சென்னை: TAMCO மூலம் சிறுபான்மையினருக்கு ரூ.20,000 லட்சம் கடன் உதவி

Deiva Bindhiya
Deiva Bindhiya
சென்னை: TAMCO மூலம் சிறுபான்மையினருக்கு ரூ.20,000 லட்சம் கடன் உதவி
CHENNAI: Loan schemes implemented by Tamil Nadu Minority Economic Development Corporation TAMCO

சென்னை: TAMCO தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் தனிநபர் கடன் திட்டம், சுய உதவி குழுக்களுக்கான சிறு தொழில் கடன் திட்டம், கல்வி கடன் திட்டம், கைவினை கலைஞர்களுக்கு கடன் திட்டம் ஆகியவற்றின் கீழ் கடன்கள் வழங்கப்படுகிறது.

டாம்கோ மூலம் செயல்படுத்தப்படும் கடனுதவித் திட்டம் 1 ன் கீழ் பயன்பெற குடும்ப ஆண்டு வருமானம் ரூ.1,20,000/- க்கு மிகாமல் இருக்க வேண்டும். திட்டம் 2 ன் கீழ் பயன்பெற குடும்ப ஆண்டு வருமானம் ரூ.8,00,000/- க்கு மிகாமல் இருக்க வேண்டும்.

திட்டம் 1ன் கீழ் தனிநபர் கடன் ஆண்டிற்கு 6% வட்டி விகிதத்திலும் அதிக பட்ச கடனாக ரூ.20,00,000 மும் திட்டம் 2ன் கீழ் ஆண்களுக்கு 8% பெண்களுக்கு 6% வட்டி விகிதத்திலும் அதிக பட்ச கடனாக ரூ.30,00,000/- வரை கடன் வழங்கப்படுகிறது. கைவினை கலைஞர்களுக்கு ஆண்களுக்கு 5% பெண்களுக்கு 4% வட்டி விகிதத்தில் அதிக பட்ச கடனாக ரூ.10,00,000 /- வரை கடன் வழங்கப்படுகிறது.

சுய உதவிக்குழுக்கடன் நபர் ஒருவருக்கு 1,00,000/- ஆண்டிற்கு 7% வட்டி விகிதத்தில் கடன் வழங்கப்படுகிறது. திட்டம் 2-ன் கீழ ஆண்களுக்கு 8% பெண்களுக்கு 6% வட்டி விகிதத்திலும் நபர் ஒருவருக்கு ரூ.1,50,000/- வரை கடன் வழங்கப்படுகிறது.மேலும்,

விவசாயிக்கு குறைந்த வட்டியில் கடன் உதவி| கொள்முதல் மையங்களுக்கு கோரிக்கை| மாட்டுச் சாணத்தால் Bio-gas

மேலும் சிறுபான்மையின மாணவ/மாணவிகள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் இளங்கலை/முதுகலை தொழிற்கல்வி/தொழில்நுட்பக் கல்வி பயில்பவர்களுக்கு அதிகபட்சமாக திட்டம் 1-ன் கீழ் ரூ.20,00,000/- வரையில் 3% வட்டி விகிதத்திலும், திட்டம் 2-ன் கீழ் மாணவர்களுக்கு 8% மாணவியர்களுக்கு 5% வட்டி விகிதத்திலும் ரூ.30,00,000/- வரையிலான கல்வி கடனுதவி வழங்கப்படுகிறது.

கடன் பெற தேவையான ஆவணங்கள்

  • கடன் மனுக்கள்-உடன்,
  • சார்ந்துள்ள மதத்திற்கான சான்று,
  • ஆதார் அட்டை,
  • வருமான சான்று,
  • உணவு பங்கீடு அட்டை அல்லது இருப்பிடச் சான்று,
  • கடன் பெறும் தொழில் குறித்த விவரம்/திட்ட அறிக்கை,
  • ஓட்டுநர் உரிமம் (போக்குவரத்து வாகனங்கள் கடன் பெறுவதற்காக இருந்தால் மட்டும்)
  • கூட்டுறவு வங்கி கோரும் இதர ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
  • கல்விக் கடனுக்கு விண்ணப்பிக்கும்போது பள்ளி மாற்று சான்றிதழ்,
  • உண்மைச் சான்றிதழ் (Bonafide Certificate),
  • கல்விக் கட்டணங்கள் செலுத்திய இரசீது/செலான் (Original) மற்றும் மதிப்பெண் சான்றிதழ் ஆகிய ஆவணங்களின் ஒளிப்பச நகல்களையும் சமர்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க :

சென்னை மாவட்டத்தில் வசிக்கும் கிறித்துவர், இஸ்லாமியர், சீக்கியர், புத்த, பார்சி, சமணர் மற்றும் ஜெயின் ஆகிய சிறுபான்மையினர்கள் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இயங்கும் மாவட்ட சிறுபான்மையினர் நல அலுவலகம் மற்றும் அனைத்து கூட்டுறவு வங்கிக் கிளைகளிலும் கடன் விண்ணப்பங்களை பெற்று பூர்த்தி செய்த விண்ணப்பங்களை தங்களுக்கு அருகாமையில் உள்ள கூட்டுறவு வங்கி கிளைகளில் ஒப்படைத்து பயன்பெறுமாறு சென்னை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி சு.அமிர்தஜோதி அவர்கள் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க:

IGNOU - தினை மற்றும் தொழில் முனைவோர் என்ற தலைப்பில் வெபினார் ஏற்பாடு

2022-23: சம்பா நெல் தரிசில் பயறு சாகுபடி மேற்கொள்ள acre-க்கு ரூ.400/- மானியம்

English Summary: CHENNAI: Loan schemes implemented by Tamil Nadu Minority Economic Development Corporation TAMCO Published on: 30 January 2023, 11:24 IST

Like this article?

Hey! I am Deiva Bindhiya. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.