தமிழகத்தில் உள்ள சட்டக் கல்லூரிகளில் (Law College) இருந்து படித்து விட்டு ஆண்டுதோறும் ஏராளமான இளம் வழக்கறிஞர்கள் வெளியே வருகின்றனர். இவர்கள் தேசிய அளவிலான வழக்கறிஞர்கள் குழுமத் தேர்வு (Board of Attorneys) எழுத வேண்டும். இதில் தேர்ச்சி பெற்றால் தான் பார் கவுன்சிலில் நிரந்தரப் பதிவுச் சான்றிதழ் பெற முடியும். இதனைத் தொடர்ந்து இளநிலை வழக்கறிஞர்களாக (undergraduate lawyers) யாராவது ஒரு மூத்த வழக்கறிஞரிடம் இரண்டு அல்லது மூன்று ஆண்டுகள் பயிற்சி (Training) பெற வேண்டும்.
ரூ. 3000 உதவித்தொகை:
இளம் வழக்கறிஞர்கள் தங்கள் பணியை தொடங்குவதற்கு நான்கு ஆண்டுகள் வரை ஆகிறது. அதுவும் ஏழ்மை நிலையிலுள்ள குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்களின் நிலை சற்று சிரமமானது. ஏனெனில் மிகவும் வறுமையான நிலையில் தங்களை வழக்கறிஞர்களாக நிலைநிறுத்திக் கொள்ள முடியாமல் உள்ளனர். இவர்களுக்கு உதவும் வகையில் தமிழக அரசு பல்வேறு உதவிகளைச் செய்து வருகிறது. அந்த வகையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி (TN CM Edappadi Palanisamy) முக்கிய உத்தரவு ஒன்றை இன்று பிறப்பித்துள்ளார். அதாவது, இளம் வழக்கறிஞர்களுக்கு இரண்டு ஆண்டு காலத்திற்கு மாதம் 3,000 ரூபாய் உதவித்தொகை (Scholarship) வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்துள்ளார்.
வயது வரம்பு:
இதுதொடர்பான நிகழ்ச்சி தலைமைச் செயலகத்தில் இன்று காலை நடைபெற்றது. அப்போது அரசு சட்டக் கல்லூரிகளில் (Government Law College), படித்த 30 வயதுக்குள் இருக்கும் வழக்கறிஞர்களுக்கு மட்டும் நிதியுதவி அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்
மேலும் படிக்க...
சிறு வியாபாரிகளுக்கு கடன் உதவி வழங்கும் திட்டம்! தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி!
கடன் தவணை மீதான கூட்டுவட்டியாக வசூலித்த தொகையை திருப்பித் தர வங்கிகளுக்கு ஆர்.பி.ஐ. உத்தரவு!
Share your comments