திய அரசே செலுத்தும். ஓரிரு மாதங்களுக்கு மட்டுமல்ல, அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு செலுத்திவிடும்.
இதனால் அந்த தொழிலாளிக்கு தனது அடிப்படை சம்பளத்தின் 12 சதவீதத் தொகைப் பிடித்தம் இல்லாமல் கூடுதலாகக் கிடைக்க வாய்ப்பு உருவாகியுள்ளது.
கம்பெனியின் தகுதி
-
இந்தத்திட்டத்தின் கீழ் பயனடைய வேண்டுமானால் நீங்கள் புதிதாக வேலைக்கு சேர்ந்துள்ள நிறுவனம் பின்வரும் தகுதிகளைப் பெற்றிருக்க வேண்டியதும் அவசியம்.
-
PF வசதியுடன் 50க்கும் குறைவான தொழிலாளர்களைக் கொண்ட நிறுவனமாக இருந்தால், குறைந்த பட்சம் புதிதாக 2 தொழிலாளர்களை சேர்த்திருக்கலாம்.
-
50 க்கும் அதிகமான தொழிலாளர்களுடன் செயல்படும் நிறுவனமாக இருப்பின், குறைந்த பட்சம் புதிதாக 5 தொழிலாளர்களையாவது பணியில் அமர்த்தியிருக்க வேண்டியது அவசியமாகிறது.
-
Atmanirbhar Bharat Rozgar Yojana திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு EPFO வில் பதிவு செய்யப்பட்ட நிறுவனமாகவும் இருத்தல் வேண்டும்.
காலக்கெடு
ஆத்மநர்பார் பாரத் ரோஸர் யோஜனா திட்டம் அடுத்த ஆண்டு அதாவது 2021ம் ஆண்டு ஜூன் மாதம் வரை செயல்பாட்டில் இருக்கும். ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்களைக் கொண்ட நிறுவனமாக இருப்பின், இந்த புதிய தொழிலாளர்களின் மாதாந்திர தொழிலாளர் வைப்புத் தொகையை, அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு மத்திய அரசே மானியமாகக் கொடுத்துவிடும்.EPFO கணக்கில் நேரடியாகச் செலுத்தப்படும். .
மேலும் படிக்க....
விவசாயிகளுக்கு அரசு உத்தரவாதத்துடன் வங்கிக்கடன் - அசத்தல் முயற்சி!
PMEGP : ஆட்டோ வாங்க ரூ.5 லட்சம் வரை கடன்- மத்திய அரசு வழங்குகிறது!
Share your comments